SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

Urban Tree

ஆணுக்கு என்ன பிரச்னை?!

2018-02-23@ 11:39:29

நன்றி குங்கும டாக்டர்

‘‘ஒரு தனிப்பட்ட மனிதனின் ஆளுமை வளர்ச்சியானது அவனுடைய நடத்தை, சிந்திக்கும் தன்மை மற்றும் உறவுகளைக் கையாளும் தன்மையை வைத்துத்தான் தீர்மானிக்கப்படுகிறது. இந்த ஆளுமையை பரம்பரைத்தன்மையும், வளரும் சூழலும் தீர்மானிக்கிறது. கூட்டுக்குடும்ப முறை உடைந்து தனிக்குடும்பங்களின் பெருக்கம் மற்றும் தொழில்மயமாக்கலுக்குப் பின் ஆண், பெண் எதிர்பார்ப்பின் தன்மை மாறி வருகிறது.

திருமணத்துக்குத் தயாராகும் ஆண்கள் தொழில்முறை லட்சியங்கள் கொண்ட பெண்களை விரும்புகிறார்கள். வீட்டை மட்டும் கவனிக்கும் இல்லத்தரசிகள் இவர்களின் தேர்வாக இருப்பதில்லை. வீட்டு விவகாரங்கள், அரசியல், கிரிக்கெட், அண்மைச் செய்திகள் என எல்லா துறைகளிலும் தன்னோடு சரிசமமாக விவாதிக்கும் புத்தி சாதுர்யமான பெண்களை எதிர்பார்க்கிறார்கள்.

சமூக ஊடகங்களின் வருகைக்குப்பிறகு அர்த்தமுள்ள உறவுகளின் எண்ணிக்கை குறைந்து வருகிறது. இவற்றின் வாயிலாக உருவாகும் உறவுகளி்ல், பெரும்பாலும் ஆளுமைப் பண்புகள்தான் உறவின் நிலைத்தன்மையை தீர்மானிக்கிறது. சந்தேகக் கணவன்மார்களுக்கு வெளிப்படைத் தன்மையான மனைவிகளுடன் ஒத்துப்போவது கடினமாக உள்ளது.

இதனால் மிகவும் உணர்ச்சி வசப்படக்கூடியவர்களாகவும், பலவீனமாகவும், சுயமரியாதை இல்லாதவர்களாகவும் உருமாறி இவர்கள் தனக்கே சுய தீங்கு விளைவிப்பவர்களாகவும், தன் இணையை கொடுமைப்படுத்து பவர்களாகவும் ஆண்கள் உருமாறுகிறார்கள்.”

பெண்கள் புகார் பட்டியல் வாசிக்கும் அளவுக்கு, ஆண்களுக்கு என்னதான் பிரச்னை?

‘‘கூட்டுக் குடும்பமுறை உடைந்து தனிக்குடும்ப முறைக்கு மாறியபிறகு, தனியாக விடப்பட்ட குழந்தைகள் அன்புக்காக ஏங்குபவர்களாக இருக்கிறார்கள். தங்களின் பணிச்சுமை காரணமாக பெற்றோர் குழந்தைகளிடத்தில் செலவழிக்கும் நேரமும் மிகக்குறைவு. இதுபோல் தான்தோன்றித்தனமாக வளரும் குழந்தைகள் ஒழுக்கச் சீர்கேடுகளை கற்றுக் கொள்கிறார்கள்.

 தாங்கள் எது செய்தாலும் தவறில்லை என்ற மனப்போக்கும் வளர்ந்து கொண்டிருக்கிறது. தான் விரும்பியது தனக்கு கிடைக்க வேண்டும் என்ற உரிமை கொண்டாடும் எண்ணமும் அதிகரித்துக் கொண்டிருக்கிறது. இந்த நவீன சூழலில் பெரும்பாலும் ஆண் குழந்தைகளே வெகுசீக்கிரத்தில் தடம் மாறுகிறார்கள். பிரச்னைக்கான அடிப்படை காரணம் இதுதான்.

பல இடங்களில் காதலின் பெயராலும், திருமணத்தின் பெயராலும் வன்முறைகள் நடைபெறுவதற்கு இது முக்கியக் காரணியாக இருக்கிறது. இதில் சட்டங்களை விட, தன்னளவில் உருவாக்கிக் கொள்ளும் கட்டுப்பாடுகளும், ஏற்படுத்திக்கொள்ளும் மாற்றங்களுமே பெண்களைப் போகப் பொருளாகப் பார்க்கும் ஆண் சமுதாயத்தின் மனதை மாற்றும்.

தன் வீட்டில் இருக்கும் பெண்களின் பாதுகாப்பு குறித்து ஓர் ஆண் எந்தளவுக்கு விழிப்புணர்வோடு இருப்பானோ, அதே உணர்வை வெளியில் பார்க்கும் பெண்களிடமும் கொள்ள வேண்டும். தன்னுடைய இணையிடமும் அதே உணர்வை வெளிப்படுத்த வேண்டும்.

பெண்களை ஏமாந்தவர்களாக, அதிகாரமற்றவர்களாகப் பார்க்கும் ஆண்கள், தங்கள் சிந்தனையைத் திருத்திக் கொள்ள வேண்டும். பெண்களை மதிக்க அவனது பெற்றோர் கற்றுக் கொடுக்க வேண்டும். வீடுகளில் பெண்களை ஆணுக்கு இணையாக நடத்தும் மாற்றத்தை படிப்படியாகக் கொண்டு வந்தால் இந்தப் போக்கு வெளியிடங்களிலும் மாறும்!’’

- இந்துமதி

தமிழ் மேட்ரிமோனி.காம் - தமிழர்களின் திருமண இணையத்தளம் - பதிவு இலவசம்!

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
 • 21-09-2018

  21-09-2018 இன்றைய சிறப்பு படங்கள்

 • chennaipolicefunction

  சென்னை கலைவாணர் அரங்கத்தில் நடைபெற்ற காவலர் நிறைவாழ்வு பயிற்சி விழாவில் முதலமைச்சர் எடப்பாடி பங்கேற்பு

 • railwaysecurityforce

  சென்னையில் ரயில்வே பாதுகாப்பு படையின் 33வது ஆண்டு விழாவில் வீரர்கள் அணிவகுப்பு

 • courtchennaispl

  சென்னையில் குற்றவழக்குகளை விசாரிக்க சிறப்பு நீதிமன்றம் திறப்பு

 • russiapresigun

  ரஷ்ய ராணுவத்தின் புதிய துப்பாக்கி ரகங்களை அந்நாட்டு ஜனாதிபதி விளாடிமிர் புட்டின் ஆய்வு

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்