SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

பாகற்காய்... பல கோளாறுகளுக்கு முடிவு கட்டும் அருமருந்து

2017-06-19@ 14:16:02

பாகற்காய்... இந்த பெயரை சொன்னவுடன் பலருக்கு குமட்டல் வந்துவிடும். சிலர் வாய் முழுக்க அதன் கசப்பு படர்ந்துவிட்டதுபோல உணர்வார்கள். பாகற்காய், அந்த அளவுக்கு வெறுத்து ஒதுக்கவேண்டிய காய் அல்ல. நமக்கு நன்மை தரும் பல அம்சங்கள் இதில் உள்ளன.  அவை இங்கே...

* புரோக்கோலியில் இருப்பதைவிட இரண்டு மடங்கு பீட்டா கரோட்டின் இதில் உண்டு. இந்த பீட்டா கரோட்டின்தான், நம் உடலுக்குள்  வைட்டமின் ஏ-வாக மாற்றப்பட்டு சேகரமாகும். இது, நமது கண், தோல் போன்றவற்றுக்கு நல்லது. பசலைக்கீரையில் இருப்பதைவிட இரண்டு மடங்கு கால்சியம் இதில் உண்டு. இது, நமது எலும்பு, பல் வளர்ச்சிக்கு உதவும். வாழைப்பழத்தில் உள்ளதைவிட இரண்டு மடங்கு பொட்டாசியம் இருக்கிறது. தசை வலிமை, நரம்பு மண்டல செயல்பாடு, இதய நலன் போன்றவற்றுக்கு பொட்டாசியம்  உதவும்.  

* இதில் சாரன்டின் (Charantin) என்ற வேதிப்பொருள் உள்ளது. ரத்தத்தில் உள்ள அதிக சர்க்கரையை இது குறைக்கும். இதேபோல், பாலிபெப்டைடு பி (Polypeptide P) என்ற இன்சுலின் பாகற்காயில் உள்ளது. இது சர்க்கரைநோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு இன்சுலின் மேம்பட உதவும். இது கலோரி குறைவான ஓர் உணவு. இதில் வைட்டமின் பி1, பி2, பி3 ,சி, மக்னீசியம், ஃபோலேட் (Folate), சிங்க், பாஸ்பரஸ், மாங்கனீஸ், நார்ச்சத்து போன்ற உடலுக்கு நன்மை செய்யும் பல சத்துகள் உள்ளன.

* இரைப்பை பிரச்னைகளுக்கு நல்ல மருந்து.  பாகற்காயை ஜூஸாக குடிப்பது குடலில் உருவாகும் புழுக்கள், ஒட்டுண்ணிகளை கொல்ல உதவும். ஒவ்வாமை, வீக்கம், கட்டிகளையும் பாகற்காய் போக்கும். இதன் விதைகள், இதய நோய்களிலிருந்து நம்மை காக்கும். தேவையற்ற கொழுப்புகளை எரித்து, இதய தமனி அடைப்பு ஏற்படுவதில் இருந்து காப்பாற்றும்.

* இதன் சாற்றை, எலுமிச்சை சாற்றில் கலந்து காலையில் வெறும் வயிற்றில் ஆறு மாத  காலம் குடித்துவர, முகப்பரு பிரச்னை நீங்கும். தோல் பிரச்னைகளான சிரங்கு, அரிப்பு, சொரியாஸிஸ், படர்தாமரை, அலர்ஜி போன்றவற்றுக்கு தீர்வு தரும். இதன் சாற்றை தயிரில் கலந்து தலையில் தடவி, சிறிது நேரம் கழித்து கழுவிவிட வேண்டும்.

இதை, தொடர்ந்து செய்தால், முடி பளபளப்பாக மாறும். இதன் சாற்றுடன்  சீரகத்தை அரைத்து பூசிவர, பொடுகு பிரச்னைகள் நீங்கும். இதன் சாற்றுடன்  வாழைப்பழத்தை அரைத்து தலையில் தேய்த்தால், தலை அரிப்பு நீங்கும். பாகற்காய் சாற்றோடு கொஞ்சம் சர்க்கரை சேர்த்து பேஸ்ட் மாதிரி செய்து தலையில் பூசி வர, முடிகொட்டுவது குறையும்.

வரன் தேட தமிழ் மேட்ரிமோனி, இன்றே பதிவு செய்யுங்கள் - பதிவு இலவசம்!

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • teacher_strike123

    சென்னையில் நடைபெற்ற இடைநிலை ஆசிரியர்கள் உள்ளிருப்பு போராட்டம் வாபஸ்..!

  • indo_fire_dead

    இந்தோனேஷியாவில் எண்ணெய் கிணற்றில் தீ : 21 பேர் பரிதாப பலி

  • hawai_volcano123

    ஹவாய் தீவு அருகே உள்ள எரிமலையில் சீற்றம்...ஆறாக ஓடும் எரிமலைக் குழம்பு!

  • aerospaceexpoberling

    பெர்லிங்கில் சர்வதேச ஏரோஸ்பேஸ் கண்காட்சி : பல்வேறு நாடுகளின் புதுமையான கண்டுபிடிப்புகள் காட்சிப்படுத்தப்பட்டன

  • accidentkushinagar

    உத்தரப்பிரதேச மாநிலம் குஷிநகரில் பள்ளிப்பேருந்து மீது ரயில் மோதிய விபத்தில் 11 மாணவர்கள் உயிரிழப்பு

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்