SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

நீ நடந்தால் நான் அறிவேன்!

2018-04-19@ 12:37:28

நன்றி குங்குமம் டாக்டர்

டயாபட்டீஸ் மேக் இட் சிம்பிள்

கார்கள், சுற்றுலா ராக்கெட்டுகள்... இவையெல்லாம் இனி கற்பனைக் கதைகளுக்கான விஷயங்கள் மட்டுமே அல்ல. அறிவியல் தொழில்நுட்ப வளர்ச்சியின் பலனாக நம் கண்முன்னே நிகழவிருக்கும் அற்புதங்கள். இதுபோன்ற வான்வெளி விந்தைகளுக்கு நிகரான ஒரு விஷயமாக விஞ்ஞானிகள் கருதுவது ஸ்மார்ட் வாட்ச்சுகளைத்தான். ஆம். ஆப்பிள் வாட்ச், ஆண்ட்ராய்டு வேர், ஃபிட்பிட் போன்ற ஸ்மார்ட் கைக்கடிகாரங்கள் இனிவரும் காலத்தில் நீரிழிவை அறியவும் உதவும் என்பதே அந்த ஆச்சர்ய விஷயம்!

ஆப்பிள் வாட்ச் பயன்படுத்தும் 14 ஆயிரம் நபர்களிடம் செய்யப்பட்ட ஆய்வில் நீரிழிவு அறிதலுக்கான அடுத்தகட்ட நகர்வு உறுதியாகியுள்ளது. ஆரம்பநிலையிலேயே 85 சதவிகித துல்லியத் தன்மையோடு இது செயல்படும் என்பதும் குறிப்பிடத்தக்கது. ஸ்மார்ட் வாட்ச்சில் பொருத்தப்பட்டுள்ள ஒருவகை சென்சார் நரம்பு மண்டலத்தோடு இணைந்து செயல்படும்.

ஸ்மார்ட் வாட்ச் கட்டியிருப்பவரின் இதயத்துடிப்பு மற்றும் நடக்கும்போது எடுத்துவைக்கப்படும் அடிகள் ஆகிய டேட்டாக்கள் பதிவுசெய்யப்படும். ஆர்ட்டிஃபிசியல் இன்டெலிஜென்ஸ் என்கிற செயற்கை நுண்ணறிவுத் தொழில்நுட்பத்தின் வாயிலாக இந்த டேட்டாக்கள் பகுத்தறியப்படும்.
 
மனித உடலில் இதயமும் கணையமும் நரம்புமண்டலம் மூலம் பிணைக்கப்பட்டிருக்கின்றன. அதனால், நீரிழிவை நோக்கிச் செல்லும் ஒருவரின் இதய செயல்பாட்டிலும் மாற்றங்கள் நிகழ்கின்றன. இதனால் ஆரம்பநிலையிலேயே நீரிழிவை அறிந்து அதற்கேற்ப வாழ்க்கைமுறை மாற்றங்களைச் செய்துகொள்ள முடியும். அதுவும் ரத்தமின்றி, ஊசியின்றி, ஜஸ்ட் லைக் தேட்!

நீரிழிவை மட்டுமல்ல... கொலஸ்ட்ரால் அதிகரிப்பதைக்கூட எதிர்கால ஸ்மார்ட் வாட்ச்சுகளின் மூலம் 74 சதவிகிதத் துல்லியத்தோடு அறிய முடியும். உயர் ரத்த அழுத்தத்தை 81 சதவிகித துல்லியத்தில் கணக்கிட முடியும். தூக்கமின்மை பிரச்னையைக்கூட 83 சதவிகிதம் உறுதியாக உணர முடியும்.‘ஹெல்த் ஆஃப் கார்டியோகிராம்’ என்ற நிறுவனமும் கலிஃபோர்னியா சான்ஃபிராசிஸ்கோ பல்கலைக்கழகமும் இணைந்து இந்த ஸ்மார்ட் வாட்ச் மருத்துவத் தொழில்நுட்பத்தை இன்னும் துல்லியமாக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளன.

இன்றைய நிலையில் ஒருவருக்கு நீரிழிவு இருக்கிறதா என்பதை ரத்தப்பரிசோதனை இல்லாமலே ஸ்மார்ட் வாட்ச் மூலமாகவே 85 சதவிகிதத் துல்லியத்தில் கண்டுபிடித்துவிட முடியும். விரைவிலேயே இது 100 சதவிகித உறுதித்தன்மையை எட்டிவிடும். அதற்கான ஆராய்ச்சிகளே இப்போது முடுக்கிவிடப்பட்டுள்ளன. இதற்காக, இதுவரை 20 கோடி இதயத்துடிப்புகள் பதிவுசெய்யப்பட்டுள்ளன.

டைப் 2 வகை நீரிழிவை முன்கூட்டியே அறிவதால், ஏராளமான உடலியல் பின்விளைவுகளைத் தவிர்த்துவிட முடியும். பொருள் செலவையும், மருத்துவமனைகளில் செலவிட வேண்டிய நேரத்தையும் பெருமளவு குறைக்கவும் தவிர்க்கவும் முடியும்.

‘ஒரு துளி ரத்தம் போதும்’, ‘வலிக்கவே வலிக்காது’ என்பதுபோல ரத்த சர்க்கரை அளவைக் கண்டறிய உதவும் குளுக்கோமீட்டர்களில் நாளுக்கு நாள் முன்னேற்றம் ஏற்பட்டு வருகின்றன. எனினும், எதிர்காலத்தில் குளுக்கோ மீட்டர்களின் தேவையே இல்லாமல் போகும் வழியில் ஏராளமான தகவல்களை நமது ஸ்மார்ட் வாட்ச்சுகள் அளிக்கத் தொடங்கிவிடும். நமது கணிப்பொறி மட்டுமல்ல...

மருத்துவமனையிலுள்ள நமது பதிவுகளிலும் இந்த டேட்டாக்கள் ஆட்டோமேட்டிக்காக இடம் பெற்றுவிடும். இனி நாம் மருத்துவமனைக்குச் செல்லாவிட்டாலும், அங்கிருந்து போன் வரும்... ‘என்ன சார், காலையிலேயே ரகசியமா ஃப்ரிட்ஜைத் திறந்து ஒரு ரசகுல்லா சாப்பிட்டிருக்கீங்களே... சுகர் எகிறுது சார்!’ என்று!

டேட்டா பாக்ஸ்

* நீரிழிவுக்கு முந்தைய நிலையில் (ப்ரீ-டயாபட்டீஸ்) இருக்கும் 88 சதவிகிதத்தினருக்கு அதுபற்றித் தெரியாது.
* 'ஸ்மார்ட் வாட்ச் பயன்படுத்தத் தொடங்குவார்கள்’ என்று கணிக்கப்பட்டுள்ள நீரிழிவாளர்களின் அளவு: மொத்த நீரிழிவாளர்களில் 20 சதவிகிதம்.
* அமெரிக்காவில் ஓராண்டு காலத்தில் (2017) நீரிழிவு காரணமாகச் செய்யப்பட்ட செலவு: 245 பில்லியன் டாலர்.

- கோ.சுவாமிநாதன்

தமிழ் மேட்ரிமோனி.காம் - தமிழர்களின் திருமண இணையத்தளம் - பதிவு இலவசம்!

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
 • 24-01-2019

  24-01-2019 இன்றைய சிறப்பு படங்கள்

 • iraqbikersride

  ஈராக்கில் சகோதரத்துவத்தை வலியுறுத்தி இருசக்கர வாகன ஓட்டிகள் நாடு முழுவதும் சுற்றுப்பயணம்

 • niagarafallssnow

  கனடாவில் பனிபொழிவால் உறைபனியாக காட்சியளிக்கும் நயாகரா நீர்வீழ்ச்சி

 • SiddhagangaSivakumarasamy

  பெங்களூரு சித்தகங்கா மடாதிபதி சிவகுமாரசாமியின் உடல் நல்லடக்கம் : அமைச்சர்கள் பங்கேற்பு

 • govindpmawards

  பிரதமரின் தேசிய பாலர் விருதுகளை வழங்கினார் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்