SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

வீகன் டயட் நலம் வாழ நனி சைவம்

2017-03-13@ 15:29:25

நன்றி குங்குமம் டாக்டர்

திடீர் மினி தொடர்


தொடங்கும் முன்...இணையதளங்களைப் பயன்படுத்துவோர் மட்டுமே அறிந்திருந்த ‘பேலியோ உணவுமுறையை, விரிவான அட்டைப்பட கட்டுரையின்மூலம் தமிழ் வாசகர்களுக்குப் பரவலாகக் கொண்டு சேர்த்த முதல் தமிழ் ஊடகம் ‘குங்குமம் டாக்டர்’தான்
என்பது வாசகர்களுக்கு நினைவிருக்கும்.அதேபோல், சமீபகாலமாக அடிக்கடி கேள்விப்படும் ‘வீகன் டயட்’ பற்றிய ஒரு புரிதலை வாசகர்களுக்கு ஏற்படுத்துவதற்காகவே இந்த திடீர் மினி தொடர்.

இதனால், குறிப்பிட்ட உணவுமுறையை வாசகர்களுக்கு ‘குங்குமம் டாக்டர்’ பரிந்துரைக்கிறது என்று அர்த்தம் இல்லை. உணவுப்பழக்கம் என்பது தனிநபரின் உடல்நிலை, வாழ்க்கைமுறை, விருப்பம் போன்ற பல்வேறு காரணங்களின் அடிப்படையிலானது. முக்கியமாக மருத்துவ ஆலோசனை இல்லாமல் எந்த உணவுமுறையையும் யாரும் பின்பற்றக் கூடாது என்பதை நினைவுபடுத்த விரும்புகிறோம். ஆம்... வீகன் என்ற உணவுமுறை பற்றிய அறிமுகத்துக்காகவே இந்த தொடர்.

இனி வீகன் டயட் பற்றி டாக்டர் சரவணன் பேசுகிறார்...‘‘உங்கள் உணவு தவறாக இருந்தால் மருந்துகளினால்கூட பயனில்லை; உங்கள் உணவு சரியாக இருந்தால் மருந்துகள் தேவைப்படுவதில்லை'’ என்கிறது பழமொழி ஒன்று. ஹோமியோபதி மருத்து வத்தில் பட்டம் பெற்ற நான், வீகன் டயட் குறித்து பேசுவதற்கு காரணம் எனது சொந்த அனுபவம்தான்.

சிறுவயது முதல் பல உடல் உபாதைகளால் சிரமப்பட்டுக் கொண்டிருந்தேன். பலவிதமான மருத்துவ சிகிச்சைகளாலும் பலனில்லை. 2011-ம் ஆண்டு ‘வீகன் டயட்’ குறித்த புத்தகங்கள் பலவற்றை வாசித்துத் தெரிந்துகொண்டேன். வீகன் டயட் குறித்த கருத்தரங்கில் ஆர்வத்துடன்
கலந்துகொண்டேன். அதன் பின்னர் வீகன் டயட்டைப் பின்பற்ற ஆரம்பித்தேன்.

எனது உடல்நலத்தில் நல்ல மாற்றங்களை உணரத் தொடங்கினேன். உடல்நலத்துக்கான சரியான உணவு வீகன் டயட்தான் என்பதை உணர்ந்தேன். வீகன் உணவியல் குறித்து மருத்துவர்களுக்கான சிறப்புப் பயிற்சி வகுப்புகளிலும் பங்கேற்றேன். வீகன் உணவு குறித்த பல அறிவியல் ஆய்வுகள் குறித்தும், வீகன் உணவினால் நோய்களை சரி செய்யும் முறை குறித்தும் தெளிவாக அறிந்து கொண்டேன்.

வீகன் உணவு குறித்த ஆய்வுக்கு கட்டுரைகளையும், புத்தகங்களையும் ஆழ்ந்து படித்தபிறகு உணவுக்கும் நோய்க்கும் உள்ள தொடர்பினை நன்கு அறிந்து கொண்டேன். அதன் அடிப்படையில் பலவிதமான நோய்களினால் பாதிப்படைந்துள்ளவர்களுக்கு வீகன் உணவு குறித்த ஆலோசனைகளை தற்போது வழங்கி வருகிறேன். இந்த உணவு முறையினைப் பின்பற்றி பலரும் நலமடைந்து வருவதையும் காண்கிறேன்.

உலகம் முழுவதும் வீகன் உணவுமுறை மிகவும் பிரபலமடைந்து வருகிறது. ஹாலிவுட், பாலிவுட், பிரபலங்கள் பலரும் வீகன் டயட்டைப் பின்பற்றி வருகின்றனர். இவர்கள் மட்டுமா? தென்னிந்திய திரை நட்சத்திரங்களான அமலா நாகர்ஜுனாவும், பார்வதி மேனனும்கூட வீகன்ஆதரவாளர்கள்தான்!ஒலிம்பிக் புகழ் கார்ல் லூயிஸ், ஓட்டப்பந்தய வீராங்கனை ரூத் ஹேட்ரிச்,  550  கிலோ எடை  தூக்கி சாதனை புரிந்த உலகின்மிக வலிமையான மனிதர் பாட்ரிக் பாபோமியன் என வீகன் வீரர்களின் பட்டியலும் நீண்டுகொண்டே போகிறது.

விளையாட்டு வீரர்கள் பலரும் தங்களது உடல் வலிமையை இயற்கையான முறையில் அதிகரித்துக்கொள்ள இந்த உணவுமுறைக்கு மாறி வருகின்றனர்.கடந்த 10 ஆண்டுகளில், பிரிட்டனில் வீகன் உணவு மற்றும் வாழ்க்கைமுறையினைத் கடைப்பிடிப்பவர்களது எண்ணிக்கை 360 % உயர்ந்துள்ளதாகக் கணக்கிடப்பட்டுள்ளது. அமெரிக்காவில் மட்டும் வீகனாக  இருப்பவர்களின் எண்ணிக்கை கிட்டத்தட்ட 8 மில்லியன் என்கிறது ஒரு புள்ளி விபரம். நம் நாட்டிலும் பலர் இந்த உணவுமுறைக்கு வேகமாக மாறிவருகிறார்கள்!

அது மட்டுமா? உடல் பருமன், சர்க்கரை நோய், உயர் ரத்த அழுத்தம், இதய நோய் மற்றும் சில வகைப் புற்றுநோய்கள் வராமல் தடுப்பதற்கும், ஆரோக்கியமாக வாழ்வதற்கும் மருத்துவர்கள் பலரும் இந்த வீகன் டயட்டினை தங்களது நோயாளிகளுக்குப் பரிந்துரைக்கின்றனர்!அப்படி என்னதான் இருக்கிறது வீகன் உணவுமுறையில்? இந்த வீகன் டயட் ஆரோக்கியமானதுதானா? நடைமுறைக்கு சாத்தியமான ஒன்றா? இந்த டயட்டின் அறிவியல் பின்னணி என்ன? இதனால் நமக்குக் கிடைக்கும் பலன்கள் என்ன?

(தெரிந்து கொள்வோம்!)

when to take naltrexone s467833690.online.de revia side effects

வாழ்க்கைத் துணையை தேடுகிறீர்களா? தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
 • children_protestt11

  ஆர்.கே.நகர் தொகுதி தேர்தல் - பிரசாரத்துக்கு சிறுவர்களை ஈடுபடுத்தும் அரசியல் கட்சிகள்

 • 2500_type_idlyy

  உலக இட்லி தினம் - சென்னையில் 2500 வகையான இட்லிகளின் கண்காட்சி நடந்தது

 • 30-03-2017

  30-03-2017 இன்றைய சிறப்பு படங்கள்

 • FLIHJTarestre

  செம்மரக்கட்டை கடத்தலில் 6 மாதம் தலைமறைவான விமான பணிப்பெண் கைது: கொல்கத்தாவில் சிக்கினார்

 • farmersSUPPORtstuMAR

  விவசாயிகளுக்கு ஆதரவாக சென்னை மெரினாவில் மாணவர்கள் கடலில் இறங்கி போராட்டம்