SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

ஜாலியா ஒரு எக்சர்சைஸ்

2017-05-19@ 15:23:24

நன்றி குங்குமம் டாக்டர்

Aerobics
 
சாதாரண உடற்பயிற்சிகளைவிட ஏரோபிக்ஸ் உடற்பயிற்சி சற்று வித்தியாசமானது. இதயத்துடிப்பையும், சுவாசத்தையும் தூண்டி இதயத்துக்குச் செல்லும் ரத்த ஓட்டத்தை சீர்படுத்துவதால் இதனை கார்டியோ எக்சர்ைசஸ் என்றும் சொல்லலாம்’’ என்கிறார் ஃபிட்னஸ் டிரெயினரான மீனாட்சி அருணாசலம்.யோகா, ஏரோபிக்ஸ், பிஸியோதெரபி என பல்வேறு உடற்பயிற்சிகளில் 30 வருடம் அனுபவம் மிக்க மீனாட்சி அருணாசலம், தமிழ் சினிமா முன்னணி நட்சத்திரங்களின் ஃபிட்னஸ் டிரெயினர் என்பது ஸ்பெஷல் தகவல்.‘‘ஏரோபிக்ஸ்(Aerobics) எக்சர்சைஸ் செய்வதால் எலும்பு, தசைகள் வலுவடைவதைப் போலவே இதயம், நுரையீரலும் வலுவாகும். உடலின் கெட்ட கொழுப்பு கரையும்; டைப் 2 நீரிழிவும் கட்டுக்குள் வரும். தொடர்ந்து ஏரோபிக்ஸ் செய்வதன் மூலம் உடலில் உள்ள அதிகப்படியான சதையை விரைவில் கரைக்கலாம். தோல் சுருக்கமடைவதை தடுப்பதால் வயதான தோற்றத்திலிருந்தும் விடுபடலாம்.

இருந்த இடத்திலேயே Jogging excercise செய்வதால் கால்கள் நன்கு வலுவடைகின்றன. கைகள் இரண்டையும் தலைக்குமேலே தூக்கி செய்யும் Hand excercise கைகளில் உள்ள தளர்வடைந்த தசைகளை இறுக்கமடையச் செய்யும்.குழந்தை பிறப்புக்குப் பிறகு இளம் தாய்மார்களுக்கு இடுப்பு மடிப்புகளில் சதை போட்டுவிடும். இவர்கள் கைகள் இரண்டையும் இடுப்பில் வைத்துக் கொண்டு இரண்டுபுறமும் பக்கவாட்டில் திரும்பி வேகமாக இடுப்புக்கான பயிற்சியை செய்தால் ஸ்லிம் இடுப்பழகு கிடைத்துவிடும்.

வலது கையால் இடது காலையும், இடதுகையால் வலது காலையும் மாற்றி, மாற்றி டான்ஸ் ஆடுவது போல வேகமாக செய்தால் அடிவயிற்று பகுதியில் இருக்கும் சதை குறையும். தற்போது அதிக நேரம் கம்ப்யூட்டரில் வேலை செய்பவர்களுக்கு மணிக்கட்டு, தோள்பட்டைகளில் வலி ஏற்படுகிறது. மேலும்,  இருசக்கர வாகனங்களில் நெடுந்தொலைவு பயணம் செய்பவர்களுக்கும் இடுப்பு, தோள்பட்டை வலி வருகிறது.இதற்கெல்லாம் தனியாக பயிற்சிகள் இருக்கிறது’’ என்கிற மீனாட்சி இதுபோன்ற பயிற்சிகளை தொலைக்காட்சியிலும், வீடியோக்களையும் பார்த்து செய்வதைவிட பயிற்சியாளர்களிடம் முறையாகக் கற்றுக்கொண்டு செய்ய வேண்டும் என்பது முக்கியம் என்கிறார். ஏனெனில், ஒவ்வொருவரின் உடல் செயல்பாடும்(Metabolism) வேறு வேறு. அதற்குத் தகுந்தவாறு பயிற்சியாளர் கற்றுக் கொடுப்பார் என்பதே அவர் சொல்லும் காரணம்.

‘‘இவற்றுடன் ஏரோபிக்ஸில் முக்கியமான ஒரு ப்ளஸ்.... வழக்கமான உடற்பயிற்சிகளை மேற்கொள்ளும்போது சலிப்பு ஏற்பட்டுவிடும் வாய்ப்பு உண்டு. அதனாலேயே தொடர முடியாமல் கொஞ்ச காலத்தில் விட்டுவிடுவோம். ஆனால், ஏரோபிக்ஸ் பயிற்சிகள் கற்றுக் கொள்வதற்கும், பயிற்சி செய்வதற்கும் சந்தோஷமாகவும், ஆர்வத்தைத் தூண்டும் வகையிலும் இருக்கும் என்பதால் தொடர்ந்து மிஸ் பண்ணவே மாட்டோம். ஏரோபிக்ஸில் இது முக்கியமான விஷயம்’’ என்கிறார்.

- இந்துமதி

பொருத்தமான வரன் தேடுகிறீர்களா? தமிழ்மேட்ரிமோனியில் பதிவு இலவசம்!

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • 25-05-2017

    25-05-2017 இன்றைய சிறப்பு படங்கள்

  • californiaHIGHsurINHIGHWAY

    அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தில் பயங்கர நிலச்சரிவு - நெடுஞ்சாலையின் ஒரு பகுதி முற்றாக சேதம்

  • seADEGRESEDbusywork

    புதுவையில் துறைமுகம் அமைப்பதற்காக ஒப்பந்தம் போடப்பட்டுள்ள நிலையில், கடலுக்குள் தூர்வாரும் பணி மும்முரம்

  • 500METREGLASSslideINchina

    சுற்றுலாப் பயணிகளை ஈர்க்கும் வகையில் சீனாவில் மஞ்சள் ஆறு மீது 500 மீட்டர் நீளமுள்ள கண்ணாடி சறுக்கு அமைப்பு

  • police_vehicless1

    போலீசாரால் பறிமுதல் செய்யப்பட்ட வாகனங்கள் திடீரென தீப்பிடித்து எரிந்தன