SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

பயாப்ஸி ஏன்? எதற்கு? எப்படி?

2017-03-16@ 15:17:54

நன்றி குங்குமம் டாக்டர்

லேப் ரிப்போர்ட்

புற்றுநோய் வராமல் தடுப்பதற்கும், விழிப்புணர்வோடு பரிசோதனை செய்துகொள்வதற்கும் பல முன் எச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்துக் கொள்வது அவசியம். அந்த வகையில், புற்றுநோயைக் கண்டறிய உதவும் பயாப்ஸி பரிசோதனை பற்றி விளக்குகிறார் கதிர்வீச்சுபுற்றுநோய் நிபுணர் சுமனா.

பயாப்ஸி என்பது என்ன?

‘‘நமது உடலில் உள்ள திசுக்கள் அல்லது செல்களின் பகுப்பாய்வு பரிசோதனை முறைக்கு பயாப்சி(Biopsy) என்று பெயர். உடலில் அசாதாரணமான முறையில் இருக்கும் கட்டிகளின் தன்மையையும், புண் மற்றும் நீர்கோர்த்திருக்கும் பகுதிகளில் வைரஸ், பாக்டீரியா, பூஞ்சை போன்ற கிருமிகளால் என்ன மாதிரியான நோய் பாதிப்பு ஏற்பட்டுள்ளது என்பதையும் கண்டறிய உதவுகிறது இந்த ஆய்வு முறை.

உடலின் வெளிப்புறம் மற்றும் உள்ளுறுப்புகளில் வித்தியாசமான புண், வீக்கம், கட்டிகள் இருந்தால் அதற்கான மருந்துகளை முதலில் கொடுத்துப் பார்க்க வேண்டும். மருந்துகளினால் குணமாகாவிட்டால் ரத்தத்தில் ரத்தக்கசிவு, ரத்தம் உறைதல், ரத்த சர்க்கரை அளவு போன்ற பரிசோதனைகளைச் செய்ய வேண்டும். ஏதாவது கிருமிகளின் பாதிப்பு உள்ளதா, வேறு ஏதேனும் தொற்று உள்ளதா போன்ற அடிப்படை பரிசோதனைகளையும் செய்ய வேண்டும். அதன் பின்புதான் மருத்துவர் பயாப்ஸி செய்துகொள்ள பரிந்துரைப்பார்.’’

எப்படி செய்யப்படுகிறது?

‘‘உடலில் உள்ள கட்டி அல்லது நீர் போன்றவற்றில் உள்ள திசுக்களை அதற்கான உபகரணங்களின் உதவியோடு வெட்டியோ, உறிஞ்சியோ எடுக்கப்பட்டு பயாப்ஸிக்கு அனுப்பப்படுகிறது. தேவையின் அடிப்படையில் மயக்க மருந்துகள் கொடுக்கப்பட்டு திசுவானது வெட்டி எடுக்கப்படும்.

ஆய்வகத்தில் அந்த திசுவில் ஏற்பட்டுள்ள பாதிப்புகளை கண்டறிவதற்கான நோய்க்குறியியல் வல்லுநர்கள்(Pathologist) உள்ளனர். அந்த திசுக்களில் உள்ள செல்கள், நுண்ணோக்கி உதவியுடன் பகுப்பாய்வு செய்யப்பட்டு நோய் பாதிப்பின் தன்மைகள் கண்டுபிடிக்கப்படும்.’’
பல புற்றுநோய்கள் இருக்கின்றனவே...

ஒவ்வொன்றுக்கும் பயாப்ஸி முறை மாறுமா?
‘‘தோலின் மேற்புறம், உடல் உள்ளுறுப்புகளில் உள்ள புண் மற்றும் கட்டிகளை கண்ணாடி, பிரஸ், SPATULA(தட்டையான குச்சி வடிவ உபகரணம்) போன்றவற்றின் மூலம் சுரண்டி எடுத்து பரிசோதனை செய்வதற்கு Scrape smear என்று பெயர். பெண்களுக்கு எடுக்கப்படும் கருப்பை வாய் புற்றுநோய் பரிசோதனையில் தேவையான திசுக்களை பிரஸ், ஸ்பேட்டுலா போன்ற உபகரணங்களின் உதவியோடு எடுத்து பரிசோதனை செய்யப்படுகிறது.

புண், கட்டி போன்றவற்றில் நீர்ம நிலையில் உள்ள செல்களை ஊசியின் மூலம் உறிஞ்சி எடுத்து பரிசோதனை செய்வதற்கு Fine needle aspiration cytology என்று பெயர். Tru cut needle என்ற உபகரணத்தின் உதவியோடு திசுக்கள் அல்லது செல்களை வெட்டி எடுத்து பரிசோதனை செய்வதற்கு Tru cut biopsy என்று பெயர். சருமத்தின் மேற்புறமுள்ள புண்களிலிருந்து திசுக்களை வெட்டி எடுத்து பரிசோதனை செய்வதற்கு Punch biopsy என்று பெயர். Punch biopsy forceps என்ற உபகரணம் மூலம் இது கண்டறியப்படும்.

வயிற்றில் இருக்கும் கட்டி, நீர், நுரையீரலை சுற்றியுள்ள நீர் போன்றவற்றில் உள்ள திசுக்களை அல்ட்ரா சவுண்ட் ஸ்கேன் உதவியோடு கண்டறிந்து, அதை ஊசியின் மூலம் எடுத்து பரிசோதனை செய்வதற்கு Ultrasound guided biopsy என்று பெயர். பெரிய கட்டிகளை கண்டறிவதற்கு இந்த முறை பயன்படுகிறது.

சிடி ஸ்கேன் உதவியோடு, ஊசி மூலம் கல்லீரலில் இருந்து திசுக்களை எடுத்து பரிசோதனை செய்வதற்கு Liver biopsy என்று பெயர். இதேபோல் சிறுநீரகத்தில் இருந்து திசுக்களை எடுத்து பரிசோதனை செய்வதற்கு Kidney biopsy என்றும், புராஸ்டேட் சுரப்பியிலிருந்து திசுக்களை எடுத்து பரிசோதனை செய்வதற்கு Prostate Biopsy என்று பெயர்.

இந்த பரிசோதனைகள் சிடி ஸ்கேன் உதவியோடு செய்வதால் CT Scan guided biopsy என்றே பெயர். உடல் உள்ளுறுப்புகளில் உள்ள மிகச்சிறிய திசுக்களையும் பரிசோதனை செய்ய இந்த முறை பயன்படுகிறது.

மூளையில் உள்ள கட்டிகளை, கணிணி மூலம் ஒருங்கமைக்கப்பட்ட முப்பரிணாம அமைப்பின் உதவியோடு கண்டுபிடித்து, அதிலுள்ள செல்களை எடுத்து பரிசோதனை செய்யும் முறைக்கு Stereotactic biopsy என்று பெயர். பெரிய ஊசியின் மூலம் சிடி ஸ்கேன் உதவியோடு எலும்புகளிலிருந்து திசுக்களை எடுத்து பரிசோதனை செய்வதற்கு Bone marrow biopsy என்று பெயர்.

மார்பெலும்பு மற்றும் இடுப்பெலும்பு மஜ்ஜைகளில் இருந்து ஊசி மூலம் எளிதாக திசுக்களை எடுக்க முடியும். இந்த பரிசோதனை மூலம் நமது உடலில் ரத்தம் சம்பந்தப்பட்ட நோய்களான Leukemia, Lymphoma போன்றவற்றின் பாதிப்புகள் ஏற்பட்டுள்ளதா, எலும்புகளில் புற்றுநோய் செல்கள் உள்ளதா என்பதை கண்டறியலாம்.’’

பயாப்ஸிக்கு வேறு ஏதேனும் முக்கியத்துவம் இருக்கிறதா?


‘‘உடல் உறுப்பு மாற்று அறுவை சிகிச்சைக்கு முன்பு, உறுப்பு தானம் பெறுபவருக்கு அது சரியாக பொருந்துமா, அந்த நபருக்கு ஏதேனும் நோய்க் கிருமிகளின் பாதிப்பு உள்ளதா போன்றவற்றை கண்டுபிடிக்க தானம் பெறப்பட்ட அந்த உறுப்பின் திசு முதலில் பரிசோதனை செய்யப்படுகிறது. மேலும் மாற்று உறுப்பு பொருத்தப்படும் நபரின் திசுக்களும் பரிசோதனை செய்யப்படுகிறது.

இந்த பரிசோதனைகளின் முடிவுகளைப் பொறுத்தே உடல் உறுப்பு மாற்று அறுவை சிகிச்சைகளை மேற்கொள்ள முடியும். எனவே, உறுப்பு மாற்று அறுவை சிகிச்சைகளின்போது பயாப்சி பரிசோதனை முக்கிய பங்கு வகிக்கிறது. பயாப்ஸி பரிசோதனைகளை செய்துகொள்வதற்கு பயப்படத் தேவையில்லை. புறநோயாளிகளாக இருந்துகொண்டே இந்த பரிசோதனைகளை செய்துகொள்ள முடியும். ’’

- க.கதிரவன்
படம் : ஏ.டி.தமிழ்வாணன்

naltrexone for alcohol cravings go naltrexone pain management
side effects of naltrexone 50 mg read what is naltrexone
when to take naltrexone naltrezone revia side effects
where to get naltrexone implant site stopping ldn
naltrexone with alcohol news.hostnetindia.com naltrexone for pain
naltrexone alcohol open implant for opiate addiction
low dose ldn blog.admissionnews.com ldn online
naltrexone moa skydtsgaard.dk naltrexone medication
naltrexone moa naltrexone low dose fibromyalgia naltrexone medication
naltrexone effectiveness go define naltrexone
naltrexone injections site stopping ldn
order naltrexone saveapanda.com how naltrexone works
alcohol naltrexone charamin.com naltrexone uk
naltrexone mechanism of action drug naltrexone low dose naltrexone australia
naltrexone low dose depression naltrexone sleep how to get naltrexone out of your system

பொருத்தமான வரன் தேடுகிறீர்களா? தமிழ்மேட்ரிமோனியில் பதிவு இலவசம்!

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • 29-05-2017

    29-05-2017 இன்றைய சிறப்பு படங்கள்

  • 28-05-2017

    28-05-2017 இன்றைய சிறப்பு படங்கள்

  • konnorFRUITSHOW2017

    குன்னூர் சிம்ஸ் பூங்காவில் கோலாகலமாக தொடங்கியுள்ள பழக்கண்காட்சி : சிறப்புப் படங்கள்

  • SQUIRELsmothiTONGUE

    வெயிலின் கடுமையால் சோர்வடைந்து குடிநீர் தொட்டியில் இருந்து கசியும் தண்ணீரில் நாக்கை நனைக்கும் அணில்

  • springFESTvlorDMURUG

    வசந்த விழாவின் நிறைவு நாளில் சிங்காரவேலர் புஷ்ப பல்லக்கில் எழுந்தருளி மாட வீதிகளில் உலா வந்தார்