SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

Urban Tree

அமெரிக்காவில் ஜூனியர் மேயராக தேர்வான தமிழ் சிறுமி

2017-05-23@ 11:06:07

அமெரிக்கா: வடஅமெரிக்காவின், மேரிலாந்து மாகாணத்தில் கெயித்தர்ஸ்பர்க் நகரத்திற்கான இளைய மேயர் போட்டி, 4ம் வகுப்பு மாணவர்களுக்கு நடத்தப்பட்டது. ஆண்டுதோறும் நடத்தப்படும் இப்போட்டிகளில், கடந்த இரண்டு ஆண்டுகளாக தமிழ் குழந்தைகள் ஜூனியர் மேயராக தேர்வாகி உள்ளனர். ஜூனியர் மேயர் பதவி என்பது, குழந்தைகளுக்கு சமூக நலப் பணிகளில் ஆர்வத்தை ஏற்படுத்தி, அவர்களை ஊக்குவிப்பதற்காக உருவாக்கப்பட்டது. ஜூனியர் மேயராக தேர்ந்தெடுக்கப்படுபவர், தனது ஓராண்டு பதவி காலத்தில், மேயர் கலந்து கொள்ளும் அனைத்து விழாக்களிலும் பங்கேற்கலாம். மேயருக்கு அடுத்த இருக்கையில் அமர்ந்து கொள்ளலாம். இவ்வாண்டின் ஜூனியர் மேயராக தேர்ந்தெடுக்கப்பட்டவர் பூரணி ஆவர். ஏப்ரல் 13ம் தேதி பதவி ஏற்றுக்கொண்ட பின், மே1ஆம் தேதி நடந்த மேயர் மற்றும் நகர சபை கூட்டத்தின் போது கெய்த்தர்ஸ்பர்க் நகர மக்களுக்கு முறைப்படி அறிமுகப்படுத்தப்பட்டார்.

தமிழ் மேட்ரிமோனி.காம் - தமிழர்களின் திருமண இணையத்தளம் - பதிவு இலவசம்!

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • mumbai_1010ganeshidole

    மும்பையில் கோலாகலமாக நடைபெற்ற விநாயகர் ஊர்வலம் - ஆயிரக்கணக்கான சிலைகள் கரைப்பு

  • sikimairportmodi

    சிக்கிம் மாநிலத்தின் முதல் விமான நிலையம் : பிரதமர் நரேந்திர மோடி திறந்து வைத்தார்

  • puppies_formation12345

    சிலியில் சுதந்திர தின அணிவகுப்பு நிகழ்ச்சியில் பங்கேற்ற காவல்துறை நாய்க்குட்டிகள் !

  • philipines_landslidesaccid

    பிலிப்பைன்ஸ் நாட்டில் மீண்டும் நிலச்சரிவு - 29 பேர் உயிரிழப்பு !

  • tanzinaship_accid2121

    டான்ஸானியாவில் படகு விபத்து - உயிரிழந்தோர் எண்ணிக்கை 136 ஆக அதிகரிப்பு

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்