SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

மருத மரம்... மருத்துவ மரம்...

2017-04-19@ 12:58:11

நன்றி குங்குமம் டாக்டர்

இயற்கையின் அதிசயம்


‘எப்போதும் பசுமையாகக் காட்சியளிக்கும் மருத மரத்தை மருத்துவ மரம் என்றே சொல்லலாம். அந்த அளவுக்கு அளவற்ற மருத்துவ  குணங்கள் பலவற்றைக் கொண்டது’ என்று மருத மரத்தின் புகழ் பாடுகிறார் சித்த மருத்துவர் ஜெயலட்சுமி.மருத மரத்தின் பயன்கள்  பற்றியும், அதனைப் பயன்படுத்தும் முறை பற்றியும் தொடர்ந்து விளக்குகிறார்.

*மருத மரத்தில் இருந்து கிடைக்கும் மருதம் பட்டைக்கு எண்ணற்ற மருத்துவ குணங்கள் உண்டு. இந்த மருதம் பட்டை சிறிது  துவர்ப்பு சுவை உடையது.
*வைட்டமின் சி மருதம்பட்டையில் மிகுதியாக அடங்கி உள்ளது.
*மருதம் பட்டையை அரைத்துப் பொடியாகவும், மருதம் பட்டையை தண்ணீரில் ஊறவைத்து குடிநீராகவும் பயன்படுத்தலாம்.
*மருதம் பட்டை உடலுக்கு மிகுந்த குளிர்ச்சியைத்  தருகிறது. குடல் தொடர்பான எல்லா நோய்களுக்கும் இது சிறந்த மருந்து என்று  சொல்லலாம்.
*மருதம் பட்டை குடிநீர் பயன்படுத்தினால் உடலில் ரத்தக்கொதிப்பு, இதய படபடப்பு, தூக்கமின்மை, நீரிழிவு பிரச்னை, கல்லீரல்  பிரச்னை போன்றவைகள் கட்டுக்குள் வரும்.
*ஆன்டி ஆக்சிடென்ட் என்ற புத்துணர்வு தரும் சக்தி மருதம்பட்டையில் அதிகமாக இருக்கிறது. கல்லீரல், நுரையீரல், மார்பு, வாயில்  ஏற்படும் புற்றுநோய்கள் போன்றவைகளை வராமல் தடுக்கும் திறன் மருதம் பட்டைக்கு உண்டு.
*மருதம் பட்டை - 200 கிராம், சீரகம் - 100 கிராம், சோம்பு - 100 கிராம், மஞ்சள் - 100 கிராம் அனைத்தையும் ஒன்றாக எடுத்து,  நன்றாகப் பொடித்து தூள் செய்து வைத்திருந்து, தினமும் கொதிக்க வைத்த தண்ணீரில் 5 கிராம் அளவு தண்ணீரில் கலந்து அருந்தி  வந்தால் ரத்த அழுத்தம் குணமடையும்.
*தூக்கமின்மை, மன உளைச்சல், படபடப்பு நீங்க மருதம் பட்டை தூளுடன் சிறிது கசகசா வறுத்து அரைத்து பாலில் கலந்து  அருந்தினால் மாற்றத்தை உணர முடியும்.
*ஹார்மோன் குறைபாடு, அதிக உதிரப்போக்கு, மாதவிடாய் போன்ற பிரச்னைகள் கொண்ட பெண்கள் மருதம் பட்டை கஷாயத்தைப்  பயன்படுத்தலாம்.
*மருதம் பட்டை - 100 கிராம் அளவிலும், சீரகம் - 25 கிராம் அளவிலும் சேர்த்து கொதிக்கவைத்து ஆறிய நிலையில் குடிநீராக  தினமும் குடித்து வந்தால் இதயம் வலுவாகும். மன அழுத்தம் நீங்கி நல்ல தூக்கம் கிடைக்கும். இதன்மூலம் ரத்த குழாய்களில்  கொழுப்பு அதிகமாக படிவதும் தடுக்கப்படும்.

- க.இளஞ்சேரன்
படங்கள் : ஏ.டி.தமிழ்வாணன்

vivitrol shot information open naltrexone other names
alcohol naltrexone charamin.com naltrexone uk
naltrexone mechanism of action drug naltrexone low dose naltrexone australia
naltrexone mechanism of action vivitrol implant low dose naltrexone australia
naltrexone low dose depression open how to get naltrexone out of your system

திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
 • 10thexams_111

  10ம் வகுப்பு அரையாண்டு தேர்வுகள் தொடங்கியது

 • hardik_anivaguppu

  பாடிதாரின் கிளர்ச்சி தலைவர் ஹார்டிக் படேல் அகமதாபாத்தில் நடத்திய மாபெரும் மோட்டார் சைக்கிள் அணிவகுப்பு

 • rahulgandhi_11

  அகில இந்திய காங்கிரஸ் தலைவரான ராகுல்காந்தியின் அரசியல் வாழக்கையை எடுத்துரைக்கும் அரிய படங்கள்

 • kumari_ogi_puyal11

  ஓகி புயல் பாதிப்பிற்கு நிவாரணம் கேட்டு குமரி மீனவர்கள் கருப்புக்கொடிகளுடன் கடலில் இறங்கி மனித சங்கிலி போராட்டம்

 • porattam_arasu_11

  அரசு மருத்துவர்களுக்கான நேர்முக கலந்தாய்வை ரத்து செய்ய கோரி பட்டை நாமம் அணிந்து, ஆணி மேல் நடக்கும் நூதன போராட்டம்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்