SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

இந்தியாவில் 7 பேரில் ஒருவருக்கு மனநோய்

2020-01-20@ 16:09:03

நன்றி குங்குமம் டாக்டர்

அதிர்ச்சி


இந்தியர்களில் 7 பேரில் ஒருவருக்கு மனநோய் பாதிப்பு இருப்பதாக லான்செட் மருத்துவ இதழில் வெளியான ஆய்வு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

லண்டனை தலைமையிடமாகக் கொண்டு வெளிவரும் இந்த மருத்துவ இதழில், இந்தியாவில் மாநில அளவில் மனநோய் தாக்கத்துக்கு ஆளாவது குறித்து கடந்த 1990-ம் ஆண்டு முதல் நடத்தப்பட்ட ஆய்வு முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளது. இந்த ஆய்வில் 2017-ல் மனநோயின் தாக்கம் இரட்டிப்பானது கண்டறியப்பட்டுள்ளது. இதில் பதற்றமும், மனக்கவலையும் பட்டியலில் முதலிடங்களை பிடித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

பதற்றம், மனக்கவலை, மனச்சிதைவு, பித்து பிடித்தல், அறிவு சார்ந்த வளர்ச்சி இல்லாமை, நடத்தைக் கோளாறு, மன இறுக்கம் ஆகியவையும் நோய் தாக்கத்துக்கு காரணமான மனநோய்களாக கண்டறியப்பட்டுள்ளன. இவற்றில் மனக்கவலை வயதானவர்களிடையே அதிகளவு நோய் தாக்கத்தை ஏற்படுத்துகிறது. இதுவே இந்தியாவில் அதிகளவு தற்கொலைக்கு தூண்டும் காரணியாகவும் உள்ளது.

2017-ம் ஆண்டு இந்தியாவில் 19.7 கோடி பேர் மனநோயினால் பாதிக்கப்பட்டுள்ளனர். அதாவது 7 பேரில் ஒருவருக்கு இந்த பாதிப்பு இருக்கிறது. இவர்களில் 4.6 கோடி பேர் மனக்கவலையினாலும், 4.5 கோடி பேர் பதற்றத்தினாலும் பாதிக்கப்பட்டுள்ளனர்.

மேலும் இதேபோல குழந்தைகளிடையே முறைகெட்ட நடத்தை, அறிவு சார்ந்த வளர்ச்சியின்மை, மன இறுக்கம் ஆகியவை அதிக நோய்த் தாக்கத்தை உண்டாக்குகிறது. அதிலும் குறிப்பாக வட இந்திய குழந்தைகள் மத்தியில் இவை பரவலாக காணப்படுகிறது. இது தற்போது இந்திய அளவில் குறைந்து வருகிறது என்று இந்த ஆய்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

- கௌதம்

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • madurai

    கொரோனா பரவலை தடுக்க நேற்று மக்கள் ஊரடங்கு: வெறிச்சோடிய மதுரை மாநகரம்

  • kurosiya

    கொரோனா தாக்குதலுக்கு மத்தியில் குரோஷியாவை உலுக்கிய கொடூர நிலநடுக்கம்...!இடிபாடுகளில் சிக்கி பலர் படுகாயம்!

  • medition2020

    சீனாவின் ஜாக் மா அறக்கட்டளை மூலம் நன்கொடையளித்த மில்லியன் கணக்கான மருத்துவ பொருட்கள், கிழக்கு ஆபிரிக்க நாடான எத்தியோப்பா விமான நிலையத்திற்கு வந்தடைந்தது!

  • in22222

    கொரோனா தாக்குதலை முன்னிட்டு இந்தியா முழுவதும் ஊரடங்கு உத்தரவு: மக்கள் நமாட்டம் இல்லாததால் வெறிச்சோடிய நகரங்கள்...! புகைப்படங்கள்

  • india2020

    கொரோனா வைரஸ் எதிரொலி: இந்தியாவில் ஊரடங்கு உத்தரவை தொடர்ந்து பணியில் ஈடுபட்டுள்ளவர்களுக்கு பொதுமக்கள் கைத்தட்டி நன்றி தெரிவித்தனர்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்