SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

மலச்சிக்கலை போக்கும் ஆமணக்கு

2017-11-13@ 14:53:14

நமக்கு அருகில், எளிதில் கிடைக்கும் மூலிகைகள், கடைச் சரக்குகள், இல்லத்தில் அஞ்சறைப் பெட்டியில் உள்ள உணவுப் பொருட்களை கொண்டு பாதுகாப்பான பக்கவிளைவில்லாத பயனுள்ள எளிய மருத்துவத்தை பார்த்து வருகிறோம். அந்தவகையில், மலச்சிக்கலை சரிசெய்ய கூடியதும், வலி, வீக்கத்தை போக்கும் தன்மை கொண்டதுமான ஆமணக்கு நன்மைகள் குறித்து நலம் தரும் நாட்டு மருத்துவத்தில் காணலாம்.

அற்புதமான மருத்துவ குணங்களை கொண்டது ஆமணக்கு. இதிலிருந்துதான் விளக்கெண்ணெய் எடுக்கப்படுகிறது. ஆமணக்கு இலைகள் ஈரலை பலப்படுத்தும். பித்தத்தை சமன் செய்யும். மஞ்சள் காமாலைக்கு மருந்தாகிறது. வாதநோய்களை விலக்குகிறது. வீக்கத்தை வற்றச் செய்கிறது. வலியை தணிக்கிறது. இதன் எண்ணெய் பயன்படுத்தும்போது குடலில் இருக்கும் கிருமிகள் வெளியேறும். குடல் நோய்களை போக்கும். மலச்சிக்கலை சரிசெய்கிறது. தோல்நோய்களுக்கு மருந்தாகிறது.

விளக்கெண்ணெய்யை பயன்படுத்தி மலச்சிக்கலை போக்கும் மருந்து தயாரிக்கலாம். தேவையான பொருட்கள்: விளக்கெண்ணெய், நெல்லி வற்றல்.செய்முறை: ஒரு ஸ்பூன் நெல்லி வற்றல் பொடி எடுக்கவும். இதனுடன் ஒரு ஸ்பூன் ஆமணக்கு எண்ணை சேர்த்து கலந்து இரவு தூங்க போகும் முன்பு சாப்பிட்டுவர மலச்சிக்கல் பிரச்னை தீரும். ஆமணக்கு விதைகளை பயன்படுத்தி நீரடைப்பு, கல்லடைப்பால் ஏற்படும் வலியை போக்கும் முறை குறித்து பார்க்கலாம்.

ஆமணக்கு விதைகளை நசுக்கி பாத்திரத்தில் போட்டு சூடு செய்யவும். இதை இளஞ்சூட்டில் அடிவயிறு, இடுப்பின் மீது ஒத்தடம் கொடுக்கும்போது நீரடைப்பு, கல்லடைப்பால் ஏற்படும் வலி நீங்கும். சிறுநீரக கற்கள் கரையும். சிறுநீர் சரியாக செல்லாதபோது சிறுநீர்பாதையில் அடைப்பு, சிறுநீர் பையில் கற்கள் சேர்ந்திருப்பது, இதனால் ஏற்படும் இடுப்பு வலி, அடிவயிற்று வலி, கால்வலி, சிறுநீர் எரிச்சலுடன் செல்வது போன்ற பிரச்னைகள் தீரும்.  

ஆமணக்கு இலைகளை பயன்படுத்தி கீல்வாதத்துக்கான மருந்து தயாரிக்கலாம். தேவையான பொருட்கள்: நெய், விளக்கெண்ணெய், நல்லெண்ணெய், ஆமணக்கு இலை. செய்முறை: ஒரு பாத்திரத்தில் சிறிது நெய், விளக்கெண்ணெய், நல்லெண்ணெய் விடவும். இதனுடன் நறுக்கி வைத்திருக்கும் ஆமணக்கு இலைகளை போட்டு வதக்கி கட்டிவர மூட்டுவலி, வீக்கம், கீல்வாத பிரச்னைகள் சரியாகும். ஆமணக்கு உள், வெளி மருந்தாகி பயன் தருகிறது.

விளக்கெண்ணெயை பயன்படுத்தி தோலில் ஏற்படும் சிராய்ப்பு காயம், பாதவெடிப்புக்கான மருந்து தயாரிக்கலாம். தேவையான பொருட்கள்: மஞ்சள் பொடி, விளக்கெண்ணெய். செய்முறை: மஞ்சள் பொடி எடுக்கவும். இதனுடன் விளக்கெண்ணெய் விட்டு சேர்த்து கலந்து பூசிவர சிராய்ப்பு காயங்கள், பாதவெடிப்பு சரியாகும். பாதம் அழகு பெறும். வீக்கம், வலி இல்லாமல் போகும்.ஆமணக்கு இலை ஈரலுக்கு மருந்தாகிறது. ஆமணக்கு இலைகள் பாதியளவு, கீழ்க்காய் நெல்லி இலை பாதியளவு எடுத்து ஒரு சிறிய நெல்லிகாய் அளவுக்கு தினமும் ஒருவாரம் சாப்பிட்டுவர மஞ்சள் காமாலை சரியாகும். ஈரல் வீக்கம் கரைந்து போகும். தோலில் ஏற்படும் சுருக்கங்களை போக்கும் மருத்துவம் குறித்து பார்க்கலாம். குழந்தை பெற்ற தாய்மார்களின் அடிவயிற்றில் கோடுகள் போன்று ஏற்படும். புங்கன் எண்ணெய், விளக்கெண்ணெய் ஆகியவற்றை கலந்து தடவி வர இந்த கோடுகள் மறைந்து போகும்.


திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
 • anniversary

  நகராட்சி அமைப்பு தொடங்கப்பட்டதன் 50வது ஆண்டு விழா கொண்டாட்டம் : வெங்கையா நாயுடு, ஆளுநர் பங்கேற்பு

 • Britain_Rain

  பிரிட்டனில் பலத்த காற்றுடன் மழை: சாலைகளில் தண்ணீர் தேங்கி நிற்பதால் மக்கள் அவதி

 • 23-11-2017

  23-11-2017 இன்றைய சிறப்பு படங்கள்

 • indhiya_raanuvam111

  சீன ராணுவத்தினரை எதிர்கொள்ள இந்திய - சீன எல்லையில் 8000 படைகளை குவித்துள்ள இந்திய ராணுவம்

 • anbalagan_11

  சர்க்கரை விலை உயர்வை கண்டித்து திமுக மாவட்ட செயலாளர் அன்பழகன் தலைமையில் கட்சியினர் ஆர்ப்பாட்டம்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்