SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

முன்கூட்டியே மாரடைப்பை கண்டறியும் கருவி

2017-06-13@ 12:56:28

நன்றி குங்குமம் டாக்டர்

செய்திகள் வாசிப்பது டாக்டர்

முன்கூட்டியே மாரடைப்பைக் கண்டறிய உதவும் பரிசோதனை கருவியை தமிழகத்தை சேர்ந்த 10-ம் வகுப்பு மாணவன் ஆகாஷ்  மனோஜ் கண்டுபிடித்து அசத்தியிருக்கிறான். இந்த கண்டுபிடிப்புக்காக ஜனாதிபதி மாளிகையில் நடந்த நிகழ்ச்சியில் கலந்து  கொண்டும் தமிழகத்துக்குப் பெருமை சேர்த்துள்ளான் மனோஜ்.

எப்படி செயல்படுகிறது அந்த கருவி?

‘ரத்தத்தில் உள்ள fabB - 3 என்ற புரோட்டீன்கள்தான் மாரடைப்பு ஏற்பட காரணமாக அமைகிறது. இப்போது உருவாக்கியுள்ள  கருவியில் தோலைப் போன்ற சிலிகான் சவ்வு உள்ளது. அதில் ஒரு துளி புரோட்டீன் அல்புமின் மற்றும் fabB - 3 புரோட்டீன்கள்  உள்ளது. இந்த கருவியில் சிறிய அளவு பாஸிட்டிவ் மின்சாரம் செலுத்தும்போது, fabB - 3 புரோட்டீன்கள் ஈர்க்கப்பட்டு ஒன்று  திரள்கின்றன. இதில் அல்ட்ரா வயலட் ஒளி செலுத்தப்படுகிறது. அல்ட்ரா வயலட் ஒளி ஈர்க்கும் அளவை பொருத்து புரோட்டீன்களின்  அளவை கண்டறிய இந்த கருவியில் சென்சார் உள்ளது.இதே முறையில் அல்ட்ரா வயலட் ஒளியை தோல் மூலமாக செலுத்தி ரத்தத்தில் உள்ள fabB - 3 அளவை கண்டறியலாம். இந்த  புதுமையான சோதனை மூலம் ஒருவருக்கு மாரடைப்பு அபாயம் இருக்கிறதா என்பதை முன்கூட்டியே அறிந்து மருந்துவரை சரியான  நேரத்தில் சந்தித்து சிகிச்சை பெற முடியும்.Silent heart attack மிகவும் கொடூரமானது.எந்த அறிகுறியும் காட்டாமல், ஆரோக்கியமாக இருப்பதுபோல் தெரியும் நபரை திடீரென தாக்கி சத்தமில்லாமல் கொல்லும்.  ஆரோக்கியமாக நடமாடி கொண்டிருந்த எனது தாத்தா, ஒரு நாள் திடீரென மாரடைப்பு ஏற்பட்டு சரிந்தார். நான் தற்போது இந்த  கருவியை கண்டுபிடிக்க இந்த சம்பவமே தூண்டுகோலாக அமைந்தது’ என்று இதன் பின்னால் இருக்கும் காரணத்தையும் சொல்லி  நெகிழ வைத்திருக்கிறான் மனோஜ். சபாஷ்!

- க.கதிரவன்

பொருத்தமான வரன் தேடுகிறீர்களா? தமிழ்மேட்ரிமோனியில் பதிவு இலவசம்!

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • siccoarSTUCKinachild

    விளையாட்டால் விபரீதம் : 2 வயது குழந்தையின் நெற்றியில் மாட்டிய கத்தரிக்கோல் அறுவைசிகிச்சைக்கு பிறகு அகற்றம்

  • chiLDSIwisjhh

    மாணவரின் எஸ்ஐ ஆசையை நிறைவேற்றிய போலீஸ் கமிஷனர் ஏ.கே.விஸ்வநாதன்

  • 19-08-2017

    19-08-2017 இன்றைய சிறப்பு படங்கள்

  • biharBRIDGEcollapse

    பாலத்தை கடக்கும் முன் பாதியிலேயே இடிந்து விழுந்ததில் 3 பேர் உயிரிழப்பு..!

  • assamRFGBIHARflood

    வெள்ளத்தில் மிதக்கும் பீகார், அசாம் மாநிலங்கள் : லட்சக்கணக்கான மக்களின் வாழ்க்கை பாதிப்பு

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்