SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

புத்தா பவுல் - டிரெண்டிங்

2017-09-22@ 14:55:03

நன்றி குங்குமம் டாக்டர்

Buddha Bowl என்ற புதிய உணவுமுறை நவீன மருத்துவ உலகில், சர்வதேச அளவில் டிரெண்டிங்கில் இருக்கிறது. பர்மா மக்களுக்கு மிகவும் விருப்பமான இந்த கலர்ஃபுல் உணவைப் பார்த்த உடனேயே நாக்கில் நீர் ஊறும். அந்த அளவுக்கு அதன் சுவை அலாதி... பலன்களும் ஏராளம்...

பெரிய கிண்ணம் ஒன்றில் தானியங்கள், பச்சை காய்கறிகள், பழங்கள், டோஃபூ, பனீர், கீரை மற்றும் பாதாம், பிஸ்தா போன்ற பருப்பு வகைகள் என எல்லாம் சேர்த்து நிரப்பி பார்ப்பதற்குப் பெயர்தான் புத்தா பவுல். பல நிறங்களின் வண்ணக்கலவையாக, ஆரோக்கியமான, மகிழ்ச்சியான மற்றும் ருசியான உணவாக இந்த புத்தா பவுல் இருக்கும் என்பதே இதன் சுவாரசியம்.

தனிப்பட்ட ஒரு முறையைப் பின்பற்றி தயாரிக்கப்படாத உணவு இது என்பது இதன் ஸ்பெஷல். நீங்கள் விரும்பும் சுவையில், விதவிதமான தானியங்கள், மூலிகைகள் மற்றும் மசாலா பொருட்களைக் கொண்டு நீங்களே உங்களுக்கு பிடித்தமான ‘புத்தா பவுலை’ உருவாக்கலாம் என்பது இன்னும் ஸ்பெஷல்.

அதெல்லாம் சரி... புத்தருக்கும் இந்த டயட்டுக்கும் என்ன சம்பந்தம்?
புத்த துறவிகள் உணவின் மீது அதிகம் பற்றில்லாதவர்கள். உணவை தயாரிக்க அதிக நேரம் செலவழிப்பதையும் விரும்பாத அவர்கள், நண்பகலில் ஒரே ஒருவேளை மட்டும் உண்பதையே கடைபிடிப்பவர்கள்.

அதற்காகவே, உடலுக்குத் தேவையான அனைத்து சத்துக்களும் ஒருசேர கிடைக்கும் வகையில், ஒரே கிண்ணத்தில் காய்கறிகள், பழங்கள், தானியங்கள், பால்பொருட்கள், பருப்புகள் என அனைத்தையும் கொண்டு தயாரித்த உணவை உண்கிறார்கள். புத்த துறவிகள் இந்த உணவு முறையையே இரண்டாயிரம் வருடங்களாக பின்பற்றி வருகிறார்கள். இப்படி உருவானதுதான் ‘புத்தா பவுல்’.
பலன்கள்...

உணவு வீணாகாது, எரிபொருள் செலவு குறைவு, தயாரிக்க ஆகும் நேரமும் மிச்சம். இதுதவிர, முழு தானியங்கள், பழங்கள், காய்கறிகள், பழங்கள், பருப்பு, பால்பொருட்கள் சேர்ப்பதால் கார்போஹைட்ரேட், புரோட்டீன், கொழுப்பு, வைட்டமின், மினரல் என எல்லா
ஊட்டச்சத்துக்களும் கிடைக்கும்.

முழுமையானதும், சரிவிகிதமானதுமான இந்த டயட்டை வாரத்தில் இரண்டு நாட்கள் எடுத்துக் கொள்வதை இப்போது பரிந்துரைக்கிறார்கள் உணவியலாளர்கள். காலை உணவு, மதிய உணவு, மாலைச் சிற்றுண்டி என அந்தந்த நேரத்திற்குத் தகுந்தவாறு சேர்க்கவேண்டிய பொருட்களை தேர்ந்தெடுத்துக் கொள்ளலாம்.

உடல் பருமனுக்காக ஏதேதோ பவுடர்களையும், மருந்துகளையும் முயற்சி செய்து ஏமாறாமல் வாரம் இரண்டு நாட்கள் ‘புத்தா பவுல்’ டயட்டையும் எடுத்துக்கொண்டுதான் பாருங்களேன்!

புத்தா பவுல் செய்முறை


முதலில் தானியம் கம்பு, ராகி, சோளம், பார்லி, கோதுமை, அரிசி போன்று உங்களுக்கு பிடித்த ஏதாவது ஒரு தானியத்தை ஒருகப் வேகவைத்து எடுத்துக் கொள்ளுங்கள். அடுத்து பிடித்த காய்களை வேகவைத்து அதோடு சுவைக்காக மசாலா பொருட்கள் மற்றும் காரத்துக்குச் சேர்த்து வதக்கிக் கொள்ள வேண்டும்.

பனீர், டோஃபு, சீஸ், வெண்ணெய் போன்ற பால்பொருட்களில் ஒன்றை துருவி வைத்துக் கொள்ள வேண்டும்.இப்போது தக்காளி, கேரட், வெள்ளரி போன்ற பச்சைக்காய்கறிகளை சிறு துண்டுகளாக நறுக்கி வைத்துக் கொள்ள வேண்டும். பிடித்த பழங்களை நறுக்கி வைத்துக் கொள்ள வேண்டும். மாதுளை முத்துக்களை பிரித்து வைத்துக் கொள்ளலாம்.

ஒரு அகலமான கிண்ணத்தில் முதலில் வேகவைத்த தானியம், அதன்மேல் வேகவைத்த காய்கறிகள், அடுத்த அடுக்கில் பச்சைக் காய்கறிகள், பழங்கள் சேர்க்க வேண்டும். அதன்மேல் துருவிய சீஸ், டோஃபு போன்றவற்றை தூவுங்கள். தயிர் கூட சேர்த்துக் கொள்ளலாம். இப்போது அதன்மேல் ஆலிவ் ஆயில், எலுமிச்சைச் சாறு சேர்க்க வேண்டும். உப்பு, மிளகுத்தூள், சீரகத்தூள் சேர்த்து இறுதியாக வறுத்த எள், கொத்தமல்லி இலை தூவி அலங்கரித்தால் புத்தா பவுல் ரெடி!

- இந்துமதி

தமிழ் மேட்ரிமோனி.காம் - தமிழர்களின் திருமண இணையத்தளம் - பதிவு இலவசம்!

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
 • 16-08-2018

  16-08-2018 இன்றைய சிறப்பு படங்கள்

 • 15-08-2018

  15-08-2018 இன்றைய சிறப்பு படங்கள்

 • chinaearthquake

  சீனாவின் யுன்னான் மாகாணத்தில் நிலநடுக்கம்: 18 பேர் காயம்

 • meteorshower

  ஆண்டுக்கு ஒருமுறை நடைபெறும் விண்கல் மழை: வானில் நிகழ்ந்த அதிசயம்

 • indonesiaafterquake

  இந்தோனேஷியாவில் ஏற்பட்ட நிலநடுக்கத்தின் பாதிப்பு: மக்களின் வாழ்வாதாரம் முடக்கம்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்