ஆரோக்கியமாக இருக்க சைவ உணவு சாப்பிடுங்க

Date: 2012-09-10@ 14:26:49

தி இந்தியன் வெஜிடேரியன் காங்கிரஸ் இன் அசோசியேஷன் மற்றும் தி சக்கால் ஜெயின் ஸ்ரீ சங்கா சதுர்மாஸ் சமிதி சார்பில் லாயிட்ஸ் சாலையில் உள்ள ஹேமமாலினி திருமண மண்டபத்தில் சைவ உணவின் முக்கியத்துவத்தை வலியுறுத்தும் விதமாக பல்வேறு வகையான ஓவியம், பெயின்டிங் மற்றும் சமையல் போட்டிகள் நடத்தப்பட்டது.

கே.ஜி முதல் 8ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு பெயின்டிங், ஃபேன்சி டிரஸ் உள்ளிட்ட போட்டிகளும், பெண்கள் மற்றும் கல்லூரி மாணவர்களுக்கு சமையல் போட்டியும் நடத்தப்பட்டது. இந்த போட்டிகளில் ஏராளமானோர் கலந்து கொண்டு அசத்தினர். இந்நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினர்களாக இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரரும், தேர்வுக்குழு தலைவருமான ஸ்ரீகாந்த், விளையாட்டு விமர்சகர் மோகன், கப்பல் படை அதிகாரி அமர் கே. மகாதேவன் ஆகியோர் கலந்து கொண்டனர்.

இதுகுறித்து முன்னாள் கிரிக்கெட் வீரர் ஸ்ரீகாந்த் கூறுகையில், ‘போட்டியில் கலந்து கொண்டவர்களின் அனைத்து படைப்புகளும் சிறப்பாக உள்ளது. அசைவ உணவை விட சைவ உணவுகளே உடலுக்கு ஆரோக்கியத்தை தருகிறது. காய்கறிகளால் உடலுக்கு பல்வேறு ஊட்டச்சத்துக்கள் கிடைக்கிறது. ஆகவே நாம் உண்ணும் உணவில் அதிகளவு காய்கறிகளை சேர்த்து கொள்ள வேண்டும்‘. என்றார்.

மோகன் கூறும்போது, ‘வெளி நாடுகளில் இருந்து சென்னைக்கு சுற்றுலா வருபவர்கள் சைவ உணவுகளை விரும்பி சாப்பிடுகின்றனர். சைவ உணவுகள் உடலுக்கு உறுதி தன்மை அளிக்கின்றன‘. இவ்வாறு அவர் கூறினார்.

Like Us on Facebook Dinkaran Daily News