SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

Urban Tree

அமெரிக்கத் தமிழர் முன்னோடி விருது 2017 - அறிவிப்பு

2017-06-27@ 12:21:38

வட அமெரிக்கா: கடந்த 2014 முதல் வட அமெரிக்கத் தமிழ்ச் சங்கப் பேரவையின் சார்பாக பேரவையின் தமிழ் விழாவின் பொழுது 'அமெரிக்கத் தமிழர் முன்னோடி விருது' அறிவிக்கப்பட்டு விழா மேடையில் முன்னோடிகளுக்கு விருது வழங்கும் நிகழ்வு சிறப்புடன் நடைபெற்று வருகின்றது. வட அமெரிக்காவில் வாழும் தமிழர்களில் கலை, அறிவியல், அரசியல், ஊடகம், கல்வி, வணிகம் உள்ளிட்ட பல்வேறு துறைகளில் துறைசார் வல்லுநர்களாகவும், சாதனையாளராகவும் விளங்கி தமிழ்ச் சமூகத்திற்கு பெருமை சேர்த்துக் கொண்டிருக்கும் தமிழர்களை பாராட்டி இந்த முன்னோடி விருது வழங்கப்படுகின்றது.

விருதாளர்களுக்கு பேரவையின் பாராட்டுகளை அறிவித்து சிறப்பு செய்வதுடன், வட அமெரிக்காவில் வாழும் தமிழர்களுக்கு வழிகாட்டிகளை அடையாளப்படுத்தவும் துறைசார் வல்லுநர்களாக இயங்கிவரும் தமிழர்களிடையே முறையான ஒரு தொடர்பு வட்டத்தை உருவாக்குவதும் தமிழ் இளைஞர்கள் தங்களை சாதனையாளர்களாக வளர்த்துக் கொள்ள ஊக்குவிக்கவும் இவ்விருது வழங்கப்பட்டு வருகின்றது.
2014 ஆம் ஆண்டு மிசோரி, 2015 கலிபோர்னியா, 2016 நியூ செர்சியில் நடைபெற்ற தமிழ் விழாக்களில் பல சாதனையாளர்களுக்கு இவ்விருது வழங்கப்பட்டுள்ளது. இந்த ஆண்டு எதிர்வரும் 1, 2 சூலை 2017 மினசோட்டா தமிழ்ச் சங்கத்தின் சார்பாக மினியாபோலிசில் நடைபெற உள்ள பேரவையின் 30-ஆம் ஆண்டு தமிழ் விழா - 2017 நிகழ்வில் பின் வரும் அமெரிக்கா வாழ் முன்னோடித் தமிழர்களுக்கு 'அமெரிக்கத் தமிழர் முன்னோடி விருதை' வழங்குவதில் வட அமெரிக்கத் தமிழ்ச் சங்கப் பேரவை பெருமை கொள்கின்றது.

அரசியல் துறையில் சிறந்து விளங்கும் திரு. இராசா கிருசுணமூர்த்தி, இலினாயி மாநில கீழவை உறுப்பினர் (சனநாயகக் கட்சி) https://fetnaconvention.org/guests/raja-krishnamoorthi/

இசைத்துறையில் சிறந்து விளங்கும் திரு. கிளாரன்சு ஜெய், இசையமைப்பாளர் https://fetnaconvention.org/guests/clarence-jey/

ஊடகத்துறையில் சிறந்து விளங்கும் திரு. பழனி குமணன், தி வால் சுட்ரிட் செர்னல் https://fetnaconvention.org/guests/palani-kumanan/

தமிழ் மேட்ரிமோனி.காம் - தமிழர்களின் திருமண இணையத்தளம் - பதிவு இலவசம்!

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • 19-09-2018

    19-09-2018 இன்றைய சிறப்பு படங்கள்

  • modi68bday

    வாரணாசியில் பள்ளி மாணவர்களுடன் தனது 68வது பிறந்தநாளை கொண்டாடிய பிரதமர் மோடி

  • losangeleswaterlight

    லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் கொண்டாடப்பட்ட நீர் விளக்கு விழா: ஏராளமானோர் பங்கேற்பு

  • vinayagarsilai

    சென்னையில் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் விநாயகர் சிலைகள் கடலில் கரைப்பு

  • mankutstromchina

    தெற்கு சீனாவில் பேரழிவை ஏற்படுத்திய மங்குட் புயல் : தீவிரப்படுத்தப்பட்டுள்ள நிவாரண பணிகள்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்