SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

Urban Tree

மழைக்கால நோய் தவிர்க்க எளிய உணவுகள்

2017-11-13@ 14:08:22

மழைக்காலங்களில் உணவு விஷயத்தில் கவனம் செலுத்தினால் நோய் அணுகாமல் பார்த்துக்கொள்ள முடியும். குறிப்பாக. நாம் அன்றாடம் உண்ணும் உணவு முறையை கொஞ்சம் மாற்றியமைத்துக்கொள்வது நல்லது. குளிர்ச்சியான பருவநிலையில் மின்விசிறியின் கீழே படுத்து தூங்குவது, ஜில்லென்று ஏ.சி-யை ஆன் பண்ணி உறங்குவது, குளிர்ந்த நீரில் முகம் கழுவுவது போன்றவற்றை செய்தால் தும்மல், மூக்கடைப்பு, தலைபாரம், தலைவலி சளித்தொல்லை என பிரச்னைகள் வரிசைகட்டி நிற்கும். இது சைனஸ், ஆஸ்துமா பிரச்னை உள்ளவர்களை வெகுவாக பாதிக்கும். அத்துடன், சுற்றுச்சூழல் மாசுபடுவதாலும் சிலருக்கு ஒவ்வாமை ஏற்பட்டு இதுபோன்ற பிரச்னைகள் ஏற்படும். அப்படிப்பட்டச் சூழலில் வெதுவெதுப்பான நீரில் முகம் கழுவ வேண்டும்; சூடான பானங்களையே அருந்த வேண்டும். காபி, டீ அருந்துவதற்கு பதில் இஞ்சி சாற்றுடன் தேன் கலந்து குடிக்கலாம்.

மழை நேரத்தில் வைரஸ் காய்ச்சல் வர வாய்ப்பு உள்ளது. எனவே, நிலவேம்பு குடிநீர், பப்பாளி இலைச்சாறு போன்றவற்றை அருந்தலாம். கைப்பிடி கறிவேப்பிலையுடன் 10 மிளகு, ஒரு டீஸ்பூன் சீரகம், சிறிய துண்டு இஞ்சி சேர்த்து அரைத்து, வெந்நீர் சேர்த்து வடிகட்டி தேன் கலந்து குடித்தாலும் காய்ச்சல் விலகும். 10 மிளகை வெறும் வாணலியில் வறுத்து அதில் தண்ணீர்விட்டு கொதிக்க வைத்து, வடிகட்டி குடித்து வந்தாலும் காய்ச்சல் கட்டுக்குள் வரும். காபி, டீக்கு பதிலாக காய்கறி சூப் அருந்தலாம். முற்றிய வெண்டைக்காயில் சூப் செய்து அருந்தினாலும், தக்காளியில் சூப் செய்து அருந்தினாலும் இருமல், ஜலதோஷம் விலகும்.

மழைக்காலங்களில் தலைக்கு குளிப்பதை பலரும் தவிர்த்துவிடுவது உண்டு. சிலர் சைனஸ், தலைபாரம், ஒற்றை தலைவலி என சில காரணங்களை சொல்லி தலைக்கு குளிக்காமல் தவிர்ப்பதுண்டு. இப்படி செய்வதால் தலையில் நோய் தொற்று ஏற்பட வாய்ப்பு உள்ளது. எனவே, தலைக்கு குளித்ததும் தலைமுடியை நன்றாக உலர்த்தி சாம்பிராணி புகைகாட்டுவது அல்லது வெந்நீரில் தலைக்கு குளிப்பதை வழக்கமாக்கிக்கொள்ள வேண்டும். நொச்சி, யூகலிப்டஸ் போன்ற இலைகளை தண்ணீரில் போட்டு கொதிக்கவைத்தும் குளிக்கலாம். இது, சளித்தொல்லையில் இருந்து நிவாரணம் தரும்.

இரவு உறங்கும்போது தலையணை உறையில் நொச்சி இலைகளை வைத்து உறங்குவதும் நல்லது. இது, மூக்கடைப்பு, தலைவலி போன்றவற்றிலிருந்து விடுதலை தரும். மழைக்காலங்களில் செரிமான கோளாறு ஏற்பட வாய்ப்பு உண்டு என்பதால், காலை உணவை உண்ணும்போதே எச்சரிக்கையாக இருக்கவேண்டும். கூடியவரை இட்லி, இடியாப்பம் போன்ற ஆவியில் வேகவைத்த உணவுகளை சாப்பிடுவது நல்லது. அவற்றுக்கு இணை உணவாக தூதுவளை சட்னி, இஞ்சி சட்னி செய்து சாப்பிடலாம். தோசை மாவுடன் முசுமுசுக்கை இலையை அரைத்து சேர்த்து தோசை சுட்டு சாப்பிட்டால் சளித்தொல்லை காணாமல் போகும். கல்யாண முருங்கை இலையையும் இதேபோல் தோசை மாவுடன் கலந்து தோசை சுட்டு சாப்பிடலாம்.

தேயிலையுடன் இஞ்சி, துளசி சேர்த்து, கொதிக்கவைத்து இனிப்பு சேர்த்து அருந்தலாம். வெதுவெதுப்பான நீருடன் எலுமிச்சை சாறு, தேன் கலந்து குடிக்கலாம்.  சளி பிரச்னை அதிகம் உள்ளவர்கள் மிளகு, சீரகம், துளசி, ஓமவல்லி, தூதுவளையை சேர்த்து, கொதிக்கவைத்து பனங்கற்கண்டு சேர்த்து அருந்தலாம். இது, தொண்டைக்கு இதமாக இருக்கும். அத்துடன், மூக்கடைப்பில் துவங்கி சளி தொடர்பான அனைத்து பிரச்னைகளுக்கும் தீர்வு கிடைக்கும். தொண்டை கட்டிக்கொண்டிருந்தால் வெந்நீருடன் உப்பு சேர்த்து வாய் கொப்பளிக்கலாம். துளசி இலைகளை ஊறவைத்த நீரை அருந்துவதும் நன்மை தரும்.

மழையில் நனைவதாலோ அல்லது குளிர்ந்த சூழலாலோ மூக்கை அடைத்துக்கொண்டு சளி பிடிப்பதுபோல இருக்கும். அதுபோன்ற சூழலில் மணத்தக்காளிக்கீரையை சூப் செய்து அருந்தினால் உடனடியாக ஜலதோஷம் விலகும். மணத்தக்காளி குளிர்ச்சியூட்டக்கூடியது என்றாலும், அதை சூப் வடிவில் செய்து சூடாக அருந்தினால் தொண்டை கரகரப்பு, மூக்கடைப்பு, ஜலதோஷம் போன்றவை குணமாகும். இதேபோல்  நாட்டு மருந்து கடைகளில் கிடைக்கும் `நறுக்குமூலம்’ எனப்படும் கண்டதிப்பிலியிலும் சூப் செய்து அருந்தலாம். சளி, இருமல் இருந்தாலும், இல்லாவிட்டாலும் வைட்டமின் - சி சத்து சிலருக்கு ஒத்துப்போகாது. ஆனால், வைட்டமின் - சி சத்து உள்ள ஆரஞ்சு, எலுமிச்சை போன்றவற்றில் ஜூஸ் செய்து அருந்தினால் எதுவும் செய்யாது.

மழைக்காலங்களில் மிக எளிதாக வயிற்றுப்போக்கு பாதிப்பு ஏற்பட வாய்ப்பு உண்டு. எனவே, அதிகளவில் நீர்ச்சத்து வெளியேறும் என்பதால் உடல் சோர்வு, நடக்க முடியாமை ஏற்படும். சுகாதாரமற்ற உணவு மற்றும் தண்ணீராலேயே வயிற்றுப்போக்கு ஏற்படுகிறது. வயிற்றுப்போக்கு ஏற்படாமல் தடுக்க, சுத்தத்தை கடைப்பிடிக்க வேண்டியது அவசியம். சாப்பிடுவதற்கு முன்னர் கை கழுவுவது, வெந்நீர் அருந்துவது போன்றவை வயிற்றுப்போக்கு ஏற்படாமல் இருக்க செய்யும். மேலும், காலரா, மஞ்சள்காமாலை போன்ற பாதிப்புகள் அசுத்தமான, சுகாதாரமற்ற தண்ணீரால் வர வாய்ப்புள்ளது என்பதால் காய்ச்சி ஆறவைத்த தண்ணீரை அருந்துவது நல்லது.

தமிழ் மேட்ரிமோனி.காம் - தமிழர்களின் திருமண இணையத்தளம் - பதிவு இலவசம்!

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
 • puppies_formation12345

  சிலியில் சுதந்திர தின அணிவகுப்பு நிகழ்ச்சியில் பங்கேற்ற காவல்துறை நாய்க்குட்டிகள் !

 • philipines_landslidesaccid

  பிலிப்பைன்ஸ் நாட்டில் மீண்டும் நிலச்சரிவு - 29 பேர் உயிரிழப்பு !

 • tanzinaship_accid2121

  டான்ஸானியாவில் படகு விபத்து - உயிரிழந்தோர் எண்ணிக்கை 136 ஆக அதிகரிப்பு

 • iranshooting_festiv0000

  ஈரானில் ராணுவ அணிவகுப்பில் தீவிரவாதிகள் கொடூரத் தாக்குதல்

 • beerfestiv_german123

  ஜெர்மனியில் உலகளவில் பிரசித்தி பெற்ற பியர் திருவிழா - களைகட்டிய உற்சாகம் !

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்