SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

உடல் எடையை குறைக்கும் கொத்துமல்லி

2017-08-11@ 14:19:42

நமக்கு அருகில், எளிதில் கிடைக்கும் மூலிகைகள், இல்லத்தில் உள்ள உணவுப்பொருட்களை கொண்டு பாதுகாப்பான பக்கவிளைவில்லாத பயனுள்ள எளிய மருத்துவத்தை பார்த்து வருகிறோம். அந்தவகையில், கொழுப்பு சத்தை குறைக்கும் தன்மை கொண்டதும், மலச்சிக்கலை போக்க கூடியதும், தலைச்சுற்றல், வாந்தியை நிறுத்தவல்லதும், தோல்நோய்களை குணப்படுத்த கூடியதுமான கொத்துமல்லியின் நன்மைகள் குறித்து நலம் தரும் நாட்டு மருத்துவத்தில் காணலாம். கொத்துமல்லி உணவுக்கு மணம், சுவை சேர்க்கிறது. இதில், வைட்டமின் சி, கே, இரும்பு, கால்சியம் சத்து மிகுதியாக உள்ளது. எலும்பு பலவீனத்தை போக்கும் மருந்தாகிறது. ரத்த ஓட்டத்தை சீர்செய்கிறது. வாயுவை அகற்றி பசியை தூண்டுகிறது.

கொத்துமல்லி இலைகளை பயன்படுத்தி தலைசுற்றல், மயக்கத்துக்கான தேனீர் தயாரிக்கலாம். தேவையான பொருட்கள்: கொத்துமல்லி, சந்தனப்பொடி, நெல்லி வற்றல், பனங்கற்கண்டு.செய்முறை: ஒரு பாத்திரத்தில் 20 மில்லி கொத்துமல்லி இலை சாறு எடுக்கவும். இதனுடன் சிறிது சந்தனப்பொடி, ஊறவைத்த நெல்லி வற்றல், பனங்கற்கண்டு, நீர் சேர்த்து கொதிக்க வைக்கவும். இதை வடிகட்டி குடித்துவர  தலைசுற்றல், குமட்டல், வாந்தி, மயக்கம், சிறுநீர்தாரை எரிச்சல் சரியாகும். சிறுநீர் தாரையில் ஏற்பட்ட தொற்று, வலி குணமாகும். பசியை தூண்டுகிறது. செரிமானத்தை சீர்செய்கிறது.

கொத்துமல்லியை பயன்படுத்தி உடல் எடையை குறைக்கும் மருந்து தயாரிக்கலாம். தேவையான பொருட்கள்: கொத்துமல்லி, எலுமிச்சை, தேன். செய்முறை: ஒரு பாத்திரத்தில் கொத்துமல்லி இலை சாறு 50 மில்லி எடுத்து நீர்விடவும். இதனுடன் எலுமிச்சை சாறு சேர்க்கவும். இதை கொதிக்க வைத்து வடிகட்டி ஒரு ஸ்பூன் தேன் சேர்த்து கலந்து ஒருவார காலத்துக்கு காலையில் வெறும் வயிற்றில் குடித்துவர உடல் எடை குறையும். கொத்துமல்லி அதிகளவில் நார்ச்சத்து உடையது. சிறுநீரை பெருக்கி கறைகளை கரைக்கும். கெட்ட கொழுப்பை குறைத்து நல்ல கொழுப்பு சத்தை நிலைநிறுத்தும். அடிக்கடி கொத்துமல்லி சாறு குடிப்பதன் மூலம் மலச்சிக்கல் இல்லாமல் போகும்.

கொத்துமல்லியை கொண்டு தோலில் ஏற்படும் வறட்சியை போக்கும் மருந்து தயாரிக்கலாம். தேவையான பொருட்கள்: கொத்துமல்லி, நெய். செய்முறை: ஒரு பாத்திரத்தில் சிறிது நெய் விடவும். இதனுடன், அரைத்து வைத்திருக்கும் கொத்துமல்லி இலை பசை சேர்த்து காய்ச்சவும். இது, குழம்பு பதத்தில் வந்தபின் பிழிந்து தைலத்தை எடுக்கவும். இந்த தைலத்தை  மேல்பூச்சாக பயன்படுத்த தோல் வறட்சி சரியாகும். உடல் எரிச்சலை போக்கிறது. தோல்நோய்களுக்கு மருந்தாகிறது. தோலில் ஏற்பட்ட திட்டுகள், கருமை நிறம் போகும். பனிக்காலத்தில் உதட்டில் வெடிப்பு ஏற்படும். இந்த தைலத்தை பூசிவர உதடு வெடிப்பு சரியாகும்.

பல் வலியை குணப்படுத்தும் மருத்துவம் குறித்து பார்க்கலாம். ஈறுகளில் வீக்கம், பல் சொத்தை போன்றவற்றால் பல் வலி ஏற்படும். இப்பிரச்னைக்கு கண்டங்கத்திரி விதை மருந்தாகிறது. நாட்டு மருந்து கடைகளில் கிடைக்கும் கண்டங்கத்திரி விதையை வாங்கி நெருப்பில் இட்டு, அதில் வரும் புகையை வாயுக்குள் படும்படி காண்பிக்குபோது பற்களில் உள்ள நுண்கிருமிகள் அழியும். இதனால் பல் வலி குணமாகும்.

திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
 • 19-11-2017

  19-11-2017 இன்றைய சிறப்பு படங்கள்

 • odingaelectionkenya

  கென்யாவில் அதிபர் தேர்தல் எதிரொலி: எதிர்க்கட்சித் தலைவர் ரெயாலா ஒடிங்காவின் ஆதரவாளர்கள் கலவரம்

 • serina_wed_photos

  டென்னிஸ் வீராங்கனை செரினா வில்லியம்ஸ் மற்றும் அலெக்சிஸ் ஓஹானியன் திருமணம் புகைப்படங்கள்

 • Newyork_Fire

  நியூயார்க் நகரில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் பயங்கர தீ விபத்து: தீயணைப்பு வீரர்கள் உட்பட 5 பேர் காயம்

 • mikro_yogiii

  பில்கேட்ஸ் - முதல்வர் யோகி ஆதித்யநாத் சந்திப்பு! : நிதியுதவி, என்சிபாலிட்டிஸ் தடுப்பூசி திட்டங்கள் குறித்து ஆலோசனை

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்