SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

ஆரோக்கியத்துக்கு வேட்டு வைக்கும் பாஸ்ட் புட்...!

2017-12-04@ 14:40:44


தவறான உணவு பழக்க வழக்கத்தால் இளம்  வயதினருக்கும் மாரடைப்பு ஏற்படுகிறது. தவறான உணவு பட்டியலில் முக்கிய பங்கு வகிப்பவை துரித உணவுகள். இவை, நமது சுவை உணர்ச்சிகளுக்கு  மகிழ்ச்சியூட்ட மட்டும் தயாரிக்கப்படுபவை. உடல்நலத்தை மேம்படுத்தக்கூடிய  எந்தவிதமான ஆரோக்கிய கூறுகளும் இவற்றில் இல்லை. கலோரிகள் நிறைந்த உணவுகளாக  இருப்பதால் உடலை விரைவாக பருமன் அடைய செய்யும் திறன் வாய்ந்தவை. துரித உணவுகளின் வரலாற்று பாதையை உற்று கவனித்தால் அவற்றுக்கும் நமது வரலாற்றுக்கும் எந்த தொடர்பும் இருக்காது. நமது வாழ்வுக்கும், உணர்வுக்கும் அவற்றோடு எந்த சம்பந்தமும் இருக்காது. சத்து நிறைந்த நமது பாரம்பரிய உணவுகளை அடித்து விரட்டிவிட்டு, துரித உணவுகளை பெருமைப்படுத்துகிறோம். சிறுவர் முதல் பெரியவர்கள் வரை சைஸ் வாரியாக பிரித்து உண்கிறோம்.

வயது வித்தியாசம் பார்க்காமல் நோய்களும் வருகிறது.  துரித உணவுகள் உண்டாக்கும் நோய்களோ எண்ணில் அடங்காதவை. ஆனால், நமது பாரம்பரிய வரலாற்று பாதையில் பயணித்து வரும் உணவுகள் நிச்சயமாக நோய்களை உண்டாக்காது. உடல்பருமன் நோய் அதிகரிக்க துரித உணவு முக்கிய பங்காற்றுகிறது. ஒரு முழு பீட்ஸா உட்கொண்டால் உடலில் சேரும் கலோரிகளை கரைக்க பல கி.மீ தொலைவு வேகமாக ஓட வேண்டியிருக்கும். நாம் முதலில் சில மீட்டர்களாவது தினமும் நடக்கிறோமா என்பதே கேள்விக்குறி. பின்னர், எப்படி தேவையில்லாமல் அதிகரித்த கலோரிகளை வெளியேற்றுவது. இந்த கலோரிகள் உடலில் கொழுப்பு சேர்மானத்தை அதிகரிக்க செய்து கடுமையான பாதிப்புகளை உண்டாக்கும்.

 அவசரத்துக்கு ரெடிமேடாக கிடைக்கும் துரித உணவுகள் அவசர அவசரமாக நோய்களை உண்டாக்கும். இன்சுலின் சுரப்பதில் பாதிப்பை உண்டாக்கி, சர்க்கரைநோயை துரித உணவுகள் கொண்டு வரும் என ஆராய்ச்சி முடிவு தெரிவிக்கிறது. சிறு குழந்தைகள் தொடர்ந்து துரித உணவுகளை சாப்பிடும்போது, உடல் வளர்ச்சிக்கு தேவையான ஊட்டச்சத்து கிடைக்காமல், ஊளைச்சதை மட்டுமே வளரிளம் பருவத்தில் அதிகரிக்கும். உடல் வளர்ச்சி ரீதியில் பல செயல்பாடுகள் பாதிக்கப்படும்.  ஹார்மோன் சமநிலையை தகர்த்து, உடலின் செயல்பாடுகளில் பல்வேறு மாறுதல்களை துரித உணவுகள் உண்டாக்கிவிடுகின்றன. இளம்பெண்களுக்கு சினைப்பை கட்டிகள் அதிகரிக்க மிக முக்கிய காரணம் ’ஜங் புட்ஸ்’ எனப்படும் துரித உணவுகள்தான். எள் உருண்டைகளையும், உளுத்தங்களியையும் அதிகமாக சாப்பிட்ட முந்தைய தலைமுறை பெண்களுக்கு சினைப்பை கட்டிகள் என்றால் என்னவென்றே தெரியாது.

துரித உணவுகளை தொடர்ந்து சாப்பிடும்போது ரத்தக்குழாயில் கொழுப்பு திட்டுகள் படிந்து, அவற்றின் சுற்றளவை குறுக்கி, ரத்த ஓட்டத்தில் பாதிப்புகளை ஏற்படுத்தி, இதய நோய்களை உண்டாக்கும். இதிலிருக்கும் உப்பு, காரணமாக உயர் ரத்தஅழுத்தம் வருவதற்கான சாத்தியக்கூறுகள் அதிகம். மருத்துவர் அறிவுறுத்தலின்பேரில் நேரடியாக உப்பின் பயன்பாட்டை குறைத்துக்கொள்ளும் நடுவயது உயர்ரத்த அழுத்த நோயாளிகள், மறைமுகமாக உப்பு நிறைந்த துரித உணவுகளை அதிகமாக சேர்த்துக்கொள்வது அறியாமை. அளவுக்கு அதிகமாக உப்புடன், வெள்ளை சர்க்கரையும் கலந்த சுவையூட்டும் உணவுகள் மனதுக்கு களிப்பை உண்டாக்கி, ஆரோக்கியத்துக்கு வேட்டுவைத்துவிடும்.

திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • modi_well_fare

    மோடியின் மிசோரம், மேகாலயா பயணம்: பல்வேறு நலத்திட்ட பணிகள் தொடங்கி வைப்பு

  • delhiamarsolidiers

    இந்தியா-பாகிஸ்தான் போரின் 46வது வெற்றி தினத்தையொட்டி அமர் ஜவான் ஜோதியில் ராணுவ வீரர்கள் மரியாதை

  • RahulGandhitakecharge

    காங்கிரஸ் தலைவரானார் ராகுல்காந்தி: தொண்டர்கள் இனிப்புகள் வழங்கியும், பட்டாசு வெடித்தும் கொண்டாட்டம்

  • panipolivu_11

    வட மாநிலங்களில் கடும் பனிப்பொழிவு :வாட்டி வதைக்கும் குளிரை தணிக்க தீமூட்டி குளிர்காயும் மக்கள்

  • INdonesia_EarthquAke

    இந்தோனேஷியாவின் ஜாவா திவுகளில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்: கட்டிடங்கள் சேதம், 2 பேர் பலி

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்