SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

டெல்லியிலிருந்து பறந்து வந்த இதயம்!

2017-06-16@ 15:10:58

நன்றி குங்குமம் டாக்டர்

நெகிழ்ச்சி...மகிழ்ச்சி...

ஓர் அசாதாரண அறுவை சிகிச்சை


ஹிதேந்திரன் - அபிராமி இதயம் மாற்று அறுவை சிகிச்சை முன்பு நடந்ததைப்போல, பரபரப்பு மிகுந்த அறுவைசிகிச்சை ஒன்று மீண்டும் நடந்து முடிந்திருக்கிறது. ஆனால், இம்முறை அது மிகவும் நீண்ட பயணமாக... இன்னும் அசாத்தியமான பயணமாக...கடந்த மார்ச் மாதம் 28-ம் தேதியன்று நடந்த சாலை விபத்தில் டெல்லி விமானப்படை வீரர் ஒருவர் தலையில் பலத்த காயங்களுடன் ராணுவ மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். மறுநாள் மூளைச்சாவு ஏற்பட்டு உயிரிழந்ததை அடுத்து, அவரின்  இதயம் மற்றும் பிற உடல் உறுப்புகளை அவரது குடும்பத்தார் தானம் அளிக்க முடிவு செய்தனர். அதே நேரத்தில் சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனை ஒன்றில் இதயம் செயல் இழந்த முதியவர் ஒருவருக்கு இதயம் தேவைப்பட்டதை அறிந்த மருத்துவர்கள் சென்னைக்கு இதயத்தை அனுப்ப ஆயத்தமானார்கள்.

இறந்தவரின் உடலில் இருந்து எடுக்கப்பட்ட இதயத்தை 4 மணிநேரத்துக்குள் பயனாளியின் உடலில் பொருத்த வேண்டும். புதுடெல்லிக்கும், சென்னைக்குமான தொலைவோ 2 ஆயிரத்து 184 கி.மீ. இந்த இக்கட்டான சூழலில், பிற்பகல் 3.15 மணிக்கு வீரரின் உடலிலிருந்து எடுக்கப்பட்ட இதயம் 15 நிமிடத்தில் விமான நிலையத்துக்கு எடுத்து வரப்பட்டது.கிட்டத்தட்ட 3 மணி நேர விமானப் பயணத்துக்குப்பிறகு சென்னை விமான நிலையத்திலிருந்து மருத்துவமனைக்கு 20 நிமிடங்களில் கொண்டு வரப்பட்டு, இதயம் செயலிழந்த நிலையில் இருந்த நோயாளிக்கு இதய செயலிழப்பு மற்றும் இதயமாற்று அறுவைசிகிச்சை நிபுணருமான சந்தீப் அட்டாவார் தன் மருத்துவ குழுவினரோடு இணைந்து வெற்றிகரமாக பொருத்தியிருக்கிறார்.

சினிமாவுக்கு இணையான பரபரப்பான இந்த இதய மாற்று அறுவை சிகிச்சை அனுபவம் பற்றி மருத்துவர் சந்தீப்பிடம் கேட்டோம்... ‘‘மிக நீண்ட தொலைவில் இருந்து ஓர் உறுப்பை எடுத்துவந்து, மாற்று அறுவை சிகிச்சை செய்வது நம் நாட்டில் இதுவே முதல்முறை. இந்த அசாதாரண சாதனையின் பின்னால் மாவட்ட ஆட்சியாளர்கள், காவல்துறை, தீயணைப்பு மற்றும் மீட்புத்துறை, பொதுப்பணித்துறை, போக்குவரத்துத்துறை, அரசு மற்றும் தனியார் மருத்துவமனை என பலரது ஒருங்கிணைந்த நுட்பமான திட்டமிடல் இருக்கிறது.அதனால்தான் இந்த மாபெரும் செயல் சாத்தியமாகி இருக்கிறது. புதுடெல்லி ராணுவ மருத்துவமனை, டெல்லி மற்றும் சென்னை போக்குவரத்து போலீஸ் போன்ற பல்வேறு அமைப்புகளுக்கு இடையில் அசாதாரண ஒருங்கிணைப்பு இல்லாவிட்டால் இந்த வெற்றிகரமான அறுவை சிகிச்சை நடந்திருக்க வாய்ப்பு இல்லை. எதிர்காலத்தில் ஏற்பட இருக்கும் ஒரு மருத்துவப் புரட்சிக்கும் இந்த சாதனை அடியெடுத்து வைத்துள்ளது’’ என்கிறார் நம்பிக்கையுடன்!

- என்.ஹரிஹரன்

தமிழ் மேட்ரிமோனி.காம் - தமிழர்களின் திருமண இணையத்தளம் - பதிவு இலவசம்!

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • 24-06-2018

    24-06-2018 இன்றைய சிறப்பு படங்கள்

  • kmkharippastatue

    சென்னையில் இந்திய ராணுவத்தின் முதல் தலைமைத் தளபதி கே.எம்.கரியப்பாவின் சிலை திறப்பு!

  • Stalinarrestvolunteersstirstir

    தி.மு.க. தொண்டர்களுடன் மு.க.ஸ்டாலின் கைது: தமிழகம் முழுவதும் பல்வேறு இடங்களில் சாலை மறியல்

  • president_kovindh_cuba123

    கியூபாவில் உள்ள பிடல் காஸ்ட்ரோ மற்றும் ஜோஸ் மார்டி நினைவிடத்தில் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் மரியாதை!

  • RePlantingCanada

    அழிந்துவரும் காடுகளை மீட்கும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ள கனடா நாட்டு மக்கள்: வருவாயும் கிடைப்பதால் மகிழ்ச்சி

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்