SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

உணவைப் பார்த்தே எடையைக் குறைக்கலாம்!

2019-10-30@ 17:34:51

நன்றி குங்குமம்

இன்று உடல் பருமன் பெரும் பிரச்னையாக உருவெடுத்துள்ளது. அதனால் உடலை கட்டுக்கோப்பாக வைத்துக்கொள்ள பலரும் பல ஆயிரங்களை செலவு செய்கின்றனர். ‘எங்களிடம் வாருங்கள். மூன்றே மாதத்தில் நீங்கள் ஸ்லிம்மாக ஆகிவிடலாம்...’ என்று தெருவுக்குத் தெரு கூப்பாடு போடுகின்ற அளவுக்கு ஹெல்த்கேர் நிறுவனங்களும் பெருகிவிட்டன.

உடல் எடையைக் குறைப்பதற்காக டயட், ரன்னிங், நடைப்பயிற்சி, ஜிம், விளையாட்டு, யோகா என ஏராளமான வழிமுறைகளை மாதக் கணக்கில் கடைப்பிடிக்கிறோம். இதற்காக தினமும் சில மணி நேரங்களை ஒதுக்குகிறோம்.அத்துடன் எடை குறைப்புக்காக நாம் செய்யும் ஒவ்வொன்றையும் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராமில் பதிவிட்டு லைக்குகளை அள்ளுகிறோம்.

ஆனாலும் சிலரைத் தவிர மற்றவர்களுக்கு சரியான ரிசல்ட் கிடைப்பதில்லை. இந்நிலையில், ‘‘உணவைப் பார்க்கும் விதத்தை மாற்றுங்கள். உங்களால் அதிகமாக சாப்பிட முடியும். அதே நேரத்தில் உங்களின் எடையும் குறையும்...’’ என்று அடித்துச் சொல்கிறது இங்கிலாந்தில் செய்யப்பட்ட சமீபத்திய ஆய்வு ஒன்று. இந்த ஆய்வை மேற்கொண்ட ‘அய்ன் ட்ரீ’ மருத்துவமனை 500 பேரிடம் உணவு குறித்த சர்வேவை எடுத்திருக்கிறது.

அதென்ன உணவைப் பார்க்கும் விதம்?

உணவுக்கும் மனதுக்கும் நெருங்கிய தொடர்புள்ளது. நவீன வாழ்க்கையின் பரபரப்பில் அவசர அவசரமாக ஒரு கடமையை நிறைவேற்றுவதைப் போல சாப்பிடுகிறோம். சாப்பிடும் நேரத்தில் கூட மனதை எங்கேயோ அலையவிட்டு பதற்றத்துடன் இருக்கிறோம் அல்லது ஸ்மார்ட்போனைப் பார்த்துக்கொண்டே உணவை உள்ளே தள்ளுகிறோம்.

பசிக்கவில்லை அல்லது உணவு பிடிக்கவில்லை என்றாலும் கூட நேரம் தவறாமல் சாப்பிட வேண்டும் என்பது எழுதப்படாத ஒரு விதியாகவே ஆகிவிட்டது. முக்கியமாக சுவையானதை தேடித்தேடி சாப்பிடுகிறோம். அது உடலுக்கு ஆரோக்கியமானதா என்று கூட பார்ப்பதில்லை.

முதலில் இந்தப் பழக்கத்தை மாற்றுங்கள். தியானத்தில் ஈடுபடுவதைப் போல முழு மனதையும் செலுத்தி உணவை உண்ணுங்கள். ஆரோக்கியமான உணவை தேடிப்பிடித்து, பசிக்கும்போது மட்டும் சாப்பிடுங்கள். உடல் கட்டுக்கோப்பாக, ஆரோக்கியமாக இருக்கும் என்கிறார்கள்!

தொகுப்பு: த.சக்திவேல்

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
 • PopeFrancisInThailand

  முதல் முறையாக தாய்லாந்துக்கு பயணம் மேற்கொண்டுள்ள போப் பிரான்சிஸ்: பாங்காக்கில் நடைபெற்ற கூட்டுப் பிரார்த்தனையில் உரை

 • 130eng_11

  இங்கிலாந்தில் 130 ஆண்டுகால ஆட்டோமொபைல் வரலாற்றை பறைசாற்றும் கண்காட்சி!!

 • plastic22

  பிரான்ஸில் பிளாஸ்டிக் கழிவுகளை கொண்டு அமைக்கப்பட்ட செயற்கை தீவு: சுற்றுச்சூழலை பாதுகாக்க புதிய முயற்சி

 • pink_kolkatta11

  இந்திய வரலாற்றில் முதல் முறையாக பகல் - இரவு டெஸ்ட் போட்டி : பிங்க் நிறத்தில் ஜொலிக்கும் கொல்கத்தா நகரம்

 • panta22

  சர்வதேச பாண்டா அமைப்பால் தத்தெடுக்கப்பட்ட பழுப்பு நிற பாண்டா: புகைப்படங்கள்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்