SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

அறுவை சிகிச்சை கிடையாது... மருந்துகளுக்கு குட்பை!

2018-01-10@ 15:14:49

நன்றி குங்குமம் தோழி

 - மகேஸ்வரி

அசத்தும் 4M ஆர்த்தோ தெரபி


வலிகளுடன் கூடிய எலும்பியல் பிரச்சனை களுக்கு மருந்து மாத்திரைகளை மாதக் கணக்கில் உட்கொள்வதையும் அறுவை சிகிச்சை செய்து கொள்வதையும் நாம் கேள்விப்பட்டிருக்கிறோம். வலி சார்ந்த எலும்பியல் பிரச்சனைகளுக்கு 4M-ஆர்த்தோ தெரபி  மூலம் தீர்வு காண முடியும் என்கிறார் சென்னை அண்ணாநகரைச் சார்ந்த மருத்துவர் பாலகுமாரன்.

அது என்ன 4எம்-ஆர்த்தோ தெரபி?
“உடம்பின் உள்ளுறுப்பில் உள்ள பாகங்களின் பொசிஷன் மாறினாலோ அல்லது வரிசை மாறினாலோ வலி வரும். அதை சரி செய்தாலே வலி போய்விடும். முன்பெல்லாம் பெண்கள் நிறைய வீட்டு வேலைகளைச் செய்வார்கள். எனவே உடலுக்குத் தேவையான உடற்பயிற்சிகள் இயல்பாக வீட்டு வேலைகளைச் செய்யும்போதே அவர்களுக்குக் கிடைத்துவிடும். ஆனால் இன்று நிலைமை தலைகீழ்.

எல்லா வேலைகளையும் இயந்திரங்கள் செய்கின்றன. முன்பெல்லாம் உணவு சாப்பிடும்போது கால்கள் இரண்டையும் மடக்கி தரையில் அமர்ந்து குனிந்து நிமிர்ந்து சாப்பிடுவோம். அப்போது உடலுறுப்புகள் அத்தனைக்கும் வேலை இருக்கும். நம் உடலுக்கு இதுவும் ஒருவிதமான  உடற் பயிற்சிதான். ஆனால் இப்போது டைனிங் டேபிளில் அமர்ந்து விரைவாகச் சாப்பிடுகிறோம். வேலைக்குச் செல்லும் பெண்கள் ஒரே நிலையில் அமர்ந்தே வேலை செய்ய வேண்டிய நிலை.

ஆரோக்கியமான உணவுகளும் இப்போது கிடையாது. நேரம் தவறி சாப்பிடுவது. உடலுக்கு சரியாக ஓய்வு தராதது. நேரம் தள்ளி தூங்குவது. இவையெல்லாம் கூட உடலுக்கு நாளடைவில் பிரச்சனைகளை தரும். 4எம்-ஆர்த்தோ தெரபி என்பது மூட்டு வலி, தண்டுவட முதுகு வலி, கழுத்து வலி, தோள்பட்டை வலி, தண்டுவடத்தில் ஜவ்வு கிழிந்து அல்லது விலகுவதால் ஏற்படும் வலி (டிஸ்க் ப்ரொலாப்ஸ்) போன்ற வலி சார்ந்த எலும்பியல் பிரச்சனைகளுக்கு மருந்து, மாத்திரை, அறுவை சிகிச்சை இல்லாமல் கைகளாலும், சிறப்பு பெல்ட்டுகளாலும் வலியின்றி செய்யக்கூடிய நவீன சர்வதேச மருத்துவமாகும்.

ஆஸ்திரேலியா, நியூசிலாந்து, வடஅமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகளில் புகழ்பெற்ற இந்த சர்வதேச சிகிச்சை முறை இப்போது இந்தியாவிலும் பிரபலமாகி வருகிறது. இதன் மூலம் ஆர்த்தரைட்டீஸ், டிஸ்க் ப்ரொலாப்ஸ், ப்ரோசன் ஜோல்டர்ஸ் போன்ற பிரச்சனைகளும் மூட்டு வலி, முதுகு வலி, கழுத்து வலி, குதிகால் வலி, டென்னிஸ் எல்போ, நாட்பட்ட தலைவலிகள் போன்ற உபாதைகளுக்கும் அதைச் சார்ந்த நரம்பியல் பிரச்சனைகளுக்கும்கூட நிரந்தரத் தீர்வைக் காண முடியும்.

பொதுவாக எலும்பு சார்ந்த வலிகள் பலவற்றிற்கு, மனிதனின் இயல்பற்ற அசைவு களால் அல்லது தவறான அசைவுகளால் எலும்புகள் தன் நிலையிலிருந்து விலகி இயங்குவதே காரணமாக இருக்கிறது (Micro shift). இந்த சிகிச்சை முறையினை எடுப்பதால் மேனுவலாகவே மெல்ல மெல்ல பிசகி அல்லது விலகி உள்ள நிலையில் இருந்து இயல்பு நிலைக்கு உள்ளுறுப்புகளைக் கொண்டு வந்துவிட முடியும். அப்படி கொண்டு வந்து விட்டாலே, பெரும்பகுதி வலிகள் குணமாகி விடும்.

இயல்பற்ற முறையில் இயங்கும் எலும்புகளை மற்றும் மூட்டுகளை சரி செய்யும் போது, நரம்பு சார்ந்த பிரச்சனைகளும் இதில் முற்றிலும் குணமாகி விடுகின்றன. இதனை மறுசீரமைப்பு அல்லது உள்ளுறுப்புகளின் இறுக்கத்தை இயல்பாக்கி, வலியைப் போக்குதல். அறுவை சிகிச்சை செய்யக்கூடிய நிலையில் இருந்தாலும், அதனை அறுவை சிகிச்சை செய்யாமலேயே 4எம்-ஆர்த்தோ தெரபி மூலம் குணப்படுத்த முடியும்.

உள் நோயாளியாக  இருக்க வேண்டாம்.  ஊசியில்லை, மருந்தில்லை, அறுவை சிகிச்சை இல்லை. முதல் நாள் சிகிச்சையிலேயே வலி குறைய துவங்குவதை அல்லது முற்றிலும் நீங்குவதை நோயாளியால் உணர முடியும். பக்கவிளைவுகள் எதுவுமற்றது. மேலும் நோயாளிகளுக்கு சிகிச்சை செய்யும் முன்பு, பின்பு எடுக்கப்பட்ட எம்.ஆர்.ஐ. ஸ்கேன் ரிப்போர்ட்களையும் அவர்கள் பார்த்துக்கொள்ள முடியும். சர்வதேச மருத்துவ சிகிச்சை முறையாக இது இருப்பதால், முறைப்படி பதிவு செய்தவர்களே, இந்த சிகிச்சை முறைகளைக் கையாள முடியும்” என்று சொல்கிறார் மருத்துவர் பாலகுமாரன்.

இந்த சிகிச்சை முறையை மேற்கொண்டு வரும் திருநின்றவூரைச் சேர்ந்த ஜெயலெட்சுமியிடம் பேசியபோது, ‘‘தொடர்ந்து  ஐந்தாண்டுகளாக இரண்டு கால்களிலும் மூட்டுவலி பிரச்சனையால் கஷ்டப்பட்டேன்.  என்னால் நடக்கவோ, சிறிது நேரம் நிற்கவோ, படிகளில் ஏற இறங்க முடியாத  நிலையில் இரண்டு கால்களிலும் வலி மிகவும் அதிகமாக இருந்தது.  மூட்டு வலி  பிரச்சனையால் என்னால் நேராக நிமிர்ந்து நிற்கக்கூட முடியாது. நடக்கும்போது  மிகவும் மெதுவாக சாய்ந்து நடக்கும் நிலையில் மிகவும் அவதிப்பட்டேன்.

கால் வலிக்காக  பல மருத்துவ முறைகளை நாடி தீர்வு கிடைக்காத நிலையில், 4M ஆர்த்தோ தெரபி  குறித்து நாளிதழ் ஒன்றில் வந்த ஒரு கட்டுரையினை படித்துவிட்டு சென்னை அண்ணா  நகரில் உள்ள கிருஷ்ணா ஹெல்த் சென்டர் குறித்தும், டாக்டர் கே.பாலகுமாரன் குறித்தும் அறிந்து திருவள்ளூர் மாவட்டம் திருநின்றவூரில் இருந்து வந்து சிகிச்சை எடுத்துக் கொள்கிறேன்.

நான்  சிகிச்சை எடுக்க வந்த முதல் நாளே எனக்கு வலி குறைந்து சரியாக நடக்கத்  துவங்கினேன். 32 நாட்கள் தொடர்ந்து வந்து அரை மணி நேரம் சிகிச்சை  எடுக்கிறேன். எனக்கு வழங்கப்பட்ட மேக்னெட் தெரபி, மேனுவல் தெரபி, காலை மடக்கி நீட்டி செய்யும் பயிற்சிகள் எல்லாம் இன்றுடன் நிறைவடைகின்றன. இந்த சிகிச்சையில் ஊசி, மருந்து மாத்திரைகள் எதுவும் நான் உட்கொள்ளவில்லை.

அறுவை  சிகிச்சை முறையும் இங்கு கிடையாது. இரண்டு கால்களிலும் மூட்டுவலிப் பிரச்சனையால் நடக்க முடியாத நிலையில், மிகவும் வித்தியாசமாக நடந்து  கொண்டிருந்த நான் இப்போது நன்றாக நடக்கிறேன். என்னால் வலி இன்றி நிமிர்ந்து நிற்கவும், படிகளில் ஏறி இறங்கவும் முடிகிறது” என்கிறார்.
 
படங்கள்: ஏ.டி.தமிழ்வாணன்

தமிழ் மேட்ரிமோனி.காம் - தமிழர்களின் திருமண இணையத்தளம் - பதிவு இலவசம்!

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
 • 23-10-2018

  23-10-2018 இன்றைய சிறப்பு படங்கள்

 • longestseabridge

  உலகில் எங்கும் இல்லாத தனிச்சிறப்புடன் கட்டி முடிக்கப்பட்ட உலகின் நீளமான கடல் பாலம்

 • delhi_strikepetrol18

  டெல்லியில் பெட்ரோல் பங்குகள் ஸ்டிரைக்: கால் டாக்சி, ஆட்டோ சேவைகள் முடக்கம் !

 • solarcar_race

  சூரிய மின்சக்திகளால் இயங்கும் கார்களுக்கான பந்தயம் சிலி நாட்டில் கொண்டாட்டம்!

 • hondurans_americatrump

  ஹோண்டராஸில் இருந்து அமெரிக்கா நோக்கி நடைபயணம் மேற்கொள்ளும் அகதிகள் !

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்