SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

பாங்காக்கில் நடைபெற்ற உணவளிக்கும் உழவருக்கு கைகொடுப்போம் நிகழ்ச்சி

2017-06-21@ 09:46:17

பாங்காக்: உணவளிக்கும் உழவரைக் காப்பதற்குத் துணை புரிவது நம் ஒவ்வொருவரின் கடமை...உழவர் நலம் காக்கவும், அதே சமயம் நம் உடல் நலனைப் பேணிக் காப்பது பற்றியும், தாய்லாந்து தலைநகர் பாங்காக்கில், அங்கு வசிக்கும் தமிழ் மக்கள் சார்பாக, ஒரு சிறப்புக் கருத்தரங்கம் பாங்காக் இந்தியன் தாய் வணிக அரங்கில் நடந்தேறியது. அதில், உழவர் நலம் காக்கும் திட்டங்கள் குறித்தும், வெளிநாட்டு வாழ் தமிழர்கள் அதற்கு எவ்வாறு துணை புரிவது என்பது பற்றியும் விரிவாக விளக்கப்பட்டது. தினை, சோளம், கம்பு, சாமை, வரகு, குதிரைவாலி போன்ற சிறுதானியங்கள் சிறிதளவு தண்ணீரைக் கொண்டே நன்கு வளரும் திறன் கொண்டவை. மேலும் மிகச் சிறந்த ஊட்டச் சத்துக்கள் நிறைந்தவை. சிறுதானியங்களை நேரடியாக விவசாயிகளிடமிருந்து கொள்முதல் செய்வதன் மூலம், நம் நலவாழ்வும், அவர்களின் வாழ்க்கைத் தரமும் ஒருசேர மேம்படும் என்ற கருத்தினை ஆணித்தரமாய் சொல்லப்பட்டது.
 
மேலும், இந்தக் கருத்தரங்கில், சிறப்பு விருந்தினர்களாக சித்த மருத்துவர் திரு சிவராமன் அவர்களும், சிறுதானிய சமையற்கலை வல்லுநர், திரு 'நல்லசோறு' ராஜமுருகன் அவர்களும் கலந்து கொண்டு சிறப்பித்தனர். மருத்துவர் சிவராமனின் “சிறுதானிய நல்லுணவும் நோயற்ற
நல்வாழ்வும்!” என்ற தலைப்பில் வழங்கப்பட்ட உரை வந்திருந்தோரை வெகுவாகக் கவர்ந்தது. நம் உடல் நலம் காப்பதின் இன்றியமையாமையையும் அதே சமயம், உழவரின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்துவது பற்றியும் உணர்ச்சி பூர்வமாகவும், அறிவியல் சான்றுகளுடனும் இருந்தது அந்த சிறப்புரை.

அடுத்ததாக, 'நல்லசோறு' திரு ராஜமுருகன், எளிமையான முறையில் சிறுதானியங்களைக் கொண்டு சுவையான உணவு வகைகளை சமைப்பது எப்படி என்ற செயல் விளக்கத்துடன் கூடிய சிறப்புரை ஆற்றினார். சிறுதானியத்தில் இவ்வளவு சுவையான உணவு வகைகள் செய்ய இயலுமா என வந்திருந்தோரை வியப்பில் ஆழ்த்தியது அவர் உரை.
 
பாங்காக் வாழ் தமிழ் சிறார்களின், இன்றைய உழவர் நிலைக் குறித்த நாடகம், விழாவின் முத்தாய்ப்பாக அமைந்திருந்தது என்றால் மிகையாகாது. வெகு அழகான தமிழ் உச்சரிப்புடன் குழந்தைகள் வழங்கிய சிறப்பு நாடகத்தை, அனைவரும் உணர்ச்சிப் பெருக்குடன் கண்டுகளித்தனர். நாடகத்தின் இறுதியில், உழவரையும், நம் தாய் மண்ணையும் காப்போம் என அனைவரும் உறுதிமொழி எடுத்தனர். விழாவில், சிறுதானிய உணவு வகைகளும் வந்திருந்தோருக்கு வழங்கப்பட்டது. ஆறரை மணி நேரம் நடந்த விழா, அனைவரையும், கடைசி வரை அனைவரையும் காந்தம் போல இருக்கையிலிருந்து எழ விடாமல் அமர்த்தியிருந்தது என்றால் அது மிகையன்று. 

வரன் தேட தமிழ் மேட்ரிமோனி, இன்றே பதிவு - பதிவு இலவசம்!

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • Dinakaran_Education_Expo

    சென்னையில் தினகரன் நாளிதழின் கல்விக் கண்காட்சி கோலாகலமாக தொடங்கியது

  • mald123

    உலகிலேயே முதல்முறையாக கடலுக்கு அடியில் சொகுசுவிடுதி... மாலத்தீவில் நவம்பர் மாதம் திறப்பு!

  • Marijuana420Festival

    போதை பொருளான கஞ்சாவை, சட்டபூர்வமாக உபயோகிக்கும் 420 திருவிழா: உலகம் முழுவதும் கொண்டாட்டம்

  • milkcenterchennai

    சென்னையில் 24 மணி நேர பால் விற்பனை மையம் : அமைச்சர் ராஜேந்திர பாலாஜி தொடங்கி வைத்தார்

  • 21-04-2018

    21-04-2018 இன்றைய சிறப்பு படங்கள்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்