SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

மே 18 தமிழ் இனப்படுகொலை: அமெரிக்காவில் 8-ம் ஆண்டு நினைவேந்தல்

2017-05-24@ 19:00:34

ராச்சஸ்டர்: சிங்களப் பேரினவாதப் படைகளால் கொத்துக் குண்டுகளாலும், இரசாயனக் குண்டுகளாலும் கிட்டத்தட்ட இரண்டு லட்சம் தமிழர்கள் இன அழிப்பு செய்யப்பட்ட கறுப்பு தினம். அந்தத் தினத்தின் 8ம் ஆண்டு நிறைவை ஒட்டி ஒரு நினைவேந்தல் நிகழ்வை அமெரிக்காவில் ராச்சஸ்டர் வட்டாரத் தமிழர் அமைப்பு மே மாதம் 21ம் தேதி வெப்ஸ்டர் கன்ட்ரி மேனர் அடுக்க சமூகக் கூடத்தில் நடத்தினர். நிகழ்வில் தாயகத் தமிழர்களோடு ஈழத்தைத் தாயகமாகக் கொண்ட தமிழர்களும் கலந்து கொண்டனர்.

நிகழ்வுக்கு வந்தோரை வரவேற்று நிர்வாக இயக்குநர் சாய்ராம் பேசினார். தொடர்ந்து இயக்குநர் நாதசொரூபன் கவிதை ஒன்றை வாசித்தார். மேலும், மகேந்திரன் அவர்களும் சொரூபி அவர்களும் ஈழத்தில் போருக்கு நடுவில் அவர்கள் செலவழித்த நாட்களின் அனுபவத்தைப் பகிர்ந்து கொண்டனர். சொரூபி அவர்கள் பேசியது மிகவும் உருக்கமாக இருந்தது. 'பள்ளி நாட்களில் மிதிவண்டிகளில் பள்ளி விட்டுத் திரும்பி வந்து கொண்டிருக்கும்போது பாம்பர் சத்தம் கேட்டால் மிதிவண்டிகளை சாலையிலேயே போட்டுவிட்டு பதுங்கு குழிகளில் இறங்கி ஒளிந்து கொண்டிருந்துவிட்டு சத்தம் விலகியதும் மேலே வந்து மிதிவண்டிகளை எடுத்துக்கொண்டு வீடு நோக்கி நடப்போம். இப்போது நான் உயிரோடு இருக்கிறேன். ஆனால் அங்கே இன்னமும் சொந்தங்கள் கஷ்டப்பட்டுக்கொண்டுதான் இருக்கிறார்கள்' என்று உருக்கமாகப் பேசினார்.

அடுத்ததாக அமைப்பின் பொருளாளர் தினேஷ் ஈழ விடுதலைப் போரின் ஆரம்பம் முதல் தற்காலிக முடிவு வரையான வரலாற்றைச் சுருக்கமாக எடுத்துரைத்தார். தமிழீழம் அமைய யூதர்களின் வழியைப் பின்பற்ற வேண்டும் என்றும், இருண்ட வரலாற்றை திரைப்படங்கள், அருங்காட்சியகங்கள் மூலம் பதிவு செய்ய வேண்டிய அவசியத்தையும், அடுத்த தலைமுறைக்கு அனுபவித்த வலிகளையும் ரணங்களையும் சொல்லிவைக்க வேண்டிய அவசியத்தையும் பற்றிப் பேசினார். அடுத்தவர்கள் வகுத்த விதிகளுக்குக் கட்டுப்பட்டு நடந்தது போது இனி வரும் தலைமுறை விதிகளை சமைக்கும் இடத்தில் இருக்க வேண்டும். அதுவே தமிழீழம் அமைய வழிவகுக்கும் என்று அவர் சொன்னதை கூடியிருந்தோர் அனைவரும் ஏற்றுக் கொண்டனர்.

தொடர்ந்து மெழுகுவர்த்திகளை ஏந்தி மௌன அஞ்சலி செலுத்தி விடை பெற்றனர். இதைத் தொடர்ந்து இன்னொரு நாளில் சிரமதானமாக ஒரு பூங்கா அல்லது ஒரு பொதுவிடத்தை சுத்தம் செய்யவும் திட்டமிடப்பட்டது. அடுத்த ஆண்டு இன்னும் பெரிய அளவில் இந்த நினைவேந்தலை நடத்த உறுதியெடுத்துக்கொண்டு கலைந்தனர்.

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
 • bji

  முன்னாள் சுகாதார அமைச்சர் ஜே.பி.நட்டாவை பாஜக செயல் தலைவராக அமைச்சர் ராஜ்நாத் சிங் அறிவிப்பு

 • suvami

  திருவல்லிக்கேணி பார்த்தசாரதி கோவில் பிரம்மோற்சவ விழா 5ம் நாளான இன்று சுவாமி நாச்சியார் வீதி உலா

 • mango

  கிருஷ்ணகிரியில் 27வது அகில இந்திய மாங்கனி கண்காட்சி: மலர்கள் கொண்டு உலக கோப்பை வடிவமைப்பு

 • earth

  சீனாவின் சிச்சுவான் மாகாணத்தில் சக்தி வாழ்ந்த நிலநடுக்கம்: 12 பேர் உயிரிழப்பு,125 பேர் படுகாயம்

 • airshow

  பாரிசில் நடைபெற்ற 53 வது சர்வதேச விமான கண்காட்சி: போயிங் போன்ற பல்வேறு விமானங்கள் பங்கேற்பு

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்