SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

கொரோனா கொல்லாது... பயம்தான் கொல்லும்!

2020-03-18@ 15:38:02

நன்றி குங்குமம் டாக்டர்

* கொரோனா வைரஸ் 400-500 மைக்ரோ விட்டம் கொண்ட பெரிய அளவில் இருப்பதால், சாதாரண முகக்கவசமே போதுமானது. இதற்கென்று தனிப்பட்ட மாஸ்க்கெல்லாம் அணியத் தேவையில்லை. துணிகளின் மீது படியும் கொரோனா வைரஸ் 9 மணி நேரம் வரை உயிர்வாழக் கூடியது. துணிகளை துவைத்து உடுத்துவதும் வெயிலில் 2 மணிநேரம் வரை காயவைப்பதாலும் வைரஸை அழித்துவிடலாம்.

* கொரோனா வைரஸ் காற்றில் தங்கி விடுவதில்லை. அதனால் காற்றின் மூலம் பரவுவதில்லை. மாறாக தரையிலும் பொருட்களின் மேற்பரப்பிலும் தங்கிவிடுகிறது. சுத்தமாக இருக்க வேண்டும் என்று ஆலோசனை சொல்வது இதற்காகத்தான்.

* கடந்த காலங்களில் உலகை அச்சுறுத்திய பிற வைரஸ் காய்ச்சல்களுடன் ஒப்பிடும்போது கொரோனா வைரஸ் காய்ச்சல் கடுமையானது என்றாலும் கூட, உயிரைக் காப்பாற்ற முடியாதது அல்ல.

* ஒரு உலோகத்தின் மீது படியும் கொரோனா வைரஸ் 12 மணிநேரம் வரை உயிர்பெற்றிருக்கிறது. கைகளை அடிக்கடி அலம்புவதும், சாப்பிடுவதற்கு முன்பு சோப்பினால் கைகழுவுவதன் மூலமும் தற்காத்துக் கொள்ளலாம்.

* அரசு மருத்துவமனைகளில் தரமான மருத்துவம் அளிக்கப்படுவதால் இந்த நோய் தாக்கினாலும் அச்சப்படவோ, கவலைப்படவோ தேவையில்லை.
26-27 டிகிரி செல்சியஸ் வெப்பத்திற்கு கொரோனா வைரஸ் உயிரிழந்துவிடும் என்பதால் வெப்பம் மிகுந்த இடத்தில் அவற்றால் உயிர் வாழ முடியாது. உடலில் வெயில் படுவதும், வெந்நீர் குடிப்பதுமே நம்மை தற்காத்துக் கொள்ள உதவும்.

* தமிழக சுகாதாரத் துறை அமைச்சர் விஜயபாஸ்கர் விடுத்துள்ள அறிக்கையில், ‘இருமல், தும்மல், காய்ச்சல் மூச்சுத்திணறல் இருந்தால் உடனடியாக மருத்துவமனைக்குச் சென்று உரிய சிகிச்சை எடுத்துக் கொள்ள வேண்டும். அனைத்து அரசு மருத்துவமனைகளிலும் கொரோனா பிரிவு தொடங்கப்பட்டுள்ளது. அங்கு தேவையான அளவு மாஸ்க், பாதுகாப்பு உபகரணங்கள், மருந்து மாத்திரை இருப்பில் வைக்கப்பட்டுள்ளது’ என்று தெரிவித்துள்ளார்.

* தொண்டை கரகரப்பாக இருப்பதாக உணர்ந்தாலே, உப்புத் தண்ணீரில் வாய் கொப்பளித்துவிட்டால் கொரோனா வைரஸ் மூச்சுக்குழாய்க்குள் செல்வதை தடுத்துவிடலாம். கொரோனா வைரஸிலிருந்து நம்மை தற்காத்துக்கொள்ள இந்த வழிமுறைகளைப் பின்பற்றுவதே போதுமானது என்று யுனிசெஃப் பரிந்துரைக்கிறது. கூடிய வரை ஐஸ்க்ரீம், கூல்டிரிங்ஸ் போன்ற சில்லென்ற உணவுகளைத் தவிர்ப்பதும், ஃபிரிட்ஜில் வைத்த உணவை சுட வைத்து உண்பதும் நல்லது.

* கொரோனா வைரஸ் தாக்குதல் குறித்த மிகைப்படுத்தப்பட்ட தகவல்களாலும், வதந்திகளாலும் மக்களிடம் ஒருவித அச்சம் நிலவுகிறது. மக்களிடம் விழிப்புணர்வை ஏற்படுத்துவதன் மூலம் அச்சத்தை போக்க முடியும். இதில் எல்லோருக்குமே பங்கு இருக்கிறது.

* கொரோனா வதந்திகள் பற்றி பாரதப் பிரதமர் நரேந்திர மோடியும் அறிவுறுத்தியிருக்கிறார். ‘இதை சாப்பிட வேண்டாம், அதை செய்ய வேண்டாம் என்பது போன்ற தகவல்கள் பரவுகின்றன. பொதுமக்கள் இவற்றை நம்பாமல் மருத்துவர்களை அணுக வேண்டும்’ என்று கூறியிருக்கிறார். எனவே, பொதுமக்கள் அதிகாரப்பூர்வமான தகவல்களை மட்டுமே கவனத்தில் எடுத்துக் கொள்ள வேண்டும்.

* சீனாவில் கொரோனாவின் தாக்கம் பெருமளவில் குறைந்திருக்கிறது. இதன் எதிரொலியாக தற்காலிக மருத்துவமனைகள் மூடப்பட்டுள்ளன. இதுவும் உலக நாடுகளுக்கு நம்பிக்கையை உருவாக்கி இருக்கிறது.

* இப்போது நாம் செய்ய வேண்டியது நம்முடைய சுகாதாரத்தை உறுதிப்படுத்திக் கொள்வது ஒன்றுதான். கைகளைக் கழுவுவது, சுற்றுப்புறத்தைத் தூய்மையாக வைத்துக் கொள்வது என்று பல நல்ல நடைமுறைகள் தொடங்கியிருக்கின்றன. இந்த நல்ல பழக்கங்களை இனியும் தொடர கொரோனா நமக்கு உதவட்டும்!

தொகுப்பு: என்.ஹரிஹரன்

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
 • 03-07-2020

  03-07-2020 இன்றைய சிறப்பு படங்கள்

 • petroLLL

  பெட்ரோல், டீசல் விலை உயர்வைக் கண்டித்து நாடு முழுவதும் காங்கிரஸ் போராட்டம்!!

 • pakisthN_11

  கராச்சி பங்குச்சந்தை அலுவலகத்தில் பயங்கரவாதிகள் தாக்குதல் : 6 பேர் பலி ; 4 தீவிரவாதிகள் சுட்டுக் கொலை!!!

 • mask_glovbeess1

  கடலுக்கு அடியில் குவியும் மாஸ்க், கையுறைகள் : கடல்வாழ் உயிரினங்களுக்கு கெடுதல் விளைவிக்கும் அபாயம்!!

 • 26-06-2020

  26-06-2020 இன்றைய சிறப்பு படங்கள்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்