SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

எடையைக் குறைக்க ஜிம் உதவுமா?!

2020-02-24@ 16:43:48

நன்றி குங்குமம் டாக்டர்

புத்தாண்டு பிறந்து இரண்டாவது மாதத்தில் இருக்கிறோம். உடல் எடையை குறைப்பது ஒன்றே இந்த வருடத்திய லட்சியம் என பலரும் ஏதோ ஒரு ஜிம்மில் பலரும் மெம்பர்ஷிப் கட்டியிருப்பார்கள். எடையைக் குறைக்க உடற்பயிற்சி செய்தால் போதும் என்ற நம்பிக்கை பரவலாகவே உண்டு. உண்மையில் உடற்பயிற்சி நிலையங்கள் எடையைக் குறைக்க உதவுமா? அறிவியல் சொல்வது என்ன?! புரிந்துகொள்ள வேண்டிய முதல் விஷயம்...எடை குறைப்பு உங்களுக்கு சாத்தியமே... எனவே, நம்பிக்கையுடன் முயற்சியைத் தொடங்குங்கள். மனம் தளராமல் முன்னேறுங்கள். இரண்டாவது முக்கிய விஷயம்...

எடை குறைப்பில் உடற்பயிற்சியின் பங்கு வெறும் 20 சதவீதம் மட்டுமே. மீதி  80 சதவீத பங்கு நீங்கள் சாப்பிடும் உணவிலும், உடல்ரீதியான ஹார்மோன் உள்ளிட்ட கோளாறுகளிலும் இருக்கிறது என்பதையும்  தெரிந்து கொள்ளுங்கள். அப்படியே ஆர்வக் கோளாறில் ஜிம்மில் சேர்ந்து  தீவிரமாக உடற்பயிற்சி செய்ய ஆரம்பித்தாலும், மிகச் சில வாரங்களிலேயே  உங்களுக்கு போரடித்துவிடும். அதிலும் பெண்களுக்கு ஜிம்மில் செய்யும்  பயிற்சிகள் சலிப்பை ஏற்படுத்திவிடும். சரி... எடை குறைப்புக்கு என்னதான் தீர்வு?!

பொதுவாக அனைவரும் மேற்கொள்ளும் உடற்பயிற்சிகள் எல்லோருக்கும் பொருந்தாது. ஒவ்வொருவருக்கும் அவரவர் உடலின் மெட்டபாலிஸம், உடல் மற்றும் மனம் சார்ந்த பிரச்னைகள் போன்றவை உடல்பருமனுக்கு காரணமாகின்றன. ஒவ்வொருவரின் அடிப்படைப் பிரச்னைகளைக் கண்டறிந்து அதற்கேற்ற சிகிச்சைகள், ஊட்டச்சத்து உணவுகள், உடற்பயிற்சிகள் எடுத்துக் கொள்ளும்போது தானாக எடை குறைய ஆரம்பிக்கும். உண்ணுதல் கோளாறு (Eating Disorder) உள்ள சிலருக்கு பசி எடுத்துக் கொண்டே இருக்கும் இவர்களால் உணவு உட்கொள்வதை நிறுத்த முடியாது. மனப்பதற்றம் உள்ள சிலர் இனிப்புகள் அதிகம் சாப்பிடுவார்கள்.

இவர்கள் மனநல ஆலோசனை பெறுவதன் மூலம் தங்களுக்குள் பிரச்னை சரி செய்து உடல் எடையையும் குறைக்க முடியும். ஆதாரங்களை அடிப்படையாகக் கொண்ட உணவு வழிமுறைகள் மற்றும் பசிகளைக் கையாளும் திட்டங்களை பின்பற்றலாம். மாறாக, இவர்கள் ஜிம்மிற்கு சென்று உடற்பயிற்சி செய்வதால் எந்த பயனும் இல்லை. ரத்தசர்க்கரை அளவு, பாலிசிஸ்டிக் ஓவரி சிண்ட்ரோம் மற்றும் தைராய்டு அளவுகளை கட்டுப்படுத்துவதன் மூலமும் எடையை குறைக்க முடியும்.

மேலும் இன்றிருக்கும் கடுமையான வேலை நெருக்கடியில் ஒருவர் உடல் எடையை குறைக்கவும், அதிக கலோரிகளை எரிக்கவும், ஒவ்வொரு நாளும் தொடர்ந்து கடுமையாக உடற்பயிற்சி செய்வதென்பது சாத்தியமற்றது. இதற்கு உணவுமுறையை மாற்றுவது ஒன்றே எளிதான மற்றும் ஆரோக்கியமான வழி. அதற்காக உணவின் அளவை குறைப்பது தவறு. அதற்கு பதிலாக சரியான உணவை உட்கொள்ள வேண்டும். எடையை குறைக்க வேண்டும் என்பதற்காக இண்டர்நெட் தகவல்களை திரட்டியும், யூடியூப்பை பார்த்தும் அல்லது தகுதியற்ற ஜிம் பயிற்சியாளர்களின் வழிகாட்டுதல்படி உடற்பயிற்சிகள் செய்வது என்பது மேலும் சிக்கலை அதிகப்படுத்திவிடுமே தவிர எடை குறைய வாய்ப்பே இல்லை.

உடல்ரீதியாக எல்லோரும் ஒரே மாதிரியானவர்கள் அல்ல. எல்லோரும் ஒரே காரணத்திற்காக எடை அதிகரிப்பதில்லை. எடை இழப்புக்காக ஒவ்வொரு நபரும் தங்களின் உடற்பயிற்சி பழக்கத்தை ஆரம்பிப்பதற்கு தனது உடலைப்பற்றிய தனித்துவமான புரிதல் தேவை. ஒரு தகுதி வாய்ந்த மற்றும் அனுபவம் வாய்ந்த பயிற்சியாளர்களால் மட்டுமே ஒவ்வொருவருக்கும் அவரது உடல் தேவைக்கேற்ற பிரத்யேகமான பயிற்சிகளை கற்றுத்தர முடியும். அவரவருக்கென்று தனிப்பட்ட பயிற்சியாளர்களை நியமித்து அவர் மூலம் கற்றுக் கொள்வதே சிறந்தது. இப்படி தனிப்பயனாக்கப்பட்ட உடற்பயிற்சிகளை (Personalised exercises) செய்வதன் மூலம், உங்களது தனிப்பட்ட உடற்பயிற்சி முன்னேற்றத்தை மதிப்பிடவும், உங்களுக்கான சரியான முறை எது என கண்டுபிடிக்கவும் உதவும்.

எந்தவிதமான உடல் செயல்பாடும் பயனளிக்கும் என்றாலும், வெவ்வேறு விதமான உடல்செயல்பாடுகள் வெவ்வேறு விதமான பலன்களைத் தரலாம். உதாரணத்திற்கு யோகா பயிற்சி மூச்சு விடுவதையும், உடலின் நெகிழ்வுத்தன்மை மற்றும் உடல்வடிவத்தை முதன்மையாகக் கொண்டது. பில்லட்ஸ், தம்பிள்ஸ் போன்றவை தசைகளின் கட்டமைப்பிற்கு உதவக்கூடியவை. நடைப்பயிற்சி, ஜாக்கிங், ரன்னிங் பயிற்சிகளெல்லாம் கார்டியோ பயிற்சிகள். இவை இதயத்திற்கு நன்மை செய்பவை. சிலரின் மருத்துவ நிலைகளுக்கேற்ற பயிற்சிகளையும் செய்ய வேண்டும். இதயநோய், மூட்டுத் தேய்மானம் உள்ளவர்கள் மிதமான நடைப்பயிற்சி, யோகா பயிற்சி செய்தாலே போதுமானது. அவர்கள் கடுமையான பயிற்சிகள் செய்ய முடியாது. எனவே, உங்களது உடல்தேவைக்கேற்ற பயிற்சியைத் தேர்ந்தெடுத்து செய்வதுதான் சிறந்த பலனை பெற்றுத்தரும்.

அதேபோல் ஜிம்மிற்கு செல்வதற்கு சோம்பல் பட்டு திடீரென்று நிறுத்திவிட்டாலும், எடைகுறைப்பு முயற்சியில் தோல்வி ஏற்பட்டு, உடனடியாக உடல் எடை கூடிவிடும். ஜிம்மில் போரடிக்கும் உடற்பயிற்சிகளுக்கு பதில் நடனம், டிராம்போலைன் ஒர்க் அவுட், ஜூம்பா, போக்வா, பெலிடி போன்ற நடனங்கள், தியானம், யோகா, ஃபங்ஷனல் ட்ரெயினிங், நீருக்கடியில் செய்யும் பயிற்சிகள் போன்ற வேடிக்கை அடிப்படையிலான பயிற்சிகளை செய்வதன் மூலம் எடை இழப்பில் வெற்றி பெற முடியும். இது மட்டுமல்ல; மூளையில் மகிழ்ச்சிக்குக் காரணமான ஹார்மோன்களை சுரக்கச் செய்வதில் உடற்பயிற்சி பெரும் பங்கு வகிக்கிறது என்பதற்கான ஆதாரங்கள் வலுப்பெற்று வரும் சூழலில் மன அழுத்தத்தை குறைப்பதற்காகவும் ஏதேனும் உடற்பயிற்சிகள் செய்ய வேண்டும். தற்போது கார்டிசோலுடன் தொடர்புள்ள உடற்பயிற்சிகள் கவனம் பெற்று வருகின்றன.

மேலும் இவ்வகை உடற்பயிற்சிகள், கவலை மற்றும் மனச்சோர்வு உள்ளிட்ட மனநலப் பிரச்னைகளுக்கு உதவக்கூடும் என்றும் ஆய்வுகள் தெரிவிக்கின்றன. அந்த வகையில் இந்த 2020-ம் ஆண்டில் Mindful workouts மற்றும் Functional fitness போன்றவை நல்ல எடையை பராமரிப்பதை குறிக்கோளாக கொண்டுள்ள மக்களின் கவனத்தை பெறுவதாக இருக்கும் என்பதில் சந்தேகமில்லை. எல்லாவற்றையும் விட தகுதிவாய்ந்த பயிற்சியாளரின் தனிப்பட்ட மேற்பார்வையின் கீழ் பயிற்சி பெறுவதை முக்கியமாக கவனத்தில் கொள்ள வேண்டும்.

தொகுப்பு: உஷா நாராயணன்

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
 • madurai

  கொரோனா பரவலை தடுக்க நேற்று மக்கள் ஊரடங்கு: வெறிச்சோடிய மதுரை மாநகரம்

 • kurosiya

  கொரோனா தாக்குதலுக்கு மத்தியில் குரோஷியாவை உலுக்கிய கொடூர நிலநடுக்கம்...!இடிபாடுகளில் சிக்கி பலர் படுகாயம்!

 • medition2020

  சீனாவின் ஜாக் மா அறக்கட்டளை மூலம் நன்கொடையளித்த மில்லியன் கணக்கான மருத்துவ பொருட்கள், கிழக்கு ஆபிரிக்க நாடான எத்தியோப்பா விமான நிலையத்திற்கு வந்தடைந்தது!

 • in22222

  கொரோனா தாக்குதலை முன்னிட்டு இந்தியா முழுவதும் ஊரடங்கு உத்தரவு: மக்கள் நமாட்டம் இல்லாததால் வெறிச்சோடிய நகரங்கள்...! புகைப்படங்கள்

 • india2020

  கொரோனா வைரஸ் எதிரொலி: இந்தியாவில் ஊரடங்கு உத்தரவை தொடர்ந்து பணியில் ஈடுபட்டுள்ளவர்களுக்கு பொதுமக்கள் கைத்தட்டி நன்றி தெரிவித்தனர்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்