SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

அறுவை சிகிச்சை இல்லாத அவசர சிகிச்சை!

2018-04-13@ 14:42:18

நன்றி குங்குமம் டாக்டர்

கேஸ் ஹிஸ்டரி


விபத்தில் சிக்கி, அதிக எண்ணிக்கையில் எலும்புகள் முறிந்துவிட்டால் அறுவை சிகிச்சை ஒன்றுதான் தீர்வு என்ற நிலை இருக்கிறது. பொதுமக்களிடம் மட்டுமல்லாமல், மருத்துவர்களிடமும் இந்த எண்ணமே இருக்கிறது. ஆனால், அறுவை சிகிச்சை எல்லா நேரங்களிலும் அவசியம் இல்லை.

மருத்துவத்தில் வேறு வழிகளும் இருக்கின்றன என்பதை நிரூபிக்கும் வகையில் சமீபத்தில் வெற்றிகரமான ஒரு மருத்துவ நிகழ்வு ஒன்று சென்னையில் நடந்திருக்கிறது. 80 வயது மூதாட்டி ஒருவரை அப்படி காப்பாற்றிய சம்பவத்தை நம்மிடம் பகிர்ந்துகொள்கிறார் அறுவை சிகிச்சை நிபுணர் ஜெயப்பிரகாஷ். இது மக்களுக்கும், மருத்துவர்களுக்குமே ஒரு பாடமாக இருக்கும் என்பதில் சந்தேகம் இல்லை.

‘‘சாலை விபத்து ஒன்றில் சிக்கிய மூதாட்டி ஒருவரை சமீபத்தில் எங்களிடம் கொண்டு வந்தனர். முதலுதவி கொடுத்த பின்னர் அவசர சிகிச்சைப் பிரிவுக்குக் கொண்டு சென்றோம். அப்பெண்மணியின் உடலை ஸ்கேன் எடுத்தபோது கழுத்துப் பகுதியில் இருந்த எலும்புகளில் மட்டும் 5 முறிவுகள் ஏற்பட்டிருந்தது தெரிந்தது. 7 விலா எலும்புகள், தோள்பட்டை எலும்புகள், காலர் எலும்புகளும் முறிந்திருந்தது.

மொத்தம் 20 எலும்புகளுக்குமேல் நொறுங்கியிருந்தன. முதுகுத்தண்டு அழுத்தம் அடைந்து, முதுகு எலும்புக்குள் ரத்தம் கசிய ஆரம்பித்திருந்தது. நுரையீரலும் வெடிப்பு ஏற்பட்டு அதற்குள்ளும் ரத்தப்போக்கு இருந்தது பெரிய சவாலாக இருந்தது.

இதுபோன்ற சிக்கலான நிலையில் அறுவை சிகிச்சைதான் செய்ய வேண்டியிருக்கும். இவர் மிகவும் வயதான பெண்மணி, அவருடைய எல்லா எலும்பு களும் வலுவற்ற நிலையில் வேறு இருந்தது. அதனால், இவருக்கு அறுவை சிகிச்சை செய்யாமலேயே குணப்படுத்தும் வழிகளை யோசித்தோம்.

இயற்கையாகவே நம் உடலுக்கு தானாக குணமடையும் சக்தி இருக்கிறது. உடலின் காயங்கள் குறிப்பிட்ட கால இடைவெளியில் தானாகவே ஆறிவிடும். மருத்துவத்தில் இது‘தெளிவுடன் செயலின்மை(Masterly Inactivity) ஒரு சிகிச்சைமுறை ஆகும். அதன்படி கழுத்தெலும்புக்கு ஒரு பிடிப்பான காலர் மாட்டி விட்டோம். முழு உடலையும் அசைவில்லாமல் பெல்ட் போட்டு படுத்த நிலையில், மூன்று வாரங்கள் வைத்திருந்தோம். நன்றாக ஆறும்வரை பொறுமையுடன் காத்திருந்தோம்.

இப்படியே அசையாமல் மூன்று வாரம் வைத்தபிறகு, ஸ்கேன் எடுத்துப் பார்த்ததில் அனைத்து எலும்புகளும் சேர்ந்திருந்தது. நுரையீரலில் இருந்த ரத்தக்கசிவு மற்றும் முதுகெலும்புகளில் இருந்த ரத்தமும் மறைந்துவிட்டது. பின்னர் நோயாளிக்கு பிஸியோதெரபி சிகிச்சை கொடுத்ததில் ஓரளவு நடக்க ஆரம்பித்தார். அதன்பிறகு அவரை டிஸ்சார்ஜ் செய்து வீட்டுக்கு அனுப்பி வைத்தோம்.

பெரும்பாலும் ஹோமியோபதி, நேச்சுரோபதி போன்ற மாற்று மருத்துவத்தில் மட்டுமே இதுபோன்ற அறுவைசிகிச்சை இல்லாத சிகிச்சைகளைச் செய்வதுண்டு. அலோபதி மருத்துவத்தில் எடுத்த உடனே அறுவை சிகிச்சை செய்வதும் நடக்கிறது. அந்த எண்ணத்தை இரண்டு தரப்பிலுமே மாற்றுவதாக அமைந்தது இந்த சம்பவம். இது எல்லோருக்கும் நம்பிக்கையும், பாடமும் அளிக்கும் ஒரு சிகிச்சையாகவும் இருக்கும்’’ என்கிறார் ஜெயப்பிரகாஷ்.

- என்.ஹரிஹரன்

தமிழ் மேட்ரிமோனி.காம் - தமிழர்களின் திருமண இணையத்தளம் - பதிவு இலவசம்!

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • srilanka_chri11

    கிறிஸ்தவர்களுக்கு உறுதுணையாக நாங்கள் நிற்போம் : இலங்கை தாக்குதலை கண்டித்து இந்தியாவின் பல்வேறு மத குழுக்கள் ஆர்ப்பாட்டம்

  • india_medals11

    ஆசிய தடகள சாம்பியன்ஷிப் போட்டி : 3 தங்கம், 8 வெள்ளி, 7 வெண்கல பதக்கங்களுடன் பதக்கப் பட்டியலில் இந்தியா 4வது இடம்!!

  • pudin_russiaa1

    வரலாற்றில் முதன்முறையாக ரஷ்ய அதிபர் புதினுடன், வடகொரிய அதிபர் கிம் ஜோங் உன் பேச்சுவார்த்தை

  • shadow_111

    பூஜ்ஜிய நிழல் தினம் ; பிர்லா கோளரங்கத்தில் பூஜ்ஜிய நிழல் அளவை காட்டும் விதமாக மாணவர்களுக்கு பல்வேறு நிகழ்வுகள் செய்து காண்பிப்பு

  • nigeriaaa_twins1

    இரட்டையர்களால் நிரம்பி வழியும் நைஜிரீய நகரம் !! : வியப்பூட்டும் புகைப்படங்கள்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்