SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

கொசுவால் இன்னோர் ஆபத்து

2017-03-20@ 15:19:57

நன்றி குங்குமம் டாக்டர்

வில்லங்கம் புதுசு

டெங்கு, மலேரியா, ஜிகா வரிசையில் தற்போது Japanese encephalitis என்ற தொற்றுநோய் ஆங்காங்கே பரவிவருகிறது. ‘அது என்ன ஜப்பானீஸ் என்சிபாலிடிஸ்’ என்று பொது நல மருத்துவர் தேவராஜனிடம் கேட்டோம்...‘‘பன்றிகளைக் கடிக்கும் கொசு மனிதனையும் கடிப்பதன் மூலம் பரவுவதுதான் ஜப்பானீஸ் என்சிபாலிட்டிஸ்.

முதன்முதலில் ஜப்பானில் கண்டுபிடித்ததால் இந்த பெயர் வந்தது. உலக சுகாதார மையத்தின் அறிக்கைப்படி ஆசிய நாடுகளில் வருடந்தோறும் 68 ஆயிரம் பேர் ‘ஜப்பானிஸ் என்சிபாலிடிஸ்’ தொற்றுநோயால் பாதிக்கப்படுகின்றனர்.

‘National vector borne disease programme தகவல்படி, தமிழகத்திலும் 36 பேருக்கு இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. பொதுவாக, 5 வயதுக்குட்பட்ட குழந்தைகள்தான் ‘ஜப்பானீஸ் என்சிபாலிடிஸ்’ காய்ச்சலால் அதிகம் பாதிக்கப்படுகின்றனர். சுகாதாரக் குறைவான இடங்களில் குழந்தைகள் விளையாடும்பொழுது அங்கே மேய்ந்து கொண்டிருக்கும் பன்றிகளைக் கடிக்கும் கொசு, குழந்தைகளையும் கடிப்பதால் இந்த காய்ச்சல் ஏற்படுகிறது.

காய்ச்சலுடன் உடல்வலி, தலைவலி ஏற்பட்டு கொஞ்சம் கொஞ்சமாக நினைவிழப்பு ஏற்படும். இதன் பக்கவிளைவாக சில குழந்தைகளுக்கு வலிப்பு ஏற்படும். மிக அரிதாக மரணங்கள் சம்பவிக்கும் அபாயமும் உண்டு. அதனால், வீட்டைச் சுற்றி பன்றிகள் மேயாமலும், தண்ணீர் தேங்காமலும் பார்த்துக் கொள்ள வேண்டும். இதனால் கொசுக்கள் உற்பத்தியை கட்டுப்படுத்தலாம்.

சுற்றுப்புறத்தை தூய்மையாக வைத்திருத்தல், சுத்தமான குடிநீர் அருந்துதல், குழந்தைகளை தூய்மையான இடத்தில் விளையாட அனுமதிப்பது போன்ற முன்னெச்சரிக்கைகளை கடைப்பிடித்தாலே கொசுக்கள் மூலம் பரவும் இந்த நோயைத் தடுக்கலாம். குழந்தைக்கு ஒரு வயது ஆகும்போதே ‘ஜப்பானீஸ் என்சிபாலிடிஸ்’ தடுப்பூசியை போட்டுக் கொள்வதன் மூலமும் குழந்தைகளைப் பாதுகாக்கலாம்!’’

- என்.ஹரிஹரன்
படம்: ஆர்.கோபால்

buy naltrexone naltrexone implant removal what is ldn used for

வாழ்க்கைத் துணையை தேடுகிறீர்களா? தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
 • children_protestt11

  ஆர்.கே.நகர் தொகுதி தேர்தல் - பிரசாரத்துக்கு சிறுவர்களை ஈடுபடுத்தும் அரசியல் கட்சிகள்

 • 2500_type_idlyy

  உலக இட்லி தினம் - சென்னையில் 2500 வகையான இட்லிகளின் கண்காட்சி நடந்தது

 • 30-03-2017

  30-03-2017 இன்றைய சிறப்பு படங்கள்

 • FLIHJTarestre

  செம்மரக்கட்டை கடத்தலில் 6 மாதம் தலைமறைவான விமான பணிப்பெண் கைது: கொல்கத்தாவில் சிக்கினார்

 • farmersSUPPORtstuMAR

  விவசாயிகளுக்கு ஆதரவாக சென்னை மெரினாவில் மாணவர்கள் கடலில் இறங்கி போராட்டம்