SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

நம் வயிற்றுக்குள் வேறொரு உலகம்!

2019-11-27@ 11:47:25

நம்முடைய வயிற்றுக்குள் பலவகையான குடல் புழுக்கள் வசிக்கின்றன. நாம் உண்ணும் உணவின் வழியாக உடலுக்குள் நுழைந்து அங்கேயே ஒட்டுண்ணியாக வாழும் இந்தப் புழுக்களால் நம் உடலின் நோய் எதிர்ப்பு சக்தி மிகவும் குறைகிறது. பெரியவர்களைவிடவும் ஆறு வயதுக்குட்பட்ட வளரும் குழந்தைகள் உடலில் இந்தப் புழுக்கள் தீவிரமான பாதிப்புகளை ஏற்படுத்தும். ஆறு மாதங்களுக்கு ஒருமுறை பூச்சி நீக்க மருந்து கொடுத்து அவற்றை அழிக்க வேண்டியது அவசியம். இது இல்லாமல் உணவு மூலமாகவே வயிற்றில் உள்ள புழுக்களை அழிப்பதோடு அவற்றை மீண்டும் உற்பத்தியாகாமலும் தடுக்க இயலும்.

* தினமும் காலையில் வெறும் வயிற்றில் இரண்டு அல்லது மூன்று கேரட் சாப்பிட்டு வந்தால், வயிற்றில் உள்ள புழுக்கள் அழிவதோடு, மீண்டும் உருவாகாமலும் தவிர்க்கப்படும்.

* பப்பாளி விதைகள் குடல் புழுக்களை அழிப்பதில் முக்கியப் பங்காற்றுபவை. இவற்றை வெயிலில் உலர்த்தி, நன்கு பொடி செய்துகொள்ள வேண்டும். இதனை பெரியவர்களாய் இருந்தால் ஒரு ஸ்பூனும் குழந்தைகள் அரை ஸ்பூனும் சாப்பிட வயிற்றில் உள்ள புழுக்கள் அழியும்.

* தினமும் காலையில் ஒரு டம்ளர் புதினா சாற்றில் அரை எலுமிச்சைப் பழத்தைப் பிழிந்து குடித்துவந்தாலும் புழுக்கள் அழியும்.

* அரைத்த தேங்காய்ச்சாறு, தேங்காய் தண்ணீர், இளநீர் ஆகியவையும் புழுக்களைக் கட்டுப்படுத்தும்.

* மாதுளை இலைகளை நன்கு கொழுந்தாகப் பறித்து அப்படியே மெல்லலாம். மாதுளம் பழச்சாற்றுக்கும் புழுக்கள் கட்டுப்படும்.

* வயிற்றில் புழு குடையும்போது ஒரே ஒரு கிராம்பை வாயில் இட்டு மென்றால் புழு மட்டும் அல்ல, அதன் முட்டையும் சேர்ந்தே அழிந்துபோகும்.

* தயிர், மோர் ஆகியவற்றில் புரோபயாடிக் சத்துகள் உள்ளன. இதில் உள்ள நல்ல பாக்டீரியாக்கள் குடலை சிறப்பாகப் பராமரித்து குடல் புழுக்கள் உருவாவதைத் தடுக்கின்றன. எனவே, தினசரி உணவில் தயிர், மோர் சேர்த்து வந்தால் குடல் புழுக்கள் அண்டாது.

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
 • 14-12-2019

  14-12-2019 இன்றைய சிறப்பு படங்கள்

 • po13

  கிறிஸ்துமஸ் கொண்டாட்டத்தை முன்னிட்டு வண்ணமயமான ஒளிவிளக்குகளால் அலங்கரிக்கப்பட்ட போலந்து: ஜொலிக்கும் புகைப்படம்

 • wagle_hunttt

  கஜகஸ்தானில் பாரம்பரிய போட்டி : கழுகுடன் வேட்டைக்கு செல்லும் கசாக் மக்கள்

 • modi13

  நாடாளுமன்றம் மீது தாக்குதல் நடத்தப்பட்டதின் 18ம் ஆண்டு நினைவு நாள்: உயிரிழந்த வீரர்களின் படங்களுக்கு பிரதமர் மோடி உள்ளிட்டோர் மலர்தூவி மரியாதை

 • 3dhmes_111

  3டி பிரின்டர் மூலம் அச்சிடப்பட்ட உலகின் முதல் வீடு ; மெக்சிக்கோவில் பயன்பாட்டுக்கு வந்தது

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்