SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

எலும்பே நலம்தானா?!

2017-11-29@ 15:53:59

நன்றி குங்குமம் டாக்டர்

Bone 360 Degree


உங்களிடம் எத்தனை ஜோடி Shoes இருக்கின்றன?


‘அது நிறைய இருக்கும்... தினமும் வேலைக்குப் போகும்போது போட்டுக்கிட்டுப் போக நாலஞ்சு ஜோடி... பார்ட்டிக்குப் போட்டுக்கிட்டுப் போக ரெண்டு, மூணு ஜோடி... கேஷுவலா போட்டுக்க கொஞ்சம்... இப்படிப் பெருமையாகச் சொல்லிக் கொள்கிறீர்களா?

சந்தோஷம். அவற்றில் எத்தனை ஜோடி உங்கள் கால்களுக்குப் பொருத்தமானவை? உங்கள் எலும்புகளைப் பதம் பார்க்காதவை?

என்ன கேள்வி இது? Shoes-க்கும் எலும்புகளுக்கும் என்ன சம்பந்தம்? அளவெல்லாம் பார்த்துதானே வாங்கறோம்... அப்புறம் எப்படிப் பொருத்தமில்லாமப் போகும் என்கிறீர்களா?

அதில்தான் விஷயமே இருக்கிறது. நம்முடைய பாதங்களில் மூன்று வகைகள் இருக்கின்றன. அவற்றுக்குப் பொருத்தமில்லாத காலணிகள் பயன்படுத்தும் பட்சத்தில் உங்கள் பாதங்கள் பெருமளவில் பாதிக்கலாம். எப்படி என்பதைப் பார்ப்போம்...

பொருத்தமில்லாத காலணிகள் பாதங்களின் வடிவத்தைப் பாதிக்கும்... உங்கள் Posture-ஐ பாதிக்கும்... உங்கள் கால்கள் மற்றும் முதுகுத் தசைகளுக்கு சிரமத்தை கூட்டும்.அதுவே நல்ல காலணிகள் உங்கள் பாதங்களுக்கு நல்ல சப்போர்ட்டையும், குஷன் போன்ற பாதுகாப்பையும் கொடுக்கும். உங்கள் பாதங்கள் தரையில் படும்போது கணுக்கால்கள், முழங்கால்கள், இடுப்புப் பகுதிகளுக்கு பரவும் அழுத்தத்தைத் தவிர்க்கும்.

சரியான Shoes-ஐ தேர்வு செய்வது எப்படி?

அளவில் பெரிதாகவோ, சிறியதாகவோ இருக்கக்கூடாது. கால்களுக்குக் கச்சிதமாகப் பொருந்த வேண்டும். அணிகிற போது எந்தவித அசௌகரியத்தையும் உணரக்கூடாது. சரியாக வடிவமைக்கப்பட்டவையாக இருக்க வேண்டும். Shoes வாங்கும்போது இரண்டு கால்களையும் தனித்தனியே அளந்து பார்த்து வாங்குங்கள். பகல் வேளைகளில் காலணிகள் வாங்குவதைத் தவிர்த்து இரவில் வாங்கவும். பகலில் உங்கள் பாதங்கள் சற்று வீங்கியிருக்கும்.

பாதங்களுக்கு நல்ல காற்றோட்டம் வேண்டுமென்றால் தோல் shoes வாங்கவும். பாயின்ட்டட் Shoes  வாங்கவேண்டாம்.  அப்போதுதான் விரல்கள் எந்த சிரமமும் இல்லாமல் அசையும்.குதிகால் உயரமான shoeக்களை அணிவதால் உங்கள் நடையின் தன்மை மாறும். முழங்கால் மற்றும் முதுகு பிரச்னைகளுக்கான வாய்ப்புகள் அதிகரிக்கும். ஸ்லிப் ஆன் Shoe-க்களை தவிர்த்து வெல்க்ரோ ஸ்ட்ராப் அல்லது லேஸ் வைத்த Shoe-க்களே சிறந்தவை.

எப்போது Shoe-க்களை மாற்ற வேண்டும்?

100 மணிநேரங்கள் உபயோகித்த பிறகு, வருடத்துக்கொரு முறை, வாரத்துக்கு 3 நாட்கள், 45 நிமிடங்கள் முதல் 1 மணி நேரம் வரை நடக்கிறவர்கள் என்றால் 5 மாதங்களுக்கொரு முறை shoe-க்களை மாற்ற வேண்டும்.வாரத்துக்கு நான்கு நாட்கள் நடப்பவர் என்றால் 4 மாதங்களுக்கொரு முறை shoeக்களை மாற்றவும். 5 நாட்கள் நடந்தால் 3 மாதங்களுக்கொரு முறை மாற்றவும்.

Shoe-க்களில் ஆர்தோடிக்ஸ் பாதங்களின் செயல்பாட்டை சீராக்கவும், சீரற்ற நடையை சரி செய்யவும் ஆர்தோடிக்ஸ் என்பவை பயனளிக்கும். shoeக்களின் உள்ளே பொருத்தக்கூடிய கருவிகளுக்குத்தான் ஆர்தோடிக்ஸ் என்று பெயர்.வாக்கிங் மற்றும் ரன்னிங் shoes வாங்கும்போது...

புதிதாக ரன்னிங் பழக ஆரம்பித்திருப்பவர் என்றால் ஃபிட்னஸ் பயிற்சியாளரிடமோ, விளையாட்டுக் கருவிகள் விற்பனை செய்கிற நிபுணர்களிடமோ ஆலோசனை பெற்ற பிறகு உங்கள் Shoe-க்களைத் தேர்ந்தெடுக்கலாம்.

ரன்னிங் செய்கிறவர்களின் தேவைகளைப் பொறுத்து shoe தயாரிப்பாளர்கள் வேறு வேறு வகைகளில் வடிவமைக்கிறார்கள். அடிப்படையில் 3 வடிவங்களில் இவை தயாரிக்கப்படுகின்றன.

Motion control shoes

உங்கள் கால்களுக்கு மிக சரியாக பொருந்தும்படி வடிவமைக்கப்பட்டவை. நடக்கும்போதும், ஓடும்போதும் கால்கள் பிரளாமல் இருக்கும்படி வடிவமைக்கப்பட்டவை. Shoe-வினுள் உங்கள் பாத இடைவெளியில் எந்த அசைவும் இருக்கக்கூடாது. அந்த அசைவை கட்டுப்படுத்தும் Shoe-க்கள்தாம் இவை.

Cushioned shoes

இவற்றில் கால்களுக்குப் பொருத்தமான குஷன் வைக்கப்பட்டிருக்கும்.
அதிலும் குறிப்பாக உள்ளங்கால் வளைவு பகுதியில் குஷன் இருக்க வேண்டும்.

Stability shoes

கால்களை எந்த வகையிலும் உறுத்தாத வகையில் வடிவமைக்கப்பட்டவை இவை. உங்கள் நடையையோ,
ஓட்டத்தையோ சிரமமாக்காதவை.

(விசாரிப்போம்!)

எழுத்து வடிவம்: எம்.ராஜலட்சுமி

தமிழ் மேட்ரிமோனி.காம் - தமிழர்களின் திருமண இணையத்தளம் - பதிவு இலவசம்!

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
 • 19-08-2018

  19-08-2018 இன்றைய சிறப்பு படங்கள்

 • 18-08-2018

  18-08-2018 இன்றைய சிறப்பு படங்கள்

 • lastfinaldest111

  21 குண்டுகள் முழங்க தங்க நாற்கர சாலையின் நாயகனும், முன்னாள் பிரதமருமான வாஜ்பாயின் உடல் தகனம்

 • finaldesti000

  மறைந்த முன்னாள் பிரதமர் வாஜ்பாயின் இறுதி ஊர்வலம்

 • kannirpeoplvaj

  மறைந்த முன்னாள் பிரதமர் வாஜ்பாயின் உருவப்படத்திற்கு நாட்டு மக்கள் கண்ணீர் அஞ்சலி

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்