SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

தேங்காயின் மகத்துவம்

2019-12-10@ 13:07:35

நன்றி குங்குமம் தோழி

வாசகர் பகுதி  

நம்முடைய அன்றாட சமையலில் தேங்காய் மிகவும் பிரதான இடம் வகித்து வருகிறது. இட்லிக்கு சட்னியாக இருந்தாலும், பொரியலுக்கு அலங்கரிக்க, குருமா குழும்பு, காரக்குழம்பு என பல உணவுகளில் தேங்காய் சேர்க்காமல் இருக்க மாட்டோம்.தேங்காயை அப்படியே பயன்படுத்துவது மட்டும் இல்லாமல், அதன் எண்ணெயும் நமக்கு   பெரிய அங்கமாக உள்ளது. சருமத்தில் காயம் ஏற்பட்டால் அதன் தழும்பை போக்க தேங்காய் எண்ணெய் மிகவும் உகந்தது. இதனாலேயே சித்த மருத்துவத்தில் தேங்காயை மருத்துவத்தின் அடையாளச் சின்னமாக குறிப்பிடுகிறார்கள். தேங்காயில் பல்வேறு மருத்துவக் குணங்கள் அடங்கியுள்ளன.

* புரதச்சத்து, மாவுச்சத்து, கால்சியம், பாஸ்பரஸ், இரும்பு உட்பட தாதுப் பொருட்கள், வைட்டமின் சி, அனைத்து வகை பி காம்ப்ளக்ஸ் சத்துக்கள், நார்ச்சத்து என உடல் இயக்கத்துக்குத் தேவைப்படும் அனைத்துச் சத்துகளும் தேங்காயில் உள்ளன.

* தேங்காய் எண்ணெய் சித்த மற்றும் ஆயுர்வேத மருத்துவத்தில் பல்வேறு மருந்துகளில் சேர்க்கப்படுகிறது.

* தேங்காய் எண்ணெய் கொண்டு சமைத்து வந்தால், நாம் சாப்பிடும் உணவு எளிதில் ஜீரணமாகும்.

* சருமத்தில் ஏற்பட்ட தீப்புண்கள் விரைவில் குணமாக தேங்காய் எண்ணை தடவி வரலாம். தழும்பு ஏற்பட்டது தெரியாமல் மறைந்து
விடும்.

* கூந்தல் வளர்ச்சிக்கு தேங்காய் எண்ணெய் சிறந்த டானிக்.

* தேமல், படை, சிரங்கு போன்ற நோய்களுக்குத் தயாரிக்கப்படும் மருந்துகளில் பெருமளவு தேங்காய் எண்ணெய் சேர்க்கப்படுகிறது.

* தேங்காய் எண்ணெய் தயாரிக்கும்போது கிடைக்கும் புண்ணாக்கோடு கருஞ்சீரகத்தையும் சேர்த்து தோல் நோய்களுக்கான மருந்துகள் தயாரிக்கப்படுகின்றன. தேங்காய் சிரட்டையில் (வெளிப்புற ஓடு) இருந்து தயாரிக்கப்படும் ஒருவித எண்ணெய் தோல் வியாதிகளைக் குணப்படுத்த உதவுகிறது.

* தேங்காய்ப்பால் நஞ்சு முறிவாகப் பயன்படுத்தப்படுகிறது. சேராங் கொட்டை நஞ்சு, பாதரச நஞ்சு போன்றவற்றுக்குத் தேங்காய்ப்பால் உகந்தது.

* குழந்தைகளுக்குத் தேவையான எல்லாச் சத்துகளும் தேங்காய்ப்பாலில் உள்ளன. தேங்காய்ப்பாலில் கசகசா, பால், தேன் கலந்து கொடுத்தால் வறட்டு இருமல் மட்டுப்படும்.

* பெரு வயிறுக்காரர்களுக்கு (வயிற்றில் நீர் கோர்த்தல்) இளநீர் சாப்பிட்டால் அந்த பிரச்னை குணமாகும்.

* தேங்காய்ப்பாலை விளக்கெண்ணெயில் கலந்து கொடுத்தால் வயிற்றில் உள்ள புழுக்களை அப்புறப்படுத்தும்.

* தேங்காய்ப்பாலில் காரத்தன்மை உள்ளதால், அதிக அமிலம் காரணமாக ஏற்படும் வயிற்றுப் புண்களுக்கு தேங்காய்ப்பால் மிகவும் சிறந்தது.

* உடலுக்குத் தேவையான அமினோ அமிலங்கள் தேங்காயில் உள்ளன. இவை உடலின் வளர்ச்சிதை மாற்றத்துக்குப் பெரிதும் உதவுகிறது.

- கவிதா பாலாஜி கணேஷ், சிதம்பரம்

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
 • 29-01-2020

  29-01-2020 இன்றைய சிறப்பு படங்கள்

 • coronaa_chinnnaa1

  ஆள் நடமாட்டமின்றி பேய் நகரமாக மாறிய சீன மாகாணம் : கொரோனோ வைரஸால் மக்களின் பயத்தை காட்டும் காட்சிகள்

 • chinnaa_hospiitt1

  25,000 சதுர மீட்டர்.. 1000 படுக்கைகள்.. கொரோனா வைரஸுக்காக 6 நாள்களில் தயாராகும் சிறப்பு மருத்துவமனை : அவசரகதியில் சீன அரசு

 • vinveli_sathanaiiii1

  விண்வெளியில் உள்ள சர்வதேச விண்வெளி நிலையத்தில் முதல் முறையாக குக்கீஸ் தயாரித்து சாதனை

 • landlide_floodd_11

  பிரேசிலில் வரலாறு காணாத மழை : வெள்ளம், நிலச்சரிவில் சிக்கி 47 பேர் பலி ; 58 நகரங்களில் இருந்து 20 ஆயிரம் மக்கள் வெளியேற்றம்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்