SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

துபாயில் நூற்றுக்கணக்கான தொழிலாளர்களுக்கு இப்தார் ஏற்பாடு செய்து சேவை செய்த தமிழர் நிறுவனம்

2017-06-12@ 09:36:40

துபாய்: துபாயில் தனியார் நிறுவன தொழிலாளர் முகாமில் உள்ள ரமலான் மாதம் நோன்பிருந்த‌ தொழிலாளர்களுக்கு எஸ்விகே ஈவென்ட்ஸ்  நிறுவனத்தினர் இஃப்தார் ஏற்பாடு செய்தது மத நல்லிணக்கத்திற்கு எடுத்துகாட்டாக விளங்கியது. ரமலான் மாதத்தில் நோன்பு இருக்கும் இஸ்லாமியர்கள் அதி காலை முதல் மாலை வரை நோன்பிருந்து குறிப்பிட்ட நேரத்தில் நோன்பை நிறைவு செய்யும் நிகழ்வு  இஃப்தார் எனப்படுகிறது. துபை அல் நஜ்மா அல் பரீதா நிறுவன தொழிலாளர் முகாமில் நூற்றுக்கணக்கான் தொழிலாளர்களுக்கு எஸ் விகே ஈவெண்ட்ஸ் சார்பில் இஃப்தார்  நிகழ்ச்சி நடைபெற்றது.
இப்தார் விருந்தில் ஏற்பாட்டாளர்கள் தொழிலாளர்களுடன் இஃப்தாரில் கலந்து கொண்டு, தங்களது மனமகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.
 
தொழிலாளர்களுடன் இஃப்தார் விருந்து மனித நேயத்தையும், சகோதரத்துவத்தையும், குறிப்பாக நலிந்தோரின் பசியை வலியோரும் உணரச் செய்யும் புனிதமிகு ரமலான் மாதத்தில், நோன்பு திறக்கும் இஃப்தார் நிகழ்ச்சியில் தொழிலாளர்களுடன் ஒன்றாக அமர்ந்து பங்கேற்கும் வாய்ப்பு வழங்கியதற்காக  அல் நஜ்மா அல் பரீதா  நிறுவனத்திற்கு  உணவு ஏற்பாடுகள் செய்து தந்த சிட்டிசன் ரெஸ்டாரண்ட் ஆகியவற்றுக்கு எஸ்விகே ஈவேண்ட்ஸ் வசந்த்குமார் நன்றி தெரிவித்துக் கொண்டனர்.

வரன் தேட தமிழ் மேட்ரிமோனி, இன்றே பதிவு செய்யுங்கள் - பதிவு இலவசம்!

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • meenasunthar

    மதுரை சித்திரை திருவிழா : மீனாட்சி - சுந்தரேஸ்வரர் திருக்கல்யாணம் கோலாகலம்

  • tirupathi_veedhulaa

    திருப்பதி ஏழுமலையான் கோயிலில் பத்மாவதி பரிநய உற்சவத்தின் படங்கள்

  • TransformerRobotJapan

    மடங்கினால் கார் ஆக மாறும் டிரான்ஸ்ஃபார்மர் ரோபோவை வடிவமைத்து ஜப்பான் பொறியாளர்கள் அசத்தல்

  • RapistSpainProtest

    ஸ்பெயினில் பாலியல் வன்கொடுமை குற்றவாளிகளுக்கு கடுமையான தண்டனை வழங்க கோரி மாபெரும் போராட்டம்

  • WisconsinRefinery

    விஸ்கொன்சின் மாகாணத்தில் உள்ள எண்ணெய் சுத்திகரிப்பு ஆலையில் வெடி விபத்து: 11 பேர் படுகாயம்!

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்