SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

தொல்லை தரும் நோய் ‘ஜலதோஷம்’

2017-10-23@ 15:09:11

எவ்வளவு பெரிய நோயாக இருந்தாலும் நாம் தாங்கிக் கொள்ளலாம். ஆனால், ஜலதோசம் ஒரு தொல்லை தரும் நோயாகும். எப்போதும் கைக்குட்டையுடனே நம்மால் இருக்க முடியுமா? எப்படியாவது ஜலதோஷத்தை விரட்டி விட வேண்டும் என்றுதான் கருதுவோம்.  டஸ்ட் அலர்ஜி, வெளியூர்களுக்கு சென்று குளிக்கும்போது நீர் சேராதது, மழையில் நனைவது, ஐஸ், ஐஸ்கட்டி, புகைப்பிடித்தல், ஆகியவற்றால் ஜலதோஷம் வந்து விடுகிறது. நம் வீட்டு சிறுவர்கள், ஐஸ்கிரீம் கேட்டாலே ‘‘வேண்டாம் வேண்டாம் சளி பிடித்துவிடும்’’ என்று சொல்லும் அளவுக்கு நம்மை ஜலதோஷம் பதறவைத்து விடுகிறது.  

ஜலதோஷம் நீங்க…

1.எலுமிச்சம் பழச்சாறும் தேனும் கலந்து குடித்து வரவேண்டும்.
2.இடைவிடாது தும்மல், தலைவலி, தலைப்பாரம் ஏற்பட்டால் உப்பு நீரை கையில் விட்டுக் கொண்டு அந்த நீரை ஒரு பக்க நாசித் துவாரத்தினை அடைத்துக் கொண்டு மறுபக்க நாசி வழியாக நுகரவேண்டும்.
3.ஆமணக்கு எண்ணெய் ஊற்றி ஏற்றிய விளக்கில் விரலி மஞ்சளைச்சுட்டு, அதிலிருந்து வரும் புகையை சுவாசித்தால் தலைவலி, ஜலதோஷம் ஆகியவை நீங்கும்.முருங்கைச்சாறுடன்
4.மிளகு, வெல்லம், பசு நெய் ஆகிய மூன்றையும் சேர்த்து லேகியம் போல் கலந்து சாப்பிட்டு வந்தால் மார்புச்சளி நீங்குவதுடன் தொண்டை புண்ணும் குணமாகும்.
5.மஞ்சள் தூள் சேர்த்து காலை மாலை இரண்டு வேலை சாப்பிட்டு வந்தால் சளி, மூக்கடைப்பு நீங்கும்.
6.வெந்நீரில் எலும்பிச்சம் பழச்சாற்றை சேர்த்து சாப்பிட்டு வந்தால் சளி பிடிக்காது.
7.நொச்சி இலைகளை தண்ணீரில் போட்டு அதிலிருந்து வரும் ஆவி பிடிக்க வேண்டும்.  
8.நல்லெண்ணெயில் 4 பூண்டு, 10 மிளகு, ஒரு மஞ்சள் நொச்சி இலைகளை போட்டு நன்றாக காய்ச்ச வேண்டும். அதை கொஞ்சம் ஆரவைத்து இளம் சூட்டில் தலையில் தேய்க்க வேண்டும். பின்பு நன்றாக தலையை தேய்த்துக் குளித்தால் சீதள சம்பந்தமான நோய்கள் தீரும்.
9.மஞ்சள் பொடியை நெருப்பிலிட்டு அதிலிருந்து வருகின்ற புகையை சிறிது நேரம் சுவாசித்தால் மூக்கிலிருந்து தொடர்ந்து வரும் ஜலதோஷத்தை தடுத்து நிறுத்தலாம்.
10.அரை ஸ்பூன் மஞ்சள்தூளை ஒரு டம்ளர் சூடான பாலில் கலக்கி இரவு தோறும் சாப்பிட்டு வந்தால் மூக்கடைப்பு நீங்கும்.
11.இஞ்சிஐ தோல் நீக்கி அரைத்துப் பிழிந்து தெளிய வைத்து இறுத்து சம அளவு பசும்பால் கலந்து இக்கலவைக்கு சம அளவு நல்லெண்ணைய் கலந்து சிறு தீயில் பதமுறக் காய்ச்சி வடித்து வாரம் இருமுறை தலையிட்டுக் குளித்துவர தலையில் நீர் கோர்ப்பது, நீர்ப்பீனிசம், தலைவலி, கழுத்து நரம்பிசிவு, தலைப்பாரம் அடுக்குத் தும்மல் ஆகியவை தீரும்.
12.குப்பைமேனி இலையைக் காயவைத்து நன்கு சூரணித்து பொடிபோல் மூக்கில் நசியமிட தலைவலி, தலையில் நீரேற்றம் ஆகியவை நீங்கிவிடும்.

தமிழ் மேட்ரிமோனி.காம் - தமிழர்களின் திருமண இணையத்தளம் - பதிவு இலவசம்!

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
 • 18-06-2018

  18-06-2018 இன்றை சிறப்பு படங்கள்

 • 17-06-2018

  17-06-2018 இன்றைய சிறப்பு படங்கள்

 • ramalanchennaifestival

  தமிழகம் உள்பட நாடு முழுவதும் இஸ்லாமியர்கள் ரம்ஜான் பண்டிகை கொண்டாட்டம் : மசூதிகளில் சிறப்பு தொழுகை

 • DragonBoatTournament2018

  சீனாவில் உலகப்புகழ் பெற்ற டிராகன் படகு போட்டி: போட்டியை காண ஏராளமானோர் வருகை

 • fifa_wcer1

  2018 கால்பந்து உலகக் கோப்பை : உலக முழுவதும் ரசிகர்களை தொற்றிய கால்பந்து ஜுரம்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்