SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

யானைக்கால் நோய்க்கு மருந்தாகும் சங்கு பூ

2017-07-17@ 14:22:46

நமக்கு அருகில், எளிதில் கிடைக்க கூடிய மூலிகைகள், இல்லத்தில் அஞ்சறைப் பெட்டியில் உள்ள உணவுப் பொருட்களை கொண்டு பாதுகாப்பான பக்கவிளைவில்லாத பயனுள்ள எளிய மருத்துவத்தை பார்த்து வருகிறோம். அந்தவகையில், யானைக்கால் நோய்க்கு மருந்தாகி பயன்தருவதும், காய்ச்சலை குணப்படுத்த கூடியதும், புண்களை ஆற்றும் தன்மை கொண்டதுமான சங்கு பூ செடியின் நன்மைகள் குறித்து நலம் தரும் நாட்டு மருத்துவத்தில் காணலாம்.

காக்கத்தான் எனப்படும் சங்கு பூ செடி பால்வினை, வெள்ளைபோக்கு பிரச்னைகளுக்கு மருந்தாகிறது. சங்கு பூ செடியின் விதைகளை பயன்படுத்தி யானைக்கால் நோயினால் ஏற்படும் வீக்கத்தை குறைக்கும் மருந்து தயாரிக்கலாம். தேவையான பொருட்கள்: சங்கு பூ செடியின் விதைகள், சுக்கு, இந்துப்பு. சங்கு பூ செடியின் காய்களுக்குள் இருக்கும் முற்றிய விதைகளை எடுத்து வறுத்து பொடியாக்கி அரை ஸ்பூன் அளவுக்கு எடுக்கவும். இதனுடன் கால் ஸ்பூன் சுக்குப்பொடி, சிறிது இந்துப்பு சேர்த்து ஒரு டம்ளர் நீர்விட்டு கொதிக்க வைக்கவும். இதை வடிகட்டி தினமும் காலையில் குடித்துவர காலில் ஏற்படும் வீக்கம் குறையும். யானைக்கால் நோயால் ஏற்படும் காய்ச்சல், நெறிகட்டுதல், முழங்கால் வீக்கம் போன்றவை சரியாகும்.

சங்கு பூ செடியின் விதைகள் நாட்டு மருந்து கடைகளில் கிடைக்கும். யானைக்கால் நோயால் உண்டாகும் வீக்கத்தை குறைக்கும் மருந்து தயாரிக்கலாம். தேவையான பொருட்கள்: சங்கு பூ செடியின் இலைகள், விளக்கெண்ணெய். செய்முறை: சங்கு பூ செடியின் இலைகளை விளக்கெண்ணெய் விட்டு வதக்கி காலில் கட்டி வைத்தால் யானைக்கால் நோயினால் ஏற்படும் வீக்கம் குறையும். சங்கு பூ செடியை பயன்படுத்தி காய்ச்சல், அதிக வியர்வையை போக்கும் மருந்து தயாரிக்கலாம்.

தேவையான பொருட்கள்: சங்கு பூ செடியின் இலைகள், இஞ்சி, தேன். செய்முறை: இஞ்சி சாறு 5 முதல் 10 மில்லி வரை எடுக்கவும். இதனுடன் சங்கு பூ செடியின் இலை சாறு ஒரு ஸ்பூன், தேன் சேர்த்து காலை, மாலை குடித்துவர காய்ச்சல் சரியாகும். உள்ளங்கை, காலில் ஏற்படும் அதிகப்படியான வியர்வை கட்டுப்படும். காய்ச்சலை போக்குவதுடன், காக்காய் வலிப்பு வராமல் தடுக்கிறது.
மூலம், புண்களை ஆற்றும் தைலம் தயாரிக்கலாம். தேங்காய் எண்ணெய், விளக்கெண்ணெய் ஆகியவற்றை சம அளவு எடுக்கவும். இதனுடன், அரைத்து வைத்திருக்கும் சங்கு பூ இலை பசை சேர்த்து தைலப்பதத்தில் காய்ச்சவும். இதை வடிகட்டி ஆறவைத்து மூலத்துக்கான மேல்பூச்சாக பயன்படுத்தலாம்.

இதை பூசிவர சீழ் பிடித்த புண்கள் விரைவில் ஆறும். மன உளைச்சலை போக்கும் மருந்தாக சங்கு பூ விளங்குகிறது. மலட்டு தன்மையை போக்குகிறது. சிரங்குக்கான மேல்பூச்சு மருத்துவம் குறித்து பார்க்கலாம். சாலையோரம், தோட்டங்களில் உள்ள பூவரசு மரத்தின் பழுத்த இலைகளை காயவைத்து பொடித்து, நெருப்பில் இட்டு சாம்பலாக்கி, சிறிது எண்ணெய் சேர்த்து பூசும்போது சொறி, சிரங்கு, படை குணமாகும். வெண்புள்ளிகள் மறையும்.

திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
 • chennaicmpalanysamy

  காவிரி நதிநீர் பங்கீடு விவகாரம்: முதல்வர் பழனிச்சாமி தலைமையில் அனைத்துக்கட்சி கூட்டம் நடைபெற்றது

 • LemonFestivalMenton

  பிரான்சில் உள்ள மென்டான் நகரில் 'லெமன் திருவிழா': லட்சக்கணக்கானோர் உற்சாகமாக பங்கேற்பு

 • FloridaguncultureStudents

  புளோரிடா துப்பாக்கிச் சூடு சம்பவம் எதிரொலி: துப்பாக்கி கலாச்சாரத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து மாணவர்கள் ஆர்ப்பாட்டம்

 • KenyaElephants

  யானைகளை பரிதாபமான முறையில் இடமாற்றம் செய்யும் கென்ய வனத்துறை அதிகாரிகள்..!

 • WorldPressPhoto2018

  உலக பத்திரிகை புகைப்பட போட்டி 2018: போட்டிக்காக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள புகைப்படங்களின் தொகுப்பு..

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்
X