SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

மசூர் பருப்பு நல்லதா? கெட்டதா?

2017-10-10@ 14:47:41

நன்றி குங்குமம் டாக்டர்  

நீண்டகாலமாகவே மசூர் பருப்பின் தரம் குறித்து சர்ச்சைகளும், குழப்பங்களும் இருந்து வருகிறது. புகைந்து கொண்டிருந்த இந்த பிரச்னை மீண்டும் எரியத் தொடங்கி இருக்கிறது. ‘மசூர் பருப்பை உண்பதால் உடலுக்குப் பாதிப்பு ஏற்படுகிறது. அதனால் பொது விநியோகத் திட்டத்தில் மசூர் பருப்பு வழங்குவதைத் தடை செய்ய வேண்டும்’ என்று பொதுநல மனு ஒன்று மதுரை உயர்நீதிமன்றக் கிளையில் சமீபத்தில் தாக்கல் செய்யப்பட்டிருந்தது. இந்த வழக்கில் ஏற்கெனவே, மசூர் பருப்பு கொள்முதல் செய்வதற்கு உயர் நீதிமன்ற மதுரைக் கிளை இடைக்காலத் தடை விதித்திருந்தது.

மீண்டும் விசாரணைக்கு வழக்கு வந்தபோது வழக்கை விசாரித்த நீதிபதிகள், ‘மசூர் பருப்பில் கேசரி பருப்பு கலப்படம், நிறமூட்டிகள் ஆகியவற்றைக் கலக்கக் கூடாது. ஆய்வகங்கள் மூலம் பருப்பின் தரத்தை ஆய்வு செய்த பின்னரே விநியோகம் செய்ய வேண்டும்’ என்று உத்தரவிட்டிருக்கின்றனர். இந்த சூழலில் ஊட்டச்சத்து நிபுணர் சித்ரா மகேஷிடம் மசூர் பருப்பு நல்லதா? கெட்டதா? என்று கேட்டோம்...‘‘தமிழ்நாட்டில் மசூர் பருப்பை சமையலுக்கு அவ்வளவாகப் பயன்படுத்துவது கிடையாது. கேரளா மற்றும் வட மாநிலங்களில்தான் இந்த பருப்பை அதிக அளவில் உபயோகப்படுத்தி வருகின்றனர்.

அந்த அளவுக்கு மசூர் பருப்பு சத்துமிக்கதுதான். ஆனால், மசூர் பருப்பைப் போலவே இருக்கும் கேசரி பருப்பை அதனுடன் கலந்து விற்றுவிடுகிறார்கள். இந்த கேசரி பருப்பும் பார்ப்பதற்கு மசூர் பருப்பு போல ஆரஞ்சு நிறத்தில்தான் காணப்படும். இந்த  கேசரி பருப்புதான் உடல்நலனுக்குத் தீங்கானது. மற்றபடி மசூர் பருப்பால் பாதகம் ஒன்றும் இல்லை’’என்கிறார். எதுக்கு இந்த மசூர் வம்பு... நம் ஊரில் விளையும் துவரம்பருப்பு, உளுத்தம் பருப்பு, பாசிப்பருப்பில் இல்லாத சத்துக்களா... அதுவே போதும் என்று நினைக்கிறீர்களா?! அதுவும் சரிதான்!

- விஜயகுமார்
படம்: ஏ.டி.தமிழ்வாணன்

திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • sibiraj_giftsss11

    சன்டிவி, தினகரன் வழங்கும் விநாயகர் பரிசுத் திருவிழா : வெற்றி பெற்றவர்களுக்கு நடிகர் சிபிராஜ் பரிசுகள் வழங்கினார்

  • halloween_12311

    நியூயார்க்கில் நடைபெற்ற ஹாலோவீன் நாய்கள் அணிவகுப்பு திருவிழா

  • terror_12_delli

    டெல்லி விமான நிலையத்தில் தீவிரவாதிகள் தாக்குதலை எதிர்கொள்ளும் ஆயுதந்தாங்கிய கவச வாகனம் நிலை நிறுத்தம்

  • aalosnai_122

    இந்தியா, பங்களாதேஷ் ஆலோசனை கூட்டத்தில் வெளியுறவுத் துறை அமைச்சர் சுஷ்மா பங்கேற்பு

  • swiss_123_landdd

    அழியும் நிலையில் உள்ள இனங்களின் இருப்பிடம் சுவிட்சர்லாந்தில் திறப்பு

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்