SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

வெந்தயத்தின் மகத்துவம்!

2017-07-17@ 11:59:50

வெந்தயத்தை இலேசாக கருகாமல் வறுத்து பிறகு ஆறவைத்து பொடி செய்து ஒரு கண்ணாடி பாட்டிலில் பத்திரப்படுத்திக்கொள்ளுங்கள். தேவைக்கேற்ப ஒரு ஸ்பூன் வெந்தயப்பொடியை வெதுவெதுப்பான நீரில் கலந்து குடிக்கலாம். இதனால், நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கிறது. கொலஸ்ட்ரால் குறைகிறது. நீரிழிவு நோய் கட்டுப்படுகிறது. தாய்ப்பால் சுரப்பு அதிகரிக்கிறது. மார்பக புற்றுநோயை தடுக்கிறது. உடல் பருமன் குறைகிறது. ரத்தத்தில் உள்ள ஹீமோகுளோபின் அதிகரிக்கிறது. ஆண்மை விருத்தியடைகிறது.பெண்களுக்கு மார்பக வளர்ச்சியை தூண்டுகிறது. உடல் சூட்டை குறைக்கிறது. வயிற்று கடுப்பை நீக்குகிறது. மலச்சிக்கல் வராமல் தடுக்கிறது. மூட்டு தேய்மானம் மற்றும் மூட்டுவலியை குறைக்கிறது. கோடையில் ஏற்படும் நீர்கடுப்பை நீக்குகிறது.

தயிர் உரைபோடும்போது அதில் கொஞ்சம் வெந்தயத்தை ஊரப்போட்டு மறுநாள் அதை தயிருடன் சாப்பிட்டுவர கர்ப்பப்பை சம்மந்தமான நோய் நீங்கி ஆரோக்கியமடைகிறது. வெள்ளைப்படுதல் குணமாகிறது. இதை, தலைமுடி வேர்களில் தடவி சிறிது நேரம் கழித்து குளித்தால், முடி கருமையுடன் நன்றாக வளர்கிறது. பரு மீது தடவி வர, பரு முற்றிலும் மறைகிறது. புளித்த இட்லி மாவு அல்லது தயிருடன் வெந்தயத்தை அரைத்து தீப்புண் மீது தடவ, எரிச்சல் நீங்கி, கொப்பளம் வராமல் தடுக்கிறது.நீரிழிவு நோயாளிகள் அரை ஸ்பூன் வெந்தயத்தை காலையில் ஒரு குவளை தண்ணீரில் போட்டுவைத்து, இரவில் அந்த நீரை வடித்துவிட்டு குவளையை மூடியுடன் கவிழ்த்து வைத்துவிடவேண்டும். மறுநாள் காலையில் அது முளைவிட்டிருக்கும். நீரிழிவு நோயாளிகள் அந்த முளைவிட்ட வெந்தயத்தை காலையில் நன்றாக மென்று சாப்பிட்டுவர நீரிழிவு கட்டுப்படுகிறது. பொதுவாக, வெந்தயம் குளிர்ச்சி தன்மையுடையது. அதை தொடர்ச்சியாக சாப்பிடாமல் விட்டு விட்டு தேவைக்கேற்ப சாப்பிடலாம்.

திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
 • bhuvaneshkumar_marriage

  இனிதாக நடந்த புன்னகை பொங்கும் இந்திய கிரிக்கெட் வீரர் புவனேஸ்வர் குமாரின் திருமண நிகழ்வின் புகைப்படங்கள்

 • PrimeMinisters

  பிரதமர் மோடி - இலங்கை பிரதமர் இடையே பேச்சுவார்த்தை

 • 24-11-2017

  24-11-2017 இன்றைய சிறப்பு படங்கள்

 • YuvaraniVinayakaPrize

  சன்டிவி, தினகரன் வழங்கும் விநாயகர் பரிசுத் திருவிழா: வெற்றி பெற்றவர்களுக்கு நடிகை யுவராணி பரிசுகள் வழங்கினார்

 • ExpresshighwayNitin

  தமிழகத்தில் ரூ.12,000 கோடி செலவில் எக்ஸ்பிரஸ் நெடுஞ்சாலை அமைக்கப்படும்: நிதின் கட்கரி

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்