SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

இதய கோளாறுகளை தவிர்க்கும் பூசணி விதை

2019-11-28@ 11:25:17

நன்றி குங்குமம் தோழி

* பூசணி விதைகளில் ஆன்டி ஆக்ஸிடன்ட் அதிகம்உள்ளது.

* இதில் புரதம், இரும்பு, மாங்கனீசு, நார்ச்சத்து, பொட்டாசியம், பாஸ்பரஸ், ஃபோலேட், வைட்டமின் பி2, வைட்டமின் கே, ஒமேகா 3 மற்றும் 6 கொழுப்பு அமிலங்கள் உள்ளிட்ட ஏராளமான சத்துக்கள் நிறைந்து உள்ளன.

* இதயக்கோளாறு இருப்பவர்கள் தினமும் பூசணி விதை சாப்பிடுவதன் மூலம் இதய ஆரோக்கியத்தை மேம்படுத்தலாம்.

* பூசணி விதையினை சாப்பிடுவதால், ரத்த அழுத்தம் சீராகும், கெட்ட கொழுப்பும் கரையும்.

* கல்லீரலைப் பாதுகாப்பதிலும் பூசணி விதை முக்கிய பங்காற்றுகிறது.

* சர்க்கரை நோயாளிகள் தினமும் இரண்டு டீஸ்பூன் பூசணி விதைகளைச் சாப்பிட்டு வரலாம்.

* பூசணி விதையிலிருக்கும் ட்ரிப்டோபன் என்கிற அமினோ அமிலம் ஆழ்ந்த உறக்கத்துக்கு உத்தரவாதம் தருகிறது.

* வெள்ளைப்படுதல் மற்றும் மாதவிடாய் கோளாறுகளால் அவதிப்படும் பெண்கள் தினமும் பூசணி விதைகளை நெய்யில் வறுத்துச் சாப்பிட்டால், பலன் கிடைக்கும்.

* பூசணி விதைகளைப் பொடியாக்கி, பாலில் கலந்து குடித்தால் உடல் சூடு குறையும்.

* இதை ஆண்கள் சாப்பிடுவதால் உயிரணுக்களின் எண்ணிக்கை அதிகரிக்கும்.

தொகுப்பு: இல.வள்ளிமயில், மதுரை.

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • 03-07-2020

    03-07-2020 இன்றைய சிறப்பு படங்கள்

  • petroLLL

    பெட்ரோல், டீசல் விலை உயர்வைக் கண்டித்து நாடு முழுவதும் காங்கிரஸ் போராட்டம்!!

  • pakisthN_11

    கராச்சி பங்குச்சந்தை அலுவலகத்தில் பயங்கரவாதிகள் தாக்குதல் : 6 பேர் பலி ; 4 தீவிரவாதிகள் சுட்டுக் கொலை!!!

  • mask_glovbeess1

    கடலுக்கு அடியில் குவியும் மாஸ்க், கையுறைகள் : கடல்வாழ் உயிரினங்களுக்கு கெடுதல் விளைவிக்கும் அபாயம்!!

  • 26-06-2020

    26-06-2020 இன்றைய சிறப்பு படங்கள்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்