SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

விமானத்தில் செல்வதற்கு பயந்த பிரபல அரசியல்வாதி

2020-02-19@ 16:13:23

நன்றி குங்குமம் டாக்டர்

மருத்துவர்கள் எத்தனையோ நோயாளிகளை தினமும் சந்திக்கிறார்கள். பலவிதமான மனிதர்களையும், வினோதமான சூழல்களையும் கடந்து வருகிறார்கள். அதிலும் மனநலம் சார்ந்த மருத்துவர்களுக்கும், ஒரு மருத்துவமனையின் நிர்வாகப் பொறுப்பில் இருப்பவர்களுக்கும் இதுபோன்ற அனுபவங்கள் கணக்கில்லாமல் இருக்கும். மனநல மருத்துவரும், ராயப்பேட்டை அரசு மருத்துவமனையின் நிலைய அதிகாரியுமான ஆனந்த் பிரதாப்பிடம் அவரது அனுபவங்களைக் கேட்டோம்... தற்போது விதவிதமான மனநோய்கள் உருவாகிக் கொண்டு வருகின்றன. ஊடகங்கள், சினிமாக்களின் வீச்சு அதிகமாக இருப்பதால் பல மனநோய்களின் பெயர்களையும் அறிந்துகொள்கிறோம். குறிப்பாக ‘தெனாலி’ படத்தில் கமலஹாசன் ஏற்று நடித்த பயந்த சுபாவம் பாத்திரம் ரொம்பவும் பிரபலமாக இருக்கிறது. அதேபோல் பய உணர்ச்சி மனநிலை கொண்டவர்களையும் நிறைய இன்று பார்க்க முடிகிறது.  

இதுபோல் Anxiety Disorder கொண்டவர்களால் எதையும் செய்ய முடியாது. ஒருவிதமான பதற்றத்துடனேயே காணப்படுவார்கள். இந்த பதற்றக் கோளாறால் பாதிக்கப்பட்ட நபர்கள் புதிய இடங்களுக்கோ அல்லது பொது இடங்களுக்கோ சென்றால் யாரைப் பார்த்தாலும் பயந்த மனப்பான்மையுடன் இருப்பார்கள். அது மட்டுமில்லாமல், பேசவும் பயப்படுவார்கள். இந்த நிலையை, நாங்கள் பொது இடங்களைப் பார்த்து இயற்கைக்கு மீறிய பேரச்சம் கொள்ளுதல்(Agoraphobia) என சொல்வோம். இதுபோன்ற பாதிப்புடைய ஒருவர் என்னிடம் சிகிச்சைக்கு வந்தார். அவர் திருச்சியை சேர்ந்த பிரபலமான ஓர் அரசியல்வாதி. அவருக்கு எப்படியோ இந்த பயவுணர்ச்சி தொற்றிக் கொண்டது. இதன் காரணமாக பிறருடன் பழகுதல், மற்றவர்களைச் சந்தித்தல் போன்றவற்றை அறவே தவிர்த்து வந்தார்.

டெல்லியில் மற்ற அரசியல் தலைவர்களைப் பார்க்கப் போனாலும், விமானத்திலோ, ரயிலிலோ செல்ல மாட்டார். தனியாக கார் ஏற்பாடு பண்ணி கொண்டு, 2 உதவியாளர்களுடன், ஆந்திரா, உத்திரப்பிரதேசம், மத்தியப்பிரதேசம் என பல மாநிலங்களைக் கடந்துதான் டெல்லி சென்று தலைவர்களை சந்திப்பார். அவருடைய வசதிக்கும், பதவிக்கும், நட்சத்திர ஹோட்டல்களில் தங்கலாம்; சாப்பிடலாம். ஆனால், அவ்வாறு செய்ய மாட்டார். தன்னுடைய உதவியாளர்களை சாப்பாடு, டிபன் வாங்கி வரச் சொல்லி காரிலேயே சாப்பிட்டு விடுவார்.இதற்காக நிறைய பணமும் செலவழிக்க வேண்டியிருந்தது. இயற்கை உபாதைகளையும் செல்லும் வழியிலேயே முடித்துக் கொள்வார். பொது இடங்களுக்கு எங்கும் செல்லாமல் பயவுணர்ச்சியிலேயே வாழ்நாளைக் கழித்து வந்தார்.

நான்கைந்து ஆண்டு டாக்டர்கள் யாரையும் பார்க்காமலேயே கழித்துவிட்டார். அதற்கு பதிலாக கோயில்கள்  சென்று வந்தார். பல வழிகளில் முயற்சி செய்தும், அவர் குணமாகவில்லை. பின்னர் என்னிடம் சிகிச்சைக்காக வந்தார். அவரை, ஆழ்மன தூக்கத்துக்கு உட்படுத்தி, ஹிப்னாடிஸ சிகிச்சை அளித்தேன். அச்சிகிச்சை மூலமாக சிறு வயதில்தான் செய்த தவறுகள், பயவுணர்ச்சி ஆரம்பித்த விதம் என்பதையெல்லாம் பற்றி தெளிவாக சொன்னார். அதனடிப்படையில், அவர் மனதில் இருந்த பயம் மற்றும் குற்ற உணர்ச்சி எல்லாவற்றையும் ஆழ்மனத்தில் இருந்து அகற்றினேன். இதன் பின்னர் அவர் தைரியமான மனநிலைக்கு வந்தார். முழுவதும் குணமாகிவிட்ட அவர் தற்போது எங்கும் தனியாக சென்று வருகிறார். பயவுணர்ச்சி இல்லாத காரணத்தால் முதிர்ந்த மனப்பக்குவத்துடன் இருக்கிறார்.

அடுத்தது, இன்னொரு வித்தியாசமான கேஸ் ஒன்றைக் கையாண்டதையும் சொல்கிறேன். திருச்சியைச் சேர்ந்த இவர் என்ஜினியரிங் கல்லூரி மாணவி அவர். திடீரென ஒருநாள் தலைவிரி கோலத்துடன் ரூமில் இருந்த டேபிள், ஃபேன் டியூப் லைட் என அனைத்தையும் உடைக்க ஆரம்பித்தார். பிறகு, டைனிங் ஹால் சென்ற அப்பெண், அங்கிருந்த உணவுப்பொருட்களையும் கீழே கொட்டி அட்டகாசம் செய்ய ஆரம்பித்தார். வார்டனுக்கு இத்தகவல் போக, உடனே அவர், பக்கத்தில் இருந்த பொதுநல மருத்துவரிடம் அப்பெண்ணைப் பிறர் உதவியுடன் அழைத்துச் சென்றார். அந்த பொது மருத்துவரால் கண்ட்ரோல் பண்ண முடியவில்லை. அப்போதைக்கு ஏதோ மருந்து கொடுத்து அனுப்பி விட்டார். அப்பெண்ணின் பெற்றோர் கை, கால்களைக் கட்டி அவரைச் சென்னையில் சிகிச்சைக்காக என்னிடம் அழைத்து வந்தார்கள். அந்த இளம்பெண் Histical Disorder என்ற மனநோய்க்கு ஆட்பட்டு இருப்பதைக் கண்டுபிடித்தேன். உடனடியாக அவரை அறுவை சிகிச்சைக்கு கொண்டு சென்று, ஊசிபோட்டு, ஆழ்மனதில் உள்ளவற்றை வெளியே கொண்டு வந்தேன்.

‘ஆக்ரோஷம் அடைவதற்கு முதல் நாள் சக மாணவிகளுடன் ஊருக்கு வெளியே நடந்து வந்துகொண்டு இருந்தபோது, அங்கிருந்த செல்லியம்மன் சிலை மண் படிந்து அழுக்காக இருப்பதைப் பார்த்து அதை சுத்தம் செய்தேன். அதன் பிறகு ரூமுக்குச் சென்றேன். அப்போது செல்லியம்மன் என் உடலில் புகுந்துவிட்டார். அதனால் கத்தி ஆர்ப்பாட்டம் செய்தேன்’ என சொன்னாள். அப்பெண்ணுக்கு உரிய சிகிச்சை அளித்து, பின்பு அவரை குணப்படுத்தினேன். தற்போது அவர் நன்றாக உள்ளார். முன்பெல்லாம் இதுபோன்ற பிரச்னைகள் என்றால், உடனே, பூசாரி, மந்திரவாதி என செல்வார்கள். தற்போது நிலைமை மாறிவிட்டது. மனநலம் சார்ந்த நோய்கள் என்றால், தாமதிக்காமல் மருந்துவரிடம் வந்துவிடுகிறார்கள். இது நல்ல மாற்றம். மனநலக் கோளாறுகள் அதிகரித்து வரும் சூழலில் விழிப்புணர்வு ஏற்பட்டால் மட்டுமே குணமடைவது சாத்தியம்!

தொகுப்பு: விஜயகுமார்

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
 • madurai

  கொரோனா பரவலை தடுக்க நேற்று மக்கள் ஊரடங்கு: வெறிச்சோடிய மதுரை மாநகரம்

 • kurosiya

  கொரோனா தாக்குதலுக்கு மத்தியில் குரோஷியாவை உலுக்கிய கொடூர நிலநடுக்கம்...!இடிபாடுகளில் சிக்கி பலர் படுகாயம்!

 • medition2020

  சீனாவின் ஜாக் மா அறக்கட்டளை மூலம் நன்கொடையளித்த மில்லியன் கணக்கான மருத்துவ பொருட்கள், கிழக்கு ஆபிரிக்க நாடான எத்தியோப்பா விமான நிலையத்திற்கு வந்தடைந்தது!

 • in22222

  கொரோனா தாக்குதலை முன்னிட்டு இந்தியா முழுவதும் ஊரடங்கு உத்தரவு: மக்கள் நமாட்டம் இல்லாததால் வெறிச்சோடிய நகரங்கள்...! புகைப்படங்கள்

 • india2020

  கொரோனா வைரஸ் எதிரொலி: இந்தியாவில் ஊரடங்கு உத்தரவை தொடர்ந்து பணியில் ஈடுபட்டுள்ளவர்களுக்கு பொதுமக்கள் கைத்தட்டி நன்றி தெரிவித்தனர்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்