SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

Urban Tree

கண்காட்சிகளின் கதை

2017-11-10@ 14:53:46

நன்றி குங்குமம் டாக்டர்

‘‘நோயாளிகளைக் காப்பாற்றுவதில் முக்கிய பங்கு வகிப்பவை மருத்துவ சாதனங்கள். எனவே, அவற்றில் தரமானதைத் தேர்ந்தெடுத்து வாங்குவதற்கு உதவி செய்பவை மருத்துவக் கண்காட்சிகள்’’ என்கிறார் தீவிர சிகிச்சை மற்றும் மயக்க மருந்து நிபுணரான மணிவண்ணன். மருத்துவ கண்காட்சிகளை பல இடங்களிலும் தொடர்ந்து நடத்திவரும் அவர், அதன் பின்னணியில் இருக்கும் தன்னுடைய அனுபவத்தை நம்மிடம் பகிர்ந்துகொள்கிறார்.

‘‘சென்னை மருத்துவக் கல்லூரியில் எம்.பி.பி.எஸ்., முடித்தபிறகு, டெல்லியில் அனஸ்தீசியா படித்தேன். அதன் பிறகு, 1999-ம் வருடம் திருச்சியில் மருத்துவமனை ஒன்றை என்னுடைய மருத்துவ நண்பர்களுடன்  தொடங்கினேன். கல்வி ரீதியாக நாங்கள் அறிவு பெற்றிருந்தாலும் ஒரு மருத்துவமனையை எப்படி நிர்வகிப்பது, நோயாளிகளுக்குத் தேவையான வசதிகளை எப்படி செய்து கொடுப்பது, என்னென்ன கருவிகள் எங்கெங்கு கிடைக்கும் என்பது பற்றி எல்லாம் எங்களுக்குத் தெரியாது. அது மட்டுமல்லாமல் திருச்சி போன்ற நகரங்களில் மருத்துவம் தொடர்பாக கருத்தரங்குகளும் நடைபெறாது.

எனவே, மருத்துவமனை நிர்வாகம் தொடர்பாக ஒவ்வொன்றாகத் தெரிந்துகொள்ள ஆரம்பித்தோம். அதன் பின்னரே, மருத்துவமனை நிர்வாகம் பற்றிப் பல விஷயங்கள் புரிந்தது. எனவே, மற்றவர்களும் நம்மைப் போல் தடுமாறக்கூடாது என்பதற்காகவும், எங்கள் முயற்சியால் கிடைத்த பயன்கள் மற்றவர்களுக்கும் கிடைக்க வேண்டும் என்பதற்காகவும் கண்காட்சிகளை நடத்தத் தொடங்கினோம்.

முதன்முதலாக, 2006-ம் ஆண்டில் சென்னை ராஜா அண்ணாமலைபுரத்தில் மருத்துவ உபகரணங்களின் கண்காட்சியை நடத்தினோம். அதனைத் தொடர்ந்து கடந்த 12 வருடங்களாகக் கண்காட்சிகளை நடத்தி வருகிறோம். வெளிநாடுகளில் தயாராகும் அதிநவீன கருவிகளையும், மருத்துவர்களையும் ஒரே இடத்தில் சந்திக்க வைப்பதுதான் இந்த கண்காட்சிகளின் குறிக்கோள்’’ என்கிறார்.

- விஜயகுமார்

தமிழ் மேட்ரிமோனி.காம் - தமிழர்களின் திருமண இணையத்தளம் - பதிவு இலவசம்!

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
 • modi68bday

  வாரணாசியில் பள்ளி மாணவர்களுடன் தனது 68வது பிறந்தநாளை கொண்டாடிய பிரதமர் மோடி

 • losangeleswaterlight

  லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் கொண்டாடப்பட்ட நீர் விளக்கு விழா: ஏராளமானோர் பங்கேற்பு

 • vinayagarsilai

  சென்னையில் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் விநாயகர் சிலைகள் கடலில் கரைப்பு

 • mankutstromchina

  தெற்கு சீனாவில் பேரழிவை ஏற்படுத்திய மங்குட் புயல் : தீவிரப்படுத்தப்பட்டுள்ள நிவாரண பணிகள்

 • tirupathififth

  திருப்பதியில் 5வது நாள் பிரமோற்சவம் கோலாகலம் : தங்க கருட வாகனத்தில் மலையப்ப சுவாமி வீதி உலா

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்