SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

Urban Tree

வெரைட்டி ரைஸுக்கு நோ சொல்லுங்க!

2017-11-14@ 14:54:53

நன்றி குங்குமம் டாக்டர்


சமைப்பது ஈஸி, சாப்பிடுவதற்கு டேஸ்டி என்று இரண்டு பக்கமும் ஸ்கோர் பண்ணும் வெரைட்டி ரைஸுக்கு இன்று ரசிகர்கள் அதிகம். அதெல்லாம் சரிதான்... வாரத்தின் பெரும்பாலான நாட்கள் நம் உணவுப்பட்டியலில் இடம்பிடிக்கும் இந்த வெரைட்டி ரைஸ் சத்துமிக்கதுதானா என்று கேட்டால், ‘இல்லவே இல்லை’ என்று பலமாக மறுக்கிறார்கள் உணவியல் நிபுணர்களும், மருத்துவர்களும். வெரைட்டி ரைஸும் ஜங்க் ஃபுட்டுக்கு இணையான ஓர் உணவுதான் என்கின்றன ஆராய்ச்சிகளும். வெரைட்டி ரைஸில் அப்படி என்ன பிரச்னை என்று உணவியல் நிபுணர் கோமதி கௌதமனிடம் கேட்டோம்...

‘‘சாதாரணமாக நாம் செய்யும் சாம்பார், ரசம், கூட்டு, பொறியல், கீரைகள் ஆகியவற்றில் நம் உடலுக்குத் தேவையான அனைத்து சத்துக்களும் நிறைந்துள்ளன. இவற்றைச் செய்ய நமக்குக் குறைவான எண்ணெயே பயன்படுத்துகிறோம். ஆனால், வெரைட்டி ரைஸ் வகைகள் செய்ய, அதன் சுவைக்காக அதிகமான எண்ணெய் சேர்க்கிறோம். இதுபோல், அதிகமான எண்ணெய் சேர்ப்பதால்தான் அதன் சுவை கூடி நமக்கு மிகவும் பிடித்துவிடுகிறது. குழந்தைகளும் சாம்பார், ரசம் போன்ற உணவுகளை விட வெரைட்டி ரைஸ்களை அதிகம் விரும்புவதற்கும் முக்கியக் காரணம் இது.
குழந்தைகளுக்கு மிகப் பிடித்த உணவு என்பதால் பெற்றோர்களும் வாரத்தில் நான்கு நாட்களாவது அதையே செய்து கொடுக்கின்றனர்.

காலை வேளைகளில் சமைக்க எளிதானதாகவும் இருப்பதால் பெரியவர்களாலும் இது அதிகம் விரும்பப்படுகிறது. உண்மையில், சமைக்க எளிதானது என்பதைத் தவிர வெரைட்டி ரைஸில் வேறு எந்தவொரு நன்மையும் நமக்குக் கிடைப்பதில்லை.’’கடைகளில் கிடைக்கும் வெரைட்டி ரைஸ் பொடிகளின் தரம் பற்றி...‘‘பொதுவாக நாம் வீட்டில் செய்யும் வெரைட்டி ரைஸ் உணவுகளே உடலுக்கு ஆரோக்கியத்தைத் தராது. இதுதான் எதார்த்தம். நிலைமை அப்படி இருக்க, வணிக நோக்கத்துக்காக கடைகளில் கிடைக்கும் வெரைட்டி ரைஸ் பாக்கெட் பொடிகள் என்ன தரத்தில் இருக்கும் என்பதைச் சிந்தித்துப் பாருங்கள்.

சுவைக்காகவும், நீண்ட காலம் கெடாமல் இருக்கவும் அதிகளவில் ரசாயனங்கள் சேர்த்தே அந்த பாக்கெட் பொடிகள் பதப்படுத்தப்பட்டிருக்கும். இப்படி அதிகப்படியான ப்ரிஸர்வேட்டிவ்கள் கலக்கப்பட்டிருக்கும் பொடிகளால் உணவு தயார் செய்யும்போது, அதனால் பல கெடுதல்கள் ஏற்படும். பாக்கெட் பொடிகளால் தயாராகும் வெரைட்டி ரைஸை குழந்தைகள் தொடர்ந்து உண்ணும்போது அது உடலுக்கு பல வகைகளில் பிரச்னைகளை ஏற்படுத்தும். உடல் பருமன், பி.சி.ஓ.டி, நீரிழிவு என இன்று அதிகரித்துவரும் பிரச்னைகளுக்கு கடைகளில் கிடைக்கும் பாக்கெட் வெரைட்டிகளும் முக்கிய காரணமாக இருக்கிறது.

அதிகமாகப் பதப்படுத்தப்பட்ட பாக்கெட் பொடிகளை தொடர்ந்து உபயோகிக்கும்போது அது புற்றுநோய் போன்ற தீவிர நோய்களையும் ஏற்படுத்தும் அபாயம் உண்டு. இந்த வகை Ready to eat பொருட்களால் உடலில் கெட்ட கொலஸ்ட்ரால் அதிகரித்து, உடல்நலக் குறைவை ஏற்படுத்தும். இதேபோல, பாக்கெட் வெரைட்டி ரைஸ் பொடிகளைப் போலவே பாக்கெட்டுகளில் அடைக்கப்பட்டிருக்கும் உணவுகளை, தின்பண்டங்களை குழந்தைகளுக்கு கொடுப்பதை அறவே தவிர்ப்பதும் நல்லது. முடிந்தவரை வீட்டிலேயே அவர்களுக்கு சமைத்துக் கொடுப்பதே உடல் ஆரோக்கியத்தைப் பாதுகாக்கும்.’’

சாம்பார், ரசம், கீரை போன்ற உணவுகளால் கிடைக்கும் உடல் ஆரோக்கியம் என்ன?

‘‘சாம்பார், கீரை போன்ற உணவுகளில் நாம் பருப்புகளைப் பயன்படுத்துகிறோம். இது உடலுக்குத் தேவையான சத்துக்களை நமக்கு அளிக்கிறது. கூட்டு, மோர்க்குழம்பு, காரக்குழம்பு, மசியல் என அனைத்துப் பருப்புகளையும் மாறி மாறி உண்ணுவதால் அனைத்து பருப்புகளின் பயனும் நமக்குக் கிடைக்கிறது.
இதுபோன்ற உணவுகளில் எண்ணெய் பயன்படுத்துவதும் மிகக் குறைவு.

சிறிது நேர அவகாசம் அதிகம் தேவைப்பட்டாலும் உடலுக்கு ஆரோக்கியமான உணவுகளை உண்ணப் பழக வேண்டும். மேலும், குழந்தைகளுக்கு ஏற்றவாறு காரம் குறைத்து சமைத்தால் அவர்களும் விரும்பி உண்ணத் தொடங்குவார்கள். இதனால், காய்கறிகளையும், பழ வகைகளையும் அவர்களுக்கு பழக்கப்படுத்த முடியும். சிறு வயதில் ஏற்படும் உடல் பருமன் போன்ற பிரச்னைகளிலிருந்தும் தப்பலாம்.’’

வெரைட்டி ரைஸால் புரதச்சத்து பற்றாக்குறை-அதிர்ச்சி ஆய்வு

‘புரதச்சத்து பற்றிய இந்தியர்களின் தவறான நம்பிக்கைகள்’ என்ற தலைப்பின் கீழ், சமீபத்தில் இந்திய சந்தை ஆய்வு மையம்(IMRB) சமீபத்தில் ஒரு ஆய்வை நடத்தியது. இந்திய பெருநகரங்களில் மேற்கொள்ளப்பட்ட இந்த ஆய்வின் முடிவில், முக்கியமாக சென்னை மாநகர மக்கள் தொகையில் 84 சதவீதத்தினர் புரதச்சத்து குறைபாடு உடையவர்களாக இருப்பது கண்டறியப்பட்டது. பள்ளி, கல்லூரி, அலுவலகம் செல்லும் 1,800 பேரை மாதிரிக்கு எடுத்துக்கொள்ளப்பட்டு ஆய்வு மேற்கொண்டதில், இந்த உண்மை தெளிவாகி இருக்கிறது.

இவர்களில் பெரும்பாலானோர் வெரைட்டி ரைஸ் பிரியர்கள் என்பது தெரிந்துதான் இந்த எச்சரிக்கையை ஆய்வாளர்கள் கூறியிருக்கின்றனர். ‘இந்தியர்களில், கிட்டத்தட்ட 73 சதவீதம் புரதச்சத்து குறைபாடு உடையவர்களாக, அதாவது மக்கள் தொகையில் மூன்றில் ஒரு பகுதியினர் தங்கள் உணவில் போதுமான புரதச்சத்தை சேர்த்துக் கொள்வதில்லை. பெருநகர மாணவர்களில் 10 சதவீதம் பேர் கூட போதுமான புரதச்சத்தை எடுத்துக் கொள்வதில்லை என்கிறார்கள் உணவியல் நிபுணர்கள்.

ஒரு நாளைக்கு ஒரு நபருக்கு அவரது எடையில் 1 கிலோவுக்கு 1 கிராம் அளவு புரதச்சத்து அவசியமாகிறது. இதற்கு குறைவாக எடுத்துக் கொள்ளும்போது அவர்களது வேலையை முழுமையாகச் செய்வதற்கான ஆற்றல் கிடைப்பதில்லை. சைவ உணவு சாப்பிடுபவர்கள் தாங்கள் எடுத்துக் கொள்ளும் காய்கறிகள், பழங்களில் புரதச்சத்து கிடைப்பதாகவும், அசைவப் பிரியர்களோ, மாமிசத்திலிருந்து கிடைப்பதாகவும் நம்பிக் கொண்டிருக்கிறார்கள். இது தவறானது. பருப்பு வகைகளிலேயே முழுமையான புரதச்சத்து இருக்கிறது என்றும் ஆய்வுக்குழுவினர் தெரிவிக்கின்றனர்.

- மித்ரா, என்.ஹரிஹரன்
படங்கள்: ஏ.டி. தமிழ்வாணன்
மாடல்: நன்மதி கதிர்வேலன்

தமிழ் மேட்ரிமோனி.காம் - தமிழர்களின் திருமண இணையத்தளம் - பதிவு இலவசம்!

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
 • puppies_formation12345

  சிலியில் சுதந்திர தின அணிவகுப்பு நிகழ்ச்சியில் பங்கேற்ற காவல்துறை நாய்க்குட்டிகள் !

 • philipines_landslidesaccid

  பிலிப்பைன்ஸ் நாட்டில் மீண்டும் நிலச்சரிவு - 29 பேர் உயிரிழப்பு !

 • tanzinaship_accid2121

  டான்ஸானியாவில் படகு விபத்து - உயிரிழந்தோர் எண்ணிக்கை 136 ஆக அதிகரிப்பு

 • iranshooting_festiv0000

  ஈரானில் ராணுவ அணிவகுப்பில் தீவிரவாதிகள் கொடூரத் தாக்குதல்

 • beerfestiv_german123

  ஜெர்மனியில் உலகளவில் பிரசித்தி பெற்ற பியர் திருவிழா - களைகட்டிய உற்சாகம் !

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்