SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

நல்ல உடல் நலத்திற்கு.

2017-08-23@ 14:06:10

நன்றி குங்குமம் தோழி

துளசி டீ

பெரிய ஜாரில் 10 முதல் 15 துளசி இலைகளை போட்டுக் கொள்ளவேண்டும். நன்கு கொதிக்கும் நீர் இரண்டு கப் அதில் ஊற்றி மூடிவைத்து விடவேண்டும். ஐந்து நிமிடங்கள் கழிந்த பின் இலைகளை வடிகட்டி அருந்த வேண்டும்.

ரோஸ்மெரி டீ

சுடுநீரில் ஒன்றரை ஸ்பூன் ரோஸ்மெரி சேர்க்க வேண்டும். ஐந்து நிமிடங்கள் மூடிவைக்க வேண்டும். பின் வடிகட்டி வெது வெதுப்பாக அருந்தலாம். ஒரு நாளைக்கு 2 அல்லது 3 முறை இதை பருகலாம். குறிப்பு: கால்-கை வலிப்பு, உயர் ரத்த அழுத்தம் அல்லது ரத்தப்போக்கு குறைபாடுகள் இருப்பவர்களும், கர்ப்பிணிகளும் இதனை தவிர்ப்பது நல்லது.

ரோஸ்மெரி

இதில் சார்னோசால் மற்றும் ரோஸ்மாரினிக் அமிலம் இருப்பதால் உடல் நலத்துக்கு மிகவும் நல்லது. இதில் ஆன்டி ஆக்சிடன்ட் அதிகமாக உள்ளது. ரோஸ்மெரி இலையை உணவில் சேர்த்துக் கொள்வதனால் ஞாபகத்திறன் மற்றும் கவனம் மேம்படுகிறது. ரோஸ்மெரி பதட்டம், படபடப்பு, தலைவலி, மனஅழுத்தம், மூட்டு வலி, வீக்கம் ஆகியவற்றை குறைப்பதோடு முடி வளர்ச்சியையும் தூண்டுகிறது. சூப், சாலட், சாண்ட்விச் போன்றவற்றில் சேர்த்து சாப்பிடலாம்.

இஞ்சி

உடலில் உள்ள நச்சுத் தன்மையைக் குறைத்து உடலுக்கு எதிர்ப்பு சக்தியை அளிக்கிறது. உடல் முழுதும் ரத்த ஓட்டத்தை அதிகரிக்கிறது. பருவ மாற்றத்தால் ஏற்படும் சளி, கரகரப்பை சரி செய்யும். உடல் வீக்கத்தை குறைக்கும், ஜீரண சக்தியை அதிகரிக்கும், ரத்த சர்க்கரையை சீராக வைக்கும், நெஞ்செரிச்சல், வயிறு உப்புசம், குமட்டல் போன்றவற்றை குணமாக்குகிறது. பாக்டீரியா, வைரஸ், பூஞ்சையினால் உடலில்  எந்த பாதிப்பும் வராமல் பாதுகாக்கிறது. ஏதேனும் ஒரு வகையில் தினமும் உணவில் இஞ்சியை சேர்த்துக்கொள்வது நல்லது.

இஞ்சிச்சாறு

இஞ்சியை பொடிப்பொடியாக நறுக்கி வைத்துக் கொள்ள வேண்டும். ஒரு பாத்திரத்தில் இரண்டு கப் தண்ணீர் ஊற்றி கொதிக்க வைக்க வேண்டும். நறுக்கி வைத்த இஞ்சி துண்டுகளை ஒரு ஸ்பூன் வீதம் சேர்த்து கொதிக்க விடவேண்டும். இறக்கிய பின் வடிகட்டி, தேன் மற்றும் எலுமிச்சைச் சாறு சேர்த்து அருந்தலாம். குறிப்பு: இதயம் மற்றும் அதிக ரத்த அழுத்தத்திற்கு மருந்து சாப்பிடுவோர், மருத்துவர் பரிந்துரைத்தால் மட்டுமே இஞ்சி சாப்பிட வேண்டும்.

-பி.கமலா தவநிதி

ஆயிரத்தில் ஏன்? லட்ச்சத்தில் ஒருவரை தேர்ந்தெடுங்கள் - தமிழ் மேட்ரிமோனியில், பதிவு இலவசம்!

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
 • 24-09-2017

  24-09-2017 இன்றைய சிறப்பு படங்கள்

 • durgapujaidols100feet

  துர்கா பூஜை: வடமாநிலங்களில் பல்வேறு வடிவங்களில் துர்கா சிலைகள் வடிவமைப்பு

 • MUMBAItrAin

  100 வாரத்தில் 7.5 மில்லியன் கழிவுகள் அகற்றம்: பொதுமக்களால் பளிச்சென மாறிய மும்பை வெர்சோவா கடற்கரை

 • modi_inaguratee

  வாரணாசியில் பிரதமர் நரேந்திர மோடி 17 புதிய நலத்திட்டங்களை தொடங்கி வைத்தார்

 • 23-09-2017

  23-09-2017 இன்றைய சிறப்பு படங்கள்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்