SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

அலர்ட் ஆகுங்கள் அம்மாக்களே!

2020-06-01@ 12:20:26

இன்று வேதிப் பொருட்கள் இல்லாத தயாரிப்புகளே இல்லை என்றுதான் சொல்ல வேண்டும். காலை எழுந்தவுடன் பல் துலக்கப் பயன்படுத்தும் பேஸ்ட்டில் தொடங்கி, படுக்கும் போது கொழுத்தும் கொசுவத்தி லிக்விட் வரை அனைத்தும் கெமிக்கல்தான். ஆனால், இந்த வேதிப் பொருட்கள் நம் குழந்தைகளுக்கான தயாரிப்புகளிலும் நீக்கமற இடம்பெற்றதுதான் கவலைக்குரிய விஷயம். உங்கள் பாப்பாவுக்கான தயாரிப்புகளில் கலந்திருக்கும் வேதிப்பொருட்கள் என்னென்ன?

அதிக வாசனை (Fragrance)

வாசனை வஸ்த்துகள் சேர்க்கப்படாத பொருட்கள் இன்று  இல்லை என்றே சொல்லலாம். இன்று பல தயாரிப்புகளில் அவற்றில் சேர்க்கப்படும்  கெமிக்கல்களின் வாசனையை நீக்குவதற்காகவே அதற்கென பிரட்யேக வாசனைப் பொருட்களைக் கலக்கிறார்கள். பொதுவாக, இந்த வாசனைப் பொருட்கள் எதிலிருந்து தயாரிக்கப்படுகிறது என்றால் கோல், பெட்ரோலியம், சில சிந்தட்டிக் கெமிக்கல்ஸ் போன்றவற்றிலிருந்து தயாரிக்கப்படுகிறது. இந்த வாசனை மிகுந்த பொருட்கள் சருமத்தில் நீண்ட நேரம் இருக்ககூடியது என்பதால்,  சுவாசப்பாதை, நரம்பு மண்டலம், சருமம், கண்கள் ஆகியவற்றுக்கு பாதிப்பு ஏற்படலாம். மேலும், அதிக வாசனை கலந்த பொருட்களைத் தொடர்ந்து பயன்படுத்துவதால் குழந்தைக்கு ஆஸ்துமா பாதிப்புகள் வரலாம். பேபி பவுடர், பேபி வாஷ், பேபி ஷாம்பு, லோஷன் போன்ற எந்த பேபி பொருட்களை வாங்கும் முன்னும் அதன் லேபிளை கட்டாயம் சரி பார்த்து, அதிக வாசனை இல்லாத பொருட்களாக வாங்குங்கள்.

டால்க் (Talc)

பேபி பவுடரில் சேர்க்கக்கூடிய பவுடர் மினரல் (Talc) இது. மற்ற காஸ்மெட்டிக் பவுடர்களிலும் சேர்க்கப்படுகிறது. இது சருமத்தை உலர செய்யும் தன்மை கொண்டது. ஆதலால், பவுடர்களில் சேர்க்கப்படுகிறது. இந்த வேதிப் பொருள்  நுரையீரலுக்கு ஒவ்வாமை ஏற்படுத்தக்கூடியது. கார்சினோஜெனிக், அதாவது புற்றுநோய் காரணியாகவும் செயல்படும். மோசமான பின்விளைவுகளை ஏற்படுத்தக்கூடிய கெமிக்கல் என்பதால், பல நிறுவனங்கள் குழந்தைகளுக்கு  டாக்-ஃப்ரீ பவுடரையே தயாரித்து விற்கின்றனர். ஆனால், சில நிறுவனங்களில் இந்த வேதிப் பொருள் இருக்கவே இருக்கிறது. எனவே, குழந்தைகளுக்கு வாங்கும் பவுடர்களில், ‘டால்க்’ இல்லை என்பதை உறுதி செய்துகொள்ளுங்கள்.

டயாக்ஸேன் (1,4-dioxane)

57% சதவிகித பேபி சோப்களில் 1,4-dioxane எனும் கெமிக்கல் இருப்பதாக ‘என்விரான்மென்டல் வொர்க்கிங் குரூப்’ சொல்கிறது. எத்திலின் ஆக்சைடு என்பதும் ஒரு கெமிக்கல்தான். இது புற்றுநோய் காரணியாகச் செயல்படக்கூடியது. குழந்தைக்கான பொருட்களை வாங்கும் முன், லேபிளில் ‘eth’ எனும் எழுத்துகள் இருந்தால், அதில் இந்த 1,4-dioxane எனும் கெமிக்கல் கலக்கப்பட்டிருக்கிறது என அர்த்தம். எனவே, இந்த கெமிக்கல்கள் கொண்ட பேபி பொருட்கள் வாங்குவதைத் தவிர்க்கலாம். பாலிஎத்திலின், பாலிஎத்திலின் க்ளைகால், சோடியம் லாரத் சல்பேட், செட்டரேத், ஒலேத், ஆக்ஸினால்  போன்ற கெமிக்கல்கள் லேபிளில் இருந்தால், அந்தப் பொருட்களை வாங்க வேண்டாம்.

ப்ரொப்லீன் கிளைகால் (Propylene glycol)


சருமத்தில் ஊடுருவி செல்லக்கூடிய கெமிக்கல் இது. சருமம், இதனை உறிஞ்சிக்கொள்ளும். இதுவும் புற்றுநோய் காரணியாகச் செயல்படக்கூடியது. சிலவகை பேபி தயாரிப்புகளில் இந்த கெமிக்கல் சேர்க்கப்படுகிறது. முக்கியமாக, பேபி வைப்ஸ் தயாரிப்பதில் இந்த கெமிக்கல் சேர்க்கப்படுகிறது. இது பாதுகாப்பானது அல்ல. குழந்தையின் பொருட்களை வாங்கும் முன், லேபிளில் பாலி எத்திலின் கிளைக்கால் (PEG), பாலிப்ரோபைலின் க்ளைக்கால் ஆகியவை இல்லாமல் இருப்பதாகப் பார்த்து வாங்குங்கள்.

மினரல் எண்ணெய் (Mineral oil)

மினரல் எண்ணெயும் அதிக வாசனையும் கலந்தே, குழந்தைகளுக்கான எண்ணெய் தயாரிக்கப்படுகிறது. பெட்ரோலியம் தயாரிப்புகளில் கிடைக்கக்கூடிய ஒரு பொருள்தான் ‘மினரல் எண்ணெய்’. தோலுக்கு கவர் போல செயல்படும். சருமத்தின் நச்சுக்களை வெளியேறவிடாமல் தடுக்கும். எனவே மினரல் எண்ணெய் உள்ள பேபி எண்ணெயைத் தவிர்க்கவும். இயற்கையான பாதாம் எண்ணெய், ஆலிவ் எண்ணெய், தேங்காய் எண்ணெய் போன்றவற்றை பயன்படுத்தி உங்கள் குழந்தைக்கு நீங்கள் மசாஜ் செய்துவிடலாம். நம்பகத்தன்மையான, தரமான பிராண்ட்களில் உள்ள பேபி எண்ணெய் பயன்படுத்தலாம்.

ட்ரைக்ளோசன் (Triclosan)

ஆன்டிபாக்டீரியல்’ எனக் குறிப்பிட்டிருக்கும் பொருட்களில் இந்த ட்ரைக்ளோசன் கெமிக்கல் கலந்து இருக்கும். இதுவும் புற்றுநோய் காரணியாகச் செயல்படக்கூடியது. ஹார்மோன்களில் இயக்கத்தை மாற்றும். மோசமான பின்விளைவை ஏற்படுத்தக்கூடியது. குழந்தைகளைப் பாதுகாக்க, பாக்டீரியாவிலிருந்து தப்பிக்க என இதைச் சொல்வார்கள். ஆனால்,  இந்த கெமிக்கல் உள்ள பொருளை பயன்படுத்தினால், குழந்தைக்கு இயற்கையாக இருக்கும் நோய் எதிர்ப்பு தன்மையை சீர்குலைக்கும். குழந்தைகளுக்கு இருக்கின்ற அலர்ஜி தன்மையை அதிகரிக்கும். ஆன்டிபாக்டீரியல் என்று சொல்லக்கூடிய பொருட்கள், அதன் வேலைகளை சிறப்பாக செய்யாது. ஆன்டிபாக்டீரியல் சோப், பாடி வாஷ், ஹேண்ட் வாஷ் போன்றவற்றிலிருந்து தள்ளி இருப்பதே பாதுகாப்பானது.

பாராபென் (Paraben)

பாராபென் எனும் கெமிக்கல் அனைத்திலும் இருக்கிறது. சோப், பாடி வாஷ், ஷாம்பூ, மாய்ஸ்சரைசர், பேபி தயாரிப்புகள் போன்ற பலவற்றிலும் காணப்படுகிறது. நரம்பு மண்டலத்தைத் தாக்கும் கெமிக்கல் இது. இனப்பெருக்கத் திறனை குறைக்கும். ஹார்மோன் சுரப்புகளை மாற்றும். சருமத்துக்கு எரிச்சலை உண்டாக்கும் தன்மை கொண்டது. பாராபீன், பென்ஜாயிக் அமிலம், ப்ரோபைல் எஸ்டர் போன்ற கெமிக்கல்கள் உள்ள பொருட்களைத் தவிர்ப்பது நல்லது. குழந்தைகளுக்கான தயாரிப்புகளைத் தேர்ந்தெடுக்கும் முன் லேபிளை சரிபார்த்து வாங்குவது நல்லது. நல்ல தரமான பிராண்ட்களை வாங்கலாம். குழந்தைகளின் சருமத்துக்கு ஏற்ற வகையில் உள்ள தரமான பிராண்ட்களில் ஒன்று, ஜான்ஸன் அண்ட் ஜான்ஸன் தயாரிப்புகள். பேபி தயாரிப்புகளில், இது சிறந்த பிராண்ட் என்றும் சொல்லலாம். இந்த பிராண்டில் உள்ள பொருட்கள் குழந்தைகளுக்கு ஏற்றது.

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • 03-07-2020

    03-07-2020 இன்றைய சிறப்பு படங்கள்

  • petroLLL

    பெட்ரோல், டீசல் விலை உயர்வைக் கண்டித்து நாடு முழுவதும் காங்கிரஸ் போராட்டம்!!

  • pakisthN_11

    கராச்சி பங்குச்சந்தை அலுவலகத்தில் பயங்கரவாதிகள் தாக்குதல் : 6 பேர் பலி ; 4 தீவிரவாதிகள் சுட்டுக் கொலை!!!

  • mask_glovbeess1

    கடலுக்கு அடியில் குவியும் மாஸ்க், கையுறைகள் : கடல்வாழ் உயிரினங்களுக்கு கெடுதல் விளைவிக்கும் அபாயம்!!

  • 26-06-2020

    26-06-2020 இன்றைய சிறப்பு படங்கள்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்