SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

Urban Tree

ஈசூன் ஸ்ரீ மகா மாரியம்மன் ஆலயத்தில் ஆஞ்சநேயர் புதிய உற்சவர் கும்பாபிஷேகம்

2017-07-07@ 11:56:20

சிங்கப்பூர்: சிங்கப்பூர் ஈசூன் ஸ்ரீ மகா மாரியம்மன் ஆலயத்தில் ஆஞ்சநேய சுவாமி புதிய உற்சவர் கும்பாபிஷேகம் 3 நாட்கள் கோலாகலமாக நடைபெற்றது. கடந்த 4ம் தேதி செவ்வாய்கிழமை வைகறையில் ஆஞ்சநேயர் ஜலாதிவாசம் கொண்டார். 5ம் தேதி காலை 9 மணிக்கு ஆகம முறைப்படி முதல் அங்கமாக மகா கணபதி ஹோமம் நடைபெற்றது. மேலும் 10 முதல் 11 மணி வரை சயனாதிவாசம், பழாதிவாசம், புஷ்பாதிவாசத்தில் ஸ்ரீ ஆஞ்சநேயப் பிரபு திளைத்தார். மாலை 6 மணி முதல் 8 மணி வரை காப்புக் கட்டுதல் முதல் காலம் நிகழ்ச்சி நடைபெற்றது. 6ம் தேதி வியாழனன்று இரண்டாம் கால யாகம் பூர்த்தியடைந்து புதிய விக்ரகம் கண் திறப்பு நிகழ்ச்சி நடைபெற்றது. பின்னர் பிரதிஷ்டா கும்பாபிஷேகம் கோலாகலமாக நடைபெற்று மகா தீபாராதனை காட்டப்பட்டது. இதனையடுத்து சர்வ அலங்கார நாயகராக ஆஞ்சநேயர் ஆலயம் வலம் வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார். விழாவில் கலந்து கொண்ட பக்தர்கள் அனைவருக்கும் பிரசாதம் வழங்கப்பட்டது.

தமிழ் மேட்ரிமோனி.காம் - தமிழர்களின் திருமண இணையத்தளம் - பதிவு இலவசம்!

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • muharamfest

    நாடு முழுவதும் இஸ்லாமியர்களின் மொஹரம் பண்டிகை இன்று கொண்டாடப்பட்டது

  • nasaevanaktrump

    அமெரிக்காவில் உள்ள நாசாவின் ஜான்சன் விண்வெளி ஆய்வு மையத்தை பார்வையிட்ட இவாங்கா டிரம்ப்

  • florence&trumph

    பிளோரென்ஸ் புயலால் பாதிக்கப்பட்டவர்களை நேரில் சந்தித்து ஆறுதல் கூறிய அமெரிக்க அதிபர் டிரம்ப்

  • greenlandicemelt

    கிரீன்லாந்தில் வெப்பமயமாதலால் உருகும் பனிப்பாறைகள் : கடல் நீர்மட்டம் உயரும் அபாயம்

  • thirupathilast

    திருப்பதி ஏழுமலையான் கோவில் பிரம்மோற்சவ திருவிழா : சக்கரத்தாழ்வார் தீர்த்தவாரியுடன் நிறைவு

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்