SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

துபாயில் வரும் ஏப் 14,15,16ல் நகரத்தார்களின் சர்வதேச வர்த்தக மாநாடு

2017-04-12@ 10:50:53

துபாய்: இளம் தலைமுறை தொழில் முனைவோரை ஊக்கப்படுத்தும் வகையில் நகரத்தார் சர்வதேச வர்த்தக மாநாடு ஏப்ரல் 14,15,16 தேதிகளில் யுஏஇல் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்து விளக்கமளிக்கும் வகையில் பத்திரிக்கையாளர் சந்திப்பு நடைபெற்றது. இதில் வர்த்தக பிரமுகரும், வர்த்தக் மாநாட்டின் IBCN 2017 (international business conference of nagarathars) ஒருங்கினைப்பாளருமான Thiru.AN.சொக்கலிங்கம் கூறியதாவது....

நகரத்தார் வணிக முயற்சி குழு மற்றும் நகரத்தார் சர்வதேசவர்த்தக மாநாடு IBCN 2017 முக்கிய நோக்கம் தொழில் முனைவோரை ஊக்கப்படுத்தி அவர்களை சொந்த தொழிலை சிறப்பாக செய்திட வேண்டிய வழிகாட்டுதல்களை வழங்குவது என்பதுதான் அதோடு தொழில் நுணுக்கங்கள், புதிய முதலீடுகள், உள்ளிட்ட பல்வேறு வகையான அறிவு சார் கருத்துக்கள் இந்த மாநாட்டில் பகிர்ந்து கொள்ளப்படும்.

இந்த மாநாட்டில் உலகம் முழுவதுமிருந்து நூற்றுக்கணக்கான வர்த்தக பிரமுகர்கள் பங்கேற்க உள்ளார்கள். அமீரகத்தில் உள்ள தொழிலதிபர்களோடு  சர்வதேச‌ தொழில் சார் வல்லுநர்களும் கலந்து கொள்கின்றனர். துபாயில் நடைபெற உள்ள இந்நிகழ்ச்சி குறித்து விளக்கமளிக்கும் வகையில் லண்டன் உள்ளிட்ட உலகின் பல்வேறு நகரங்களில் விளக்க கூட்டம் நடைபெற்றுள்ளது.

மாநாட்டில் பிசினஸ் பிளான் காம்பெட்டிசன் உள்ளிட்ட பல்வேறு சிறப்பு நிகழ்ச்சிகள் நடைபெற உள்ளது. இம்மாநாட்டில் பங்கேற்பதன் மூலம் பங்கேற்பாளர்கள் புதிய தொழில் தொடங்கும் வாய்ப்புகளையும், வர்த்தக அனுபவங்களையும் பெற்று கொள்ளும் வாய்ப்புகள் அதிகம். அதோடு இது போன்ற தொழில் முனைவோரை ஊக்கப்படுத்தும் மாநாடுகளால் சர்வேதச அளவில் வெவ்வேறு இடங்களில் பணியாற்றுவோர்  ஒருவொருக்கொருவர் சந்தித்து தங்கள் அனுவங்களை பகிர்ந்து தொழில்களை தொடங்க உதவுதோடு நம் இந்தியாவில் அதிகப்படியான தொழில் முனைவோர் உருவாக வழிவகுக்கும் என்றார்

Nagarathar Business Initiative Group – NBIG என்ற அமைப்பு 2014ல் ஏற்படுத்தப்பட்டு பல்வேறு நலப்பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதோடு (international business conference of nagarathars) நகரத்தார் சர்வதேசவர்த்தக மாநாடு  2 ஆண்டுக்கு ஒரு முறை நடைபெற்று வருவது குறிப்பிடதக்கது. பத்திரிக்கையாளர் சந்திப்பின் போது நடைபெற உள்ள‌ மாநாடு குறித்த விளக்க புத்தகம் வெளியிடப்பட்டது சந்திப்பிற்கான ஏற்பாடுகளை எஸ் ஈவெண்ட்ஸ் வெங்கட் செய்திருந்தார்.

low dose naltrexone lung cancer taking naltrexone too soon naltrexone over the counter
naltrexone low dose depression naltrexone sleep how to get naltrexone out of your system

திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
 • 12-12-2017

  12-12-2017 இன்றைய சிறப்பு படங்கள்

 • 10thexams_111

  10ம் வகுப்பு அரையாண்டு தேர்வுகள் தொடங்கியது

 • hardik_anivaguppu

  பாடிதாரின் கிளர்ச்சி தலைவர் ஹார்டிக் படேல் அகமதாபாத்தில் நடத்திய மாபெரும் மோட்டார் சைக்கிள் அணிவகுப்பு

 • rahulgandhi_11

  அகில இந்திய காங்கிரஸ் தலைவரான ராகுல்காந்தியின் அரசியல் வாழக்கையை எடுத்துரைக்கும் அரிய படங்கள்

 • kumari_ogi_puyal11

  ஓகி புயல் பாதிப்பிற்கு நிவாரணம் கேட்டு குமரி மீனவர்கள் கருப்புக்கொடிகளுடன் கடலில் இறங்கி மனித சங்கிலி போராட்டம்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்