SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

வெயிலுக்கு தர்பூசணி சாப்பிடுங்க..

2018-06-01@ 14:20:37

நன்றி குங்குமம் தோழி

வாசகர் பகுதி

அடங்கியுள்ள சத்துக்கள்


நீர்ச்சத்து 0.2 கிராம், புரதச்சத்து 0.2 கிராம், கொழுப்பு 0.2 கிராம், நார்ச்சத்து 0.2 கிராம், மாவுச்சத்து 3.3 கிராம்,  சுண்ணாம்புச்சத்து 11 மி.கி., பாஸ்பரஸ் சத்து 23 மி.கி., இரும்புச்சத்து 0.5 மி.கி., தயாமின் 0.04 மி.கி., மெக்னீசியம் 12  மி.கி., சோடியம் 27.3 மி.கி., பொட்டாசியம் 160 மி.கி., தாமிரம் 0.05 மி.கி., கந்தகம் 42 மி.கி., குளோரின் 21 மி.கி., சக்தி  16 கலோரி.தர்பூசணியில் புரதம், கொழுப்பு உட்பட அனைத்து உலோகச் சத்துக்களும் உள்ளன.\

எப்படி உண்ணலாம்?

தர்பூசணி பழத்தை கீற்றாக வெட்டி அப்படியே கடித்து உண்ண மிகவும் சுவையாக இருக்கும். பழச்சதையை கூழாக்கி  உண்ணலாம். பழச்சதை துண்டுகளை மிக்சியிலிட்டு பால், சர்க்கரை, ஏலக்காய் சேர்த்து அடித்து அருந்தலாம். சுவையான  ஜாம், ஜெல்லி, ஜூஸ் தயாரித்து அருந்தலாம்.

பழச்சாறு எடுத்தல்

தர்பூசணி பழத்தை கழுவி, கீற்றுகளாக வெட்டி, விதைகளை நீக்கிவிட்டு பழச்சதையை மட்டும் தனியே எடுத்து சாறு  பிழியவும். ஒரு லிட்டர் சாறுக்கு  ஒரு கிலோ சர்க்கரை தேவைப்படும். சர்க்கரை பாகை தனியே தயாரித்து  வைத்துக்கொள்ளவும். பழச்சாற்றில் மூன்று கிராம் சிட்ரிக் அமிலம் சேர்த்து சூடேற்றவும். பாதியாக ஆனதும், சர்க்கரை  பாகை கலந்துகொள்ளவும். இதோடு 2 கிராம் சோடியம் மெட்டா சல்பேட் கலந்து ஆறியதும் சுத்தப்
படுத்தி சூடாக்கி பாட்டில்களில் நிரப்பி சேமிக்கலாம்.
 
சிறப்புத் தன்மைகள்

தர்பூசணி உடம்பிற்கு மிகுந்த குளிர்ச்சியை ஊட்டக்கூடிய பழமாகும். உடல் சூட்டை தணித்து கோடை  வெம்மையிலிருந்து நம்மைக் காக்கும். இப்பழத்தை யார் வேண்டுமானாலும் சாப்பிடலாம். பழம் இனிப்பாக இருப்பதால்  நீரிழிவு நோய் உடையவர்கள் சாப்பிடலாமா என்ற ஐயம் ஏற்படலாம். ஆனால் இப்பழத்தை நீரிழிவு நோய் உள்ளவர்கள்,  இதய நோய் உள்ளவர்கள் தாராளமாக உண்ணலாம். ரத்தக்கொதிப்பு உடையவர்கள், குண்டானவர்கள் உண்ணலாம்.  இப்பழத்தில் இரும்புச்சத்து அதிகமாக உள்ளது. குறைந்த அளவில் நார்ச்சத்து உள்ளது.
 
மருத்துவப் பயன்கள்

* தர்பூசணி பழச்சாறுடன், இளநீர் கலந்து அருந்த வெயிலால் ஏற்படும் வெம்மை, உடல் சூடு தணியும்.
* பழத்துண்டுகளை பதநீரில் போட்டு, ஒரு துண்டு ஐஸ்கட்டி சேர்த்து சாப்பிட மிகவும் சுவையாக இருப்பது மட்டுமின்றி  உடலை குளிர்விக்கும் பானமாகவும், வயிற்றுவலியை நீக்கும் மருந்தாகவும் செயல்படுகிறது.
* பழச்சாறு பசியை தீர்க்கும், காய்ச்சலை குணப்படுத்தும்.
* பழச்சாறுடன் சிட்டிகை அளவு சீரகப் பொடி, சீனி கலந்து அருந்த சிறுநீரக கோளாறுகள் நீங்கும். சிறுநீர்த்தாரை  எரிச்சல் மாறும்.
* கோடையில் ஏற்படும் நீர்ச்சுருக்கை குணப்படுத்தும்.
* பழச்சாறுடன் பால் கலந்து அருந்த தொண்டை வலி மாறும். கண்கள் குளிர்ச்சி பெறும்.
* பழச்சதையை கண் இமைகளை மூடியபின் மேலே வைத்து ஒற்றி எடுக்க கண்வலி, கண் சூடு குறையும்.
* தர்பூசணி பழ ஜூஸ் புத்துணர்ச்சியை ஊட்டும்.
* பழச்சதையை உடம்பில் தேய்க்க அரிப்பு மாறும்.
* பழச்சதையை பிசைந்து சிறிதளவு பால், தேன் கலந்து முகத்தில் பூசி ஊறியபின் கழுவி வர முகம் பளபளக்கும்.
* பழச்சாறுடன் எலுமிச்சை சாறு கலந்து அருந்த வயிற்றுக்கடுப்பு மாறும்.
* பசியின்மை, அஜீரணம் போன்றவற்றை குணப்படுத்தும்.
* பழச்சாறுடன் மோர் கலந்து அருந்த சிறுநீர் எரிச்சல் மாறும்.
* தர்பூசணிப் பழம் செரிமானத்தை சீர்படுத்தும்.
* பழச்சதை நீங்கலாக இருக்கும் வெள்ளை பகுதியை கூட்டு, குழம்பு தயாரிக்க பயன்படுத்தலாம். இக்கூட்டு குடல்  நோய்களை குணப்படுத்தும்.
* தர்பூசணி விதைகளை உலர வைத்து உண்ணலாம்.
* விதைகளும் குளிர்ச்சியான தன்மையை கொண்டுள்ளது.
* விதைகளை நீர்விட்டு அரைத்து அடிவயிற்றில் பூச நீர்க்கடுப்பு தீரும். சிறுநீர்த்தாரை எரிச்சலை நீக்கும்.
* தர்பூசணி பழம் பசியைத் தீர்க்கும். செரிமானத்தைக் கூட்டும். அஜீரணத்தை நீக்கும். உடம்பை குளிர்வித்து  சுறுசுறுப்பூட்டும். மொத்தத்தில் இப்பழம் கோடையை தணிக்கும் சிறந்த ஒரு பழமாகும்.

- சா.அனந்தகுமார்,
அகஸ்தீஸ்வரம்

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
 • 20-09-2019

  20-09-2019 இன்றைய சிறப்பு படங்கள்

 • motor_strike1

  புதிய மோட்டார் வாகன சட்டத்திற்கு எதிராக ஸ்டிரைக் : டெல்லியில் ஆட்டோ, வாடகை கார் இயங்கவில்லை; மக்கள் சிரமம்

 • jellifish_shapee1

  உருவத்தை மாற்றும் வினோத ஜெல்லி மீன் : பசிபிக் பெருங்கடலில் கண்டுபிடிப்பு

 • malar_palam11

  கர்நாடகாவின் குல்பர்கா நகரில் நடைபெற்ற பழம் மற்றும் மலர் கண்காட்சியின் கண்கவர் படங்கள்

 • banglore_fire11

  பெங்களூரு யூக்கோ வங்கியில் பயங்கர தீ விபத்து : வங்கிக்குள் இருந்தவர்கள், மாடியின் ஜன்னல் வழியாக கீழிறங்கி தப்பித்தனர்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்