SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

நினைவு நல்லது வேண்டும்

2018-01-10@ 15:00:43

சிறுவர்  முதல் பெரியவர் வரையிலும் ஏதாவது ஒரு வகையில் நினைவாற்றலை இழந்து  விடுகிறோம். சாவியை எங்கே வைத்தோம். பர்ஸை எங்கு வைத்தோம் என்று தேடாத  மனிதர்களே கிடையாது. அலைபேசியை வேறு இடத்தில் வைத்து மறந்து விட்டால் மிஸ்டு கால் கொடுத்து எளிதாக கண்டுபிடிக்கும் நாம். நம் நினைவாற்றலை கண்டுபிடிக்க முடியாமல் தவிக்கிறோம். ‘நல்லாதான் படிச்சான், கேட்ட கேள்விக்கெல்லாம் சரியாத்தான் பதில் சொன்னான், ஆனா பரிட்சையில கோட்டை விட்டுட்டானே’ என்று தனது மகன், மகள் குறித்து கவலைப்படாத  பெற்றோர்களே இல்லை.

ஒரு சிலர், சார் நான் மறந்துவிடுவேன் கொஞ்சம் ஞபகப்படுத்த ஒரு மிஸ்ட்கால் கொடுங்களேன்’ என்று தனது ஞாபக மறதியை எளிதாக  கையாள்பவர்களும் உண்டு. அப்படி கேட்பது கூட நம்மை நாமே அவமானப்படுத்திக்  கொள்ளும் செயலாகும். இன்னும் ஒரு சிலர் தனது அலைபேசியில் அலாரம் வைத்துக்  கொள்வார்கள். இன்னும் ஒரு சிலர் அன்றைக்கு என்னென்ன வேலைகள் செய்ய  வேண்டும். யார் யாரை சந்திக்க வேண்டும் எந்த வேலையை முடிக்க வேண்டும் என்று  ஒரு துண்டுச்சீட்டில் எழுதிவைத்துக் கொண்டு அதன்படி செய்பவர்களும் உண்டு.  அதற்கு காரணம் நினைவாற்றல் குறைவுதான்.

நினைவாற்றலை சரி செய்ய மருத்துவம் என்ன சொல்கிறது பார்ப்போமா… கஷ்டப்பட்டு  படித்தப் பாடத்தை மாணவர்கள் மறந்து விடுகிறார்களா? கவலை வேண்டாம்  அவர்களுக்கு தூதுவளை இலைகள் 3 சாப்பிட்டு வந்தால் நினைவாற்றல் பெருகும்.மஞ்சள் கரிசலாங்கண்ணியை அடிக்கடி உணவுடன் சேர்த்தோ தனித்தோ தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் நினைவாற்றல் மட்டுமல்ல அழகும் கூடும்.ஐந்து கிராம் வல்லாரையுடன் ஒரு அக்ரூட் பருப்பையும் கலந்து ஒரு குவளை நீர் சேர்த்துப் பருகினால் அடடே பல விஷயங்களை நினைவுக்குவரும்.அடுத்தவர்கள்  வியக்கும் வண்ணம் அப்டேட்டாகவே இருக்கலாம். கர்ப்பிணிப்  பெண்கள் ஐந்து கிராம் வல்லாரையுடன் ஒரு அக்ரூட் பருப்பையும் கலந்து ஒரு  குவளை நீர் சேர்த்துப் பருகிவந்தால் குழந்தையின் மூளை வளர்ச்சிக்கு உதவும்.

மூலிகை மருத்துவர் சக்தி சுப்ரமணியம்

தமிழ் மேட்ரிமோனி.காம் - தமிழர்களின் திருமண இணையத்தளம் - பதிவு இலவசம்!

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
 • tokyo_olympic_2020

  டோக்கியோ 2020 ஒலிம்பிக் மற்றும் பாராலிம்பிக்ஸ் போட்டிக்கான அதிகாரப்பூர்வ சின்னங்கள் வெளியீடு!!

 • kandhan_savadi11

  கந்தன்சாவடியில் கட்டுமான பணியின் போது சாரம் சரிந்து விபத்து : 2 பேர் பலி ; பலர் படுகாயம்

 • LosAngelesSuperMarketshot

  லாஸ் ஏஞ்சலஸ் நகரின் சூப்பர் மார்க்கெட் கடைக்குள் துப்பாக்கிச் சூடு: ஒருவர் பலி

 • boataccident_19dead

  பிரான்சன் படகு விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு மலர் வளையம் வைத்து கண்ணீர் மல்க அஞ்சலி

 • intel_beer_fes

  சர்வதேச பீர் திருவிழா : கலை நிகழ்ச்சிகள், வான வேடிக்கைகள் உடன் 1300 வகையான பீர்கள் விழாவில் அறிமுகம்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்