SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

அமெரிக்காவில் ஸ்ரீ ரங்கநாதப் பெருமான் கோவில்

2017-06-02@ 11:50:33

அமெரிக்கா: அமெரிக்காவின் நியூயார்க் நகரில் உள்ள பொம்மானோ பகுதியில் ஸ்ரீ ரங்கநாதப் பெருமான் கோவில் அமைந்துள்ளது. இந்த பகுதியில் சயனக் கோலத்தில் பெருமாள் காட்சியளிக்கிறார். இவர் திருச்சியில் உள்ள ஸ்ரீ ரங்கநாதப் பெருமானை காண்பது போல காட்சியளிக்கிறார். இந்த கோவிலின் கருவறையில் மூலவரான ரங்கநாதப் பெருமாள் அருள்பாலிக்கிறார். இத்தலத்தில் சீனிவாச கல்யாண உற்சவம், ஆண்டாள் கல்யாண உற்சவம், சந்தான கோபால கிருஷ்ண பூஜை போன்றவைகள் மிக சிறப்பாக நடத்தப்படுகின்றன. 35 பவுண்டு எடைக்கு குறைவான குழந்தைகளை தராசில் ஒரு பக்கம் உட்கார வைத்து அதன் எடைக்கு ஈடாக, தங்களின் வேண்டுதல் படி அரிசி, சர்க்கரை, பழங்கள் போன்றவற்றை இறைவனுக்கு சமர்பிக்கின்றனர். இத்திருத்தலம், காலை 8 மணி முதல் மதியம் 12 மணி வரையிலும், மாலை 4 மணி முதல் இரவு 8 மணி வரையிலும் திறந்திருக்கும்.

தமிழ் மேட்ரிமோனி.காம் - தமிழர்களின் திருமண இணையத்தளம் - பதிவு இலவசம்!

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • bathnatural

    சர்வதேச இயற்கை மருத்துவத் தினத்தை முன்னிட்டு மணல் குளியல் விழிப்புணர்வு

  • puegovolconoerupt

    கவுதமாலாவில் பியூகோ எரிமலை வெடித்து சிதறியது : 4,000 பேர் பாதுகாப்பான இடங்களுக்கு தஞ்சம்

  • delhiproblem

    டெல்லியில் நிலவும் பனிப்புகை மூட்டத்தால் பொதுமக்கள், வாகன ஓட்டிகள் கடும் அவதி

  • colombiacarfestival

    கொலம்பியாவில் 29வது கார் திருவிழா : தானியங்கி வாகங்களில் மக்கள் உற்சாகத்துடன் பங்கேற்பு

  • vietnamramnathgovind

    வியட்நாமில் தேசிய சபை தலைவர் நிகுயென் தி கிம் நிகானுடன் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் சந்திப்பு

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்