SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

Urban Tree

தந்தையாவதற்கு 7 மணி நேரம் தூக்கம் அவசியம்!

2018-02-21@ 14:35:34

நன்றி குங்குமம் டாக்டர்  

குழந்தைப்பேறு இல்லாமல் போவதற்கு ஆண்களுக்கும், பெண்களுக்கும் பல காரணங்கள் உள்ளன. இதனால் தற்போது ஐ.வி.எப்., என்ற செயற்கை கருவூட்டல் முறையை நாடும் தம்பதிகளின் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது.

இதில் புதிதாக விந்தணுவிலுள்ள உயிரணுக்களின் எண்ணிக்கை மற்றும் தரத்தை நிர்ணயம் செய்வதில் ஆண்களின் தூக்கமும் முக்கிய பங்கு வகிக்கிறது என புதிய ஆராய்ச்சி ஒன்று தெரிவித்துள்ளது.

‘மேற்கத்திய நாடுகளில் ஆண்களுடைய விந்தணுக்களின் எண்ணிக்கை கடந்த 40 ஆண்டுகளில் பாதியாக குறைந்துள்ளது. அதோடு விந்தகத்தில் கட்டிகள் ஏற்படுவதும் அதிகரித்து வருகிறது. இந்த காரணிகள் அவர்கள் தந்தையாகும் தகுதியை குறைக்கிறது’ என்கிறார் டென்மார்க்கிலுள்ள பேராசிரியர் நீல்ஸ் ஷாகிபேக்.

சீனாவின் சாங்சிங் மாநிலத்திலுள்ள 3-வது ராணுவ மருத்துவ பல்கலைக்கழகத்தில் கடந்த 2013-ம் ஆண்டு முதல் 2015-ம் ஆண்டு வரை 796 ஆண்களிடமிருந்து இந்த ஆய்வுக்காக விந்தணுக்கள் பெறப்பட்டது.

அவர்களின் தூங்கும் நேரமும் அதில் கணக்கில் எடுத்துக் கொள்ளப்பட்டது. அதில் ஆறரை மணி நேரத்துக்கு குறைவாக தூங்குபவர்களின் விந்தணுக்களில் டி.என்.ஏ.வின் தரம் 30 சதவிகிதம் குறைந்திருந்தது.

தூக்கம் குறைந்தவர்களுக்கு இனப்பெருக்கத்தைத் தூண்டும் டெஸ்டோஸ்ட்டீரான் ஹார்மோன் அதிகம் உருவாவதில்லை என்பது இதற்கு முந்தைய ஆய்வு
களிலும் கூறப்பட்டுள்ளது. அது மீண்டும் இந்த ஆய்வின் மூலம் உறுதியாகி உள்ளது. ஒரு நாளைக்கு 7 மணி முதல் ஏழரை மணி நேரம் வரை தூங்குபவர்களுக்கு விந்தணுக்கள் எண்ணிக்கை அதிகமாக இருப்பதும் ஆய்வில் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

எனவே, வாழ்க்கை முறை மாற்றங்களால் தூக்கத்தைக் கெடுத்துக் கொண்டிருக்கிற இன்றைய இளைஞர்கள், எதிர்கால நலன் கருதி 7 மணி நேரம் தூங்க வேண்டியது அவசியம் என்று பரிந்துரைத்திருக்கிறது இந்த ஆய்வு.

- கௌதம்

தமிழ் மேட்ரிமோனி.காம் - தமிழர்களின் திருமண இணையத்தளம் - பதிவு இலவசம்!

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • muharamfest

    நாடு முழுவதும் இஸ்லாமியர்களின் மொஹரம் பண்டிகை இன்று கொண்டாடப்பட்டது

  • nasaevanaktrump

    அமெரிக்காவில் உள்ள நாசாவின் ஜான்சன் விண்வெளி ஆய்வு மையத்தை பார்வையிட்ட இவாங்கா டிரம்ப்

  • florence&trumph

    பிளோரென்ஸ் புயலால் பாதிக்கப்பட்டவர்களை நேரில் சந்தித்து ஆறுதல் கூறிய அமெரிக்க அதிபர் டிரம்ப்

  • greenlandicemelt

    கிரீன்லாந்தில் வெப்பமயமாதலால் உருகும் பனிப்பாறைகள் : கடல் நீர்மட்டம் உயரும் அபாயம்

  • thirupathilast

    திருப்பதி ஏழுமலையான் கோவில் பிரம்மோற்சவ திருவிழா : சக்கரத்தாழ்வார் தீர்த்தவாரியுடன் நிறைவு

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்