SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

டெங்கு காய்ச்சல் தப்பிக்க வேண்டுமா?

2017-12-06@ 14:20:10

நன்றி குங்குமம் டாக்டர்

தமிழகம் முழுவதும் நாளுக்கு நாள் டெங்கு காய்ச்சல் பரவி வருகிறது.  பச்சிளம் குழந்தை முதல் வயதானவர்கள் என ஆயிரக்கணக்கானவர்கள் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ளனர். போதிய முன் ஏற்பாடுகள் இல்லாததாலும்   உள்ளாட்சி தேர்தல் நடைபெறாததாலும் ஊராட்சி மற்றும் நகராட்சி பகுதிகளில் துப்புரவு பணிகள் முடக்கப்பட்டிருப்பதே கொசு உற்பத்திக்கு காரணம் என அரசியல் கட்சிகள் குற்றம்சாட்டி வருகின்றனர். அரசு தரப்பில் டெங்கு காய்ச்சல் பரவாமல் இருக்க பல்வேறு நடவடிக்கை எடுக்கப்படுவதாக கூறப்பட்டாலும்  கூட மக்கள் முன்னெச்சரிக்கையாக இருப்பதற்கு சில வழிமுறைகளை கடைபிடிக்க வேண்டும் என்று அறிவுறுத்தப்படுகிறது. டெங்கு காய்ச்சலைத் தடுக்க நிலவேம்பு கஷாயம் தமிழகத்தில் உள்ள அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் இலவசமாக வழங்கப்பட்டு வருகிறது. அனைவரும் நிலவேம்பு கஷாயம் குடிக்கவேண்டும் என்று மருத்துவர்கள் அறிவுறுத்தி வருகிறார்கள்.

பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்னதாக சித்த வைத்திய முறையில் காய்ச்சலுக்காக கண்டுபிடிக்கப்பட்ட நிலவேம்பு கஷாயம் காய்ச்சலை குணப்படுத்துவதோடு நோய் எதிர்ப்புச் சக்தியை அளிக்கிறது. ஆனால் சமூக வலைத்தளங்களில் நிலவேம்பு கஷாயம் குறித்து பல கருத்துகள் சொல்லப்படுகின்றன. இதனால் மக்களுக்கு பல்வேறு சந்தேகங்கள் எழுந்துள்ளன. மக்களின் சந்தேகங்களை விளக்கும் வகையில் தமிழ்நாடு சித்த மருத்துவ ஆலோசனைக் கூட்டத்தில் பேசிய மருத்துவர் கு.சிவராமன் கூறுகையில்... “சித்த மருத்துவர்கள் 64 வகை காய்ச்சலை பிரித்தறிந்து சிகிச்சை தந்துள்ளனர். டெங்கு எனும் வைரஸ் பரிச்சயம் இல்லாதபோதும் டெங்குவின் குறிகுணங்களை ஒத்த பித்த காய்ச்சலுக்கு மிக அதிகப் பயனாகும் நிலவேம்புக் குடிநீர்தான் தற்போது தமிழகமெங்கும் டெங்குக்கான முதல் நிலைத் தேர்வாக சித்த மருத்துவத்தில் இருக்கிறது.

2006ம் ஆண்டில் வந்த சிக்குன்குனியாவுக்கும் இந்த கஷாயம் பயன்பட்டு வந்ததையும் அரசு மருத்துவ மனைகள் மூலம் இது விநியோகிக்கப்பட்டு கட்டுப்பாட்டுக்கு வந்ததையும் நாம் அறிவோம். மழைக்காலங்களில் காய்ச்சல் வருவதற்கு அதிக வாய்ப்பு உள்ளது என்பதால் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் எடுத்துக்கொள்ளலாம். காய்ச்சல் தொடங்குகிறது என்றால் பெரியவர்கள் 50 மில்லி லிட்டர் வரை இரு வேளை உணவுக்கு முன் காலை, மாலை எடுத்துக்கொள்ளலாம்.  3 வயதுக்குட்பட்டோருக்கு 15 முதல் 30 மில்லி லிட்டர் வரை கொடுக்கலாம். மருத்துவமனைக்குச் சென்று ஆலோசனை பெறவேண்டும். இதே போன்று ஆடாதோடைச்சாறு, ஆடதோடை மணப்பாகு சாறு, பப்பாளிச் சாறு போன்றவற்றை மருத்துவரின் ஆலோசனைப்படி எடுத்துக் கொண்டால் டெங்கு காய்ச்சலில் இருந்து நம்மை பாதுகாத்துக்கொள்ளலாம். மருந்துக்கடைகளில் வாங்கக்கூடிய நிலவேம்புப் பொடிகள் தரமானதாக உள்ளதா அரசு சான்றிதழ் பெற்றதா என்று உறுதிப்படுத்திய பிறகு பயன்படுத்த வேண்டும். முடிந்த அளவிற்கு வீட்டினுள் தண்ணீர் தேங்கவிடாமல் பார்த்துக்கொள்வது நல்லது. காய்ச்சலில் இருக்கும்போது இனிப்பான உணவு வகைகளை தவிர்த்து கசப்பான உணவு வகைகளை எடுத்துக்கொள்வது நல்லது” என்கிறார்.

- ஜெ.சதீஷ்

தமிழ் மேட்ரிமோனி.காம் - தமிழர்களின் திருமண இணையத்தளம் - பதிவு இலவசம்!

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
 • 22-07-2018

  22-07-2018 இன்றைய சிறப்பு படங்கள்

 • 21-07-2018

  21-07-2018 இன்றைய சிறப்பு படங்கள்

 • DryingClothingfestival

  சீனாவில் வருடாந்திர உலர்த்தும் ஆடை திருவிழா: பாரம்பரிய ஆடைகளை நெய்து விழாவை சிறப்பித்த பெண்கள்

 • unmanedbookshopchina

  சீனாவின் அதிநவீன தொழில்நுட்பத்துடன் கூடிய மிகப்பெரிய ஆளில்லா புத்தக நிலையம் திறப்பு

 • newyork_steam_explosion

  நீராவி குழாய் வெடித்து சிதறியதில் புகை மண்டலமாக காட்சியளித்த நியூயார்க் நகரம்!

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்