SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

இளைய தலைமுறையினரின் கவனத்துக்கு

2017-10-13@ 14:34:07

‘‘முன்பு கூட்டுக் குடும்ப முறை நம்மிடையே இருந்தது. முதியவர்களை கவனிப்பதற்கும் அவர்களிடம் பேசுவதற்கும் ஆட்கள் இருந்தனர். இப்போது கூட்டுக் குடும்பமுறை உடைந்து தனித்தனி குடும்பங்கள் அதிகம் உருவாகிவிட்டன. இதனால் முதியோர்களை யார் பார்த்துக் கொள்வது என்று அவர்களை வீட்டிலேயே தனிமையில் தள்ளும் நிலையோ அல்லது முதியோர் இல்லத்தில் சேர்ப்பதோ நடக்கிறது. இது முதியோரின் மனநலனைப் பெரிதும் பாதிக்கிறது’’ என்கிறார் உளவியல் மருத்துவரான சத்தியநாதன்.

‘‘முதியோருக்கு வயதான காலத்தில் இயல்பான இயக்கம் குறைவதால், வீட்டை விட்டு அதிகம் வெளியில் போக முடிவதில்லை. சக மனிதர்களை சந்திப்பதும் குறைந்துவிடுகிறது. முழுக்க முழுக்க குடும்பத்தில் உள்ளவர்களையே சார்ந்து இருக்க வேண்டியிருக்கிறது. ஆனால், வீட்டில் இருப்பவர்கள் அதை புரிந்துகொள்ளாமல் புறக்கணிப்பதால் தனிமை உணர்வுக்குத் தள்ளப்பட்டு உறவு சார்ந்த மன அழுத்தம் முதியவர்களுக்கு ஏற்படுகிறது.  

உடல்ரீதியாகவும், உளவியல்ரீதியாகவும் இதுபோன்ற சவால்களில் தவிக்கும் முதியவர் களின் நிலையை வீட்டில் உள்ளவர்களும், இளைய தலைமுறையினரும் புரிந்துகொள்ள வேண்டும், குடும்ப நடவடிக்கைகளிலும், திட்டமிடுதலிலும் அவர்களை சேர்த்துக் கொள்ள வேண்டும். அவர்களின் உடல் நலத்தையும், மன நலத்தையும் கண்காணித்து உரிய சிகிச்சை அளிக்க வேண்டும். மருத்துவரின் ஆலோசனையின்படி அவர்களுக்கு உணவு கொடுப்பது, உரிய நேரத்துக்கு மருந்துகள் கொடுப்பது போன்றவற்றை கவனமாகப் பின்பற்ற வேண்டும்.

கர்மா, விதி என்பதில் எல்லோருக்கும் நம்பிக்கை இல்லாமல் இருக்கலாம். ஆனால், நீங்கள் எப்படி உங்கள் பெற்றோரை கவனிக்கிறீர்களோ அதுபோலத்தான் நாளை உங்கள் குழந்தைகள் கவனிப்பார்கள். காரணம், பெற்றோரின் நடவடிக்கையைப் பார்த்துத்தான் பெரும்பாலும் குழந்தைகள் கற்றுக் கொள்
கிறார்கள் என்பதை மறந்துவிடக் கூடாது. ‘அவர்களுக்கென்ன வாழ்ந்து முடிந்து விட்டார்கள்’ என்கிற அலட்சிய எண்ணத்தை முதலில் கைவிட வேண்டும். அன்பான வார்த்தைகளைப் பேசி அவர்களை பார்த்துக் கொள்ள வேண்டும். வளரும் குழந்தைகளை அவர்களோடு பேச, விளையாட வைக்க வேண்டும். இது வளரும் குழந்தைகளின் ஆரோக்கியத்துக்கு உதவும். அதேபோல முதியவர்களுக்கு ஏற்றது கூட்டுக் குடும்பம்தான். அதனால் முடிந்த அளவு கூட்டுக் குடும்பத்தில் வாழ முயற்சிக்க வேண்டும். தனிக்குடும்பமாக வாழக்கூடிய சூழல் ஏற்பட்டாலும் முதியவர்களையும் அரவணைத்து செல்ல வேண்டும். முதியவர்களோடு வாழ்வதுதான் முழுமையான வாழ்க்கையாகும் என்பதை மறந்துவிடக் கூடாது.’’
- க.இளஞ்சேரன்

தமிழ் மேட்ரிமோனி.காம் - தமிழர்களின் திருமண இணையத்தளம் - பதிவு இலவசம்!

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • 14-12-2018

    14-12-2018 இன்றைய சிறப்பு படங்கள்

  • asiya_mukesh11

    ஆசியாவை ஆட்டம் காண வைத்த முகேஷ் அம்பானி மகள் திருமணம்

  • kali_ramnatha11

    மியான்மரில் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் : ரீ காளி கோவிலுக்கு சென்று வழிபட்டார்

  • france_gunmanr1

    பிரான்ஸ் நாட்டில் கிறிஸ்துமஸ் சந்தையில் துப்பாக்கிச் சூடு :4 பேர் பலி ; 11 பேர் படுகாயம்

  • upnepalmarg

    நேபாள நாட்டில் ராமர்-சீதாதேவி விவாஹ உற்சவம் : உபி முதல்வர் யோகி ஆதித்யநாத் பங்கேற்பு

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்