SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

உடலுக்கு குளிர்ச்சி தரும் மருத்துவம்

2017-06-19@ 14:19:34

நமக்கு எளிதில், அருகில் கிடைக்க கூடிய மூலிகைகள், வீட்டில் வைத்திருக்கும் உணவுப்பொருட்களை கொண்டு பாதுகாப்பான, பயனுள்ள, பக்கவிளைவில்லாத எளிய மருத்துவத்தை பார்த்து வருகிறோம். கோடைகாலத்தில் உள் உறுப்புகள், உடலின் மேல் பகுதியில் பல்வேறு பிரச்னைகள் ஏற்படுகின்றது. செம்பருத்தி, திருநீற்று பச்சை, நுங்கு,  ஆகியவற்றை பயன்படுத்தி இப்பிரச்னைகளை சரிசெய்யும் மருத்துவத்தை பார்க்கலாம்.

செம்பருத்தியை பயன்படுத்தி நீர் இழப்பை சமன் செய்து புத்துணர்வு தரும் பானம் தயாரிக்கலாம். தேவையான பொருட்கள்: செம்பருத்தி, அதிமதுரப்பொடி, பனங்கற்கண்டு. செய்முறை: ஒரு பாத்திரத்தில் செம்பருத்தி இதழ்களை எடுத்துக்கொள்ளவும். இதனுடன் அரை ஸ்பூன் அதிமதுரப்பொடி, பனங்கற்கண்டு சேர்த்து ஒரு டம்ளர் நீர்விட்டு கொதிக்க வைக்க வேண்டும். வடிகட்டி குடித்துவர வெயிலால் ஏற்படும் நீர்சத்து குறைபாடு சோர்வு, மயக்கம், தலைவலி ஆகியவை சரியாகும். இதயநோய் இல்லாமல் போகும்.

பருத்தி இனத்தை சேர்ந்தது செம்பருத்தி. இதில் இரும்புச் சத்து, விட்டமின் சி, மினரல் உள்ளது. இதயத்துக்கு இதமான மருந்தாகிறது. குளிர்ச்சி தரக்கூடியது. ரோஜா, தாமரையை போன்ற மருத்துவ குணங்களை கொண்டது. வெந்தயத்தை பயன்படுத்தி ஆசனவாயில் ஏற்படும் எரிச்சல், கடுப்பை போக்கும் மருந்து தயாரிக்கலாம். தேவையான பொருட்கள்: வெந்தயம், சோம்பு, கடுக்காய் பொடி, பனங்கற்கண்டு.

செய்முறை: ஊறவைத்த வெந்தையத்தை நீருடன் எடுக்கவும். சிறிது சோம்பு, அரை ஸ்பூன் கடுக்காய் பொடி, பனங்கற்கண்டு சேர்த்து நீர்விட்டு கொதிக்க வைக்க வேண்டும். இதை வடிகட்டி காலை மாலை வகுடித்துவர ஆசனவாய், சிறுநீர்தாரையில் ஏற்படும் எரிச்சலை போக்குகிறது. மலச்சிக்கல் சரியாகும்.  உணவுக்காக பயன்படுத்தும் வெந்தயம் இரும்பு சத்து கொண்டது. மலச்சிக்கலை போக்க கூடியது. சோம்பு சிறுநீர் பெருக்கியாக விளங்குகிறது. ரத்தபோக்கை தடுக்க கூடியது. உயர் ரத்த அழுத்ததை போக்குகிறது. வலி, வீக்கத்தை கரைக்க கூடியது.

திருநீற்று பச்சையை பயன்படுத்தி உடல் எரிச்சலை போக்கும் மருத்து தயாரிக்கலாம். திருநீற்று பச்சை, கொத்துமல்லி, பனங்கற்கண்டு.
செய்முறை: திருநீற்று பச்சை செடியின் பூக்கள், விதைகள், இலைகளை எடுத்துக்கொள்ளவும். இதனுடன் கொத்துமல்லி, சிறிது பனங்கற்கண்டு சேர்த்து நீர்விட்டு கொதிக்க வைக்கவும். இதை வடிகட்டி குடித்துவர உள் உறுப்புகளின் அழற்சியை போக்கும்.

நோய் நீக்கியாக பயன்படுகிறது. உடலுக்கு குளிர்ச்சி தருகிறது. உடல் எரிச்சல் நீங்கும். சிறுநீர்தாரையில் ஏற்படும் எரிச்சலை போக்கும். காதுகளுக்கு சொட்டு மருந்தாக பயன்படுத்தும்போது காது நோய்கள் சரியாகும். பல்வேறு நன்மைகளை கொண்ட திருநீற்று பச்சை துளசி வகையை சேர்ந்தது. திருநீறு போன்ற மணம் கொண்டது. விதைகளை தேனீராக்கி குடிப்பதால் சிறுநீர் தாராளமாக வெளியேறும்.

சிறுநீர்தாரையில் ஏற்படும் தொற்றுக்களை போக்கும். பல்வேறு நோய்களுக்கு அற்புதமான மருந்தாகிறது. திருநீற்று பச்சை நல்ல மணத்தை கொடுக்க கூடியது. ஒவ்வொரு இல்லத்திலும் இருக்க வேண்டிய இது தும்பையை போன்ற பூக்களை கொண்டது. விதைகள் கடுகு போன்று இருக்கும். கோடைகாலத்தில் தோலில் ஏற்படும் அரிப்பு, வியர்குருவை போக்கும் மருந்தாக நுங்கு விளங்குகிறது. நுங்குவை சாப்பிட்டுவர உடல் குளிர்ச்சி அடையும். நுங்குவில் இருக்கும் நீரை எடுத்து பூசும்போது வியர்குரு மறையும். தோல் ஆரோக்கியம் அடையும்.

திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
 • 26-02-2018

  26-02-2018 இன்றைய சிறப்பு படங்கள்

 • 25-02-2018

  25-02-2018 இன்றைய சிறப்பு படங்கள்

 • jeyalalithabdystatue

  ஜெயலலிதாவின் 70வது பிறந்தநாளையொட்டி அதிமுக தலைமை அலுவலகத்தில் முழுஉருவ வெண்கல சிலை திறப்பு

 • SouthAfricaCapitalWater

  உச்சக்கட்ட வறட்சியை தொட்ட கேப் டவுன் நகரம்: தண்ணிரின்றி வறண்டு கிடக்கும் நிலங்கள்

 • somalia_bomb_blast

  சோமாலியாவில் இரட்டைக் கார் குண்டு தாக்குதல்: 18 பேர் உயிரிழப்பு

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்
X