SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

Urban Tree

காய்ச்சலை தணிக்கும் நாய் துளசி

2017-11-10@ 15:21:17

நமக்கு அருகில், எளிதில் கிடைக்கும் மூலிகைகள், கடைச் சரக்குகள், இல்லத்தில் அஞ்சறைப் பெட்டியில் உள்ள உணவுப் பொருட்களை கொண்டு பாதுகாப்பான பக்கவிளைவில்லாத பயனுள்ள எளிய மருத்துவத்தை பார்த்து வருகிறோம். அந்தவகையில், கழுத்து வலியை போக்க கூடியதும், வயிற்றுப்போக்கை நிறுத்தவல்லதும், காய்ச்சலை தணிக்க கூடிய தன்மை கொண்டதுமான நாய் துளசியின் நன்மைகள் குறித்து நலம் தரும் நாட்டு மருத்துவத்தில் காணலாம்.  
புதினா இனத்தை சேர்ந்தது நாய் துளசி. அற்புதமான மருந்தாக விளங்கும் இது, பூஞ்சை காளான்கள், நுண்கிருமிகளை நீக்கும்.

நாய் துளசி இலைகளை பயன்படுத்தி காய்ச்சல், சளி, இருமலை குணப்படுத்தும் தேனீர் தயாரிக்கலாம். தேவையான பொருட்கள்: நாய் துளசி, மஞ்சள் பொடி, பனங்கற்கண்டு, பால்.செய்முறை: ஒரு பாத்திரத்தில் நீர் விடவும். இதனுடன், 20 மில்லி அளவுக்கு நாய் துளசி இலை சாறு, சிறிது மஞ்சள் பொடி, பனங்கற்கண்டு சேர்த்து கொதிக்க வைக்கவும். பின்னர், காய்ச்சிய பால் சேர்த்து வடிகட்டி குடித்துவர காய்ச்சல், சளி, இருமல் சரியாகும். தலைவலி, உடல் வலி இல்லாமல் போகும். நெஞ்சக சளியை கரைத்து வெளித்தள்ளும். வியர்வையை வெளியேற்றி காய்ச்சலை தணிக்கும்.

நாய் துளசி இலைகளை பயன்படுத்தி வயிற்று வலி, கழிச்சலை சரிசெய்யும் மருந்து தயாரிக்கலாம். தேவையான பொருட்கள்: நாய் துளசி, மோர், உப்பு.
செய்முறை: ஒரு டம்ளர் அளவுக்கு மோர் எடுக்கவும். இதனுடன் 20 முதல் 30 மில்லி நாய் துளசி, சிறிது உப்பு சேர்த்து கலந்து குடித்துவர கழிச்சல், சீதக்கழிச்சல் சரியாகும். வயிற்று கோளாறுகள் குணமாகும். உடலில் உள்ள நச்சுக்களை வெளியேற்றும். குடலுக்கு இதமான வலி நிவாரணியாகிறது. குடலை தூண்டி செயல்பட வைக்கிறது. ரத்தத்தை சீர் செய்கிறது.

நாய் துளசி இலைகளை பயன்படுத்தி தலைவலி, கழுத்து வலியை குணப்படுத்தும் தைலம் தயாரிக்கலாம். தேவையான பொருட்கள்: நாய் துளசி, தேங்காய் எண்ணெய், ஓமம். செய்முறை: ஒரு பாத்திரத்தில் தேங்காய் எண்ணெய் எடுக்கவும். இதனுடன், அரைத்து வைத்திருக்கும் நாய் துளசி இலை பசை, ஓமம் ஆகியவற்றை சேர்த்து தைலப்பதத்தில் காய்ச்சவும். இதை, தலைவலி, கழுத்து வலி, கைகால் வலி, சளி, காய்ச்சல் இருக்கும்போது மேல் பூச்சாக பயன்படுத்திவர வலி குறையும்.

நாய் துளசியானது வலி நிவாரணியாக விளங்குவதுடன், விஷ காய்ச்சலுக்கு அற்புதமான மருந்தாக விளங்குகிறது. இதை புகையாக பயன்படுத்தும்போது காய்ச்சலுக்கு காரணமான கொசுக்களை விரட்டுகிறது. நாய் துளசியை நெருப்பில் இட்டு புகைக்கும்போது கொசுக்கள் வராது. நெறிக்கட்டுவை குணப்படுத்தும் எளிய மருத்துவம் குறித்து பார்க்கலாம். நெறிக்கட்டு என்பது எலும்புகள் சேரும் இடத்தில் ஏற்படும். நோய் வரும்போது அதற்கு முன் அடையாளமாக நெறிக்கட்டு ஏற்படுகிறது. இதனால் வலி, வீக்கம், காய்ச்சல் உண்டாகிறது. நொச்சியை தேங்காய் எண்ணெய்யில் காய்ச்சி பூசிவர நெறிக்கட்டு சரியாகும். வெகு விரைவில் வலி மறையும்.

தமிழ் மேட்ரிமோனி.காம் - தமிழர்களின் திருமண இணையத்தளம் - பதிவு இலவசம்!

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
 • puppies_formation12345

  சிலியில் சுதந்திர தின அணிவகுப்பு நிகழ்ச்சியில் பங்கேற்ற காவல்துறை நாய்க்குட்டிகள் !

 • philipines_landslidesaccid

  பிலிப்பைன்ஸ் நாட்டில் மீண்டும் நிலச்சரிவு - 29 பேர் உயிரிழப்பு !

 • tanzinaship_accid2121

  டான்ஸானியாவில் படகு விபத்து - உயிரிழந்தோர் எண்ணிக்கை 136 ஆக அதிகரிப்பு

 • iranshooting_festiv0000

  ஈரானில் ராணுவ அணிவகுப்பில் தீவிரவாதிகள் கொடூரத் தாக்குதல்

 • beerfestiv_german123

  ஜெர்மனியில் உலகளவில் பிரசித்தி பெற்ற பியர் திருவிழா - களைகட்டிய உற்சாகம் !

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்